எல்லாவற்றையும் விட்டுவிடுதல் Tempe, Arizona, USA 62-0123 1நீங்கள் அமரலாம். உங்கள் எல்லாருக்கும் மாலை வணக்கம் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். இன்றிரவு இங்கிருப்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்றாகும். இங்கே இந்த அருமையான புதிய சபையில் இருந்து கர்த்தரை தொழுது கொள்வது மிகவும் உயர்ந்த சிலாக்கியமாக நான் கருதுகிறேன். இங்கே வந்து சிறிது நேரத்திற்கு மக்களுடன் ஐக்கியம் கொண்டு, ஆசீர்வாதங்களை பெற்று மகிழும்படிக்கான இந்த தருணத்தை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். மக்களாகிய உங்களுக்கு ஆசீர்வாதமாக நாங்கள் இருப்போம் என்று நம்புகிறோம். இந்த வாரமானது இப்பொழுது கடந்து செல்ல ஆரம்பிக்கையில் வருகின்ற வியாழன் முதல் கன்வென்ஷன் கூட்டமானது ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்பதும் எங்களுக்குத் தெரியும். வியாழன் இரவு ஒரு மகத்தான எதிர்பாராத மகிழ்ச்சி நமக்கு உண்டு என்று சகோதரன் வில்லியம்ஸ் மூலமாக இன்று மதியம் எனக்குக் கூறப்பட்டது. புதன் இரவு சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் நம்முடன் இருந்து பேசவிருக்கின்றார். அது நம்மெல்லோருக்கும் நிச்சயமாக மிக மகத்தான எதிர்பாராத மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் சகோதரன் ஓரல் நிச்சயமாக ஆற்றல் வாய்ந்த ஊக்கத்துடன் பிரசங்கிக்கும் பிரசங்கி ஆவார். அவரை பார்த்து சந்திப்பதென்பது மிக அருமையான ஒன்றாகும், நானும் மறுபடியுமாக அவரை சந்தித்து அவர் கைகளைக் குலுக்குதல் அருமையானதாகும். 2ஆகவே கடந்த இரவு டெம்பியில் அசெம்பிளி ஆஃப்காட் சபையில் நாங்கள் இருந்தோம். அங்கு தான் இருந்தோம் என்று நான் நம்புகிறேன். ஆகவே - ஆகவே கடந்த இரவு டெம்பியில் நிச்சயமாக மிக அருமையான ஒரு தருணத்தை நாங்கள் கொண்டிருந்தோம். ஃபீனிக்ஸ் பகுதியில் நாங்கள் சென்ற ஒவ்வொரு சபையிலும் அருமையான தருணத்தைக் கொண்டிருந்தோம், டெம்பியில் கூட அருமையான தருணங்களைக் கொண்டிருந்தோம். இந்த காரியங்களை முழுவதுமாக எங்களால் விவரிக்க முடியாத அளவிற்கு அருமையானதாக இருந்தது, மிக அதிகமாக இவைகளை நாங்கள் உணர்ந்து பாராட்டுகிறோம். ஒவ்வொரு சபைக்கும் ஒரு இரவு வந்து மக்களிடமும் ஊழியக்கார சகோதரரிடமும் பேசுவதற்கான வாய்ப்பானது எனக்கு எப்போதாவது ஒரு முறை தான் கிடைக்கும். இந்த பலவிதமான ஸ்தாபன சபைகள், மற்றும் மக்கள் குழுக்கள் மற்றும் இந்த மக்களைக் குறித்த பாராட்டுகளைத் தெரிவிப்பதற்கு இது எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு சிறு தருணமாகும். ஏனென்றால், ஊழியக்களத்தில், வெளிநாட்டு ஊழியக்களங்களில் மற்றும் எல்லாவிடங்களிலும் அவர்கள் தான் மகத்தான விதத்தில் உதவி செய்து ஆதரிப்பவர்கள், ஆகவே இந்த விதமாகத்தான் நான் அவர்களைக் குறித்து நினைப்பதை பாராட்டுகளாக தெரிவிக்க எனக்கு சிறிய சந்தர்ப்பங்களானது கிடைக்கின்றன. 3ஆகவே நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்திராத சபைகளுடன் சென்று வந்துள்ளோம், அது அந்த... சர்ச் ஆஃப் காட் சபை, அசெம்பிளீஸ் சபை மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் என்று நான் நம்புகிறேன் ; வெளி நாடுகளில் உள்ள சபைகள். சதுர சபை (Foursquare Church), (சதுர சபை என்பது எசேக்கியேல் 40 : 47, வெளி. - - 21 ஆகிய வசனங்களை ஆதாரமாகக் கொண்டு 1923ல் துவக்கப்பட்ட ஒன்றாகும் - தமிழாக்கியோன்), சர்ச் ஆஃப் காட் சபை, அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபை, இயேசு நாமம் சபை போன்றவை. மேலும், அங்கே வெளிநாடு ஊழியக்களங்களில் ஒரு கூட்டம் நடத்த நாங்கள் ஒன்றாக சேர்ந்து வருகையில் அந்த சபைகள் எல்லாம் ஒன்றானதாக காணப்படுகின்றன. ஆகவே, இங்கே நம் சொந்த இடத்தில் நம்மை வித்தியாசப்படுத்துகிற கருத்துகள் இருக்கலாம், ஆனால் யுத்தக்களம் என்று வரும் போது, பாருங்கள், அப்பொழுது எந்த ஒரு வித்தியாசம் இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? நான் ஒரு பெரிய குடும்பத்தில் வளர்க்கப் பட்டவனாவேன். நாங்கள் பத்து பிள்ளைகளாவோம். பையன்களாகிய நாங்கள் வீட்டின் பின்புறமாகச் சென்று ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வோம், ஓ, என்னே, ஒன்பது பையன்கள், ஒரு பெண், நாங்கள் மிக ஆக்கிரோஷமாக சண்டையிட்டுக்கொள்வோம். ஆனால் வீட்டிற்கு முன்புறத்தில் எங்களில் யாராவது ஒருவரை வெளியாள் ஒருவர் தாக்காமல் இருந்தால் நல்லதாகும், ஏனென்றால், எங்களில் ஒருவரை வெளியாள் தாக்க முனைந்தால், எல்லா பிரன்ஹாம்களும் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடி வருவார்கள். ஆதலால் சபையாகிய தேவனுடைய பிள்ளைகளிடமும் காரியமானது அவ்விதம் தான் என்று நான் நினைக்கின்றேன். 4இங்கே சில வருடங்களுக்கு முன்னர், நான் ஹூஸ்டனில் இருந்தேன், அங்கே ஒரு மகத்தான கூட்டத்தை நடத்தினோம். அங்கே சுமார்... அங்கே அந்தக்கூட்டத்தை நடத்தும்படிக்கு எனக்கு அநேகர் உதவி செய்து ஆதரித்தார்கள். சகோதரன் ரேமண்ட் ரிச்சி மற்றும் - மற்றும் அசெம்பிளீஸ் ஆஃப் காட் மற்றும் அந்த - மற்றும் இயேசு நாமம் சபை மக்கள், மற்றும் பலவித ஸ்தாபனத்தாரும்கூட. அப்பொழுது நாங்கள் ஒரு மகத்தான கூட்டத்தை நடத்தினோம். அங்கே மியூசிக் இல்லத்தில் நடத்தினோம் என்று நான் யூகிக்கின்றேன். நல்லது, அங்கே சுமார் எட்டாயிரம் பேர்களை எங்களால் உட்காரும்படிக்குச் செய்ய முடிந்தது என்று நான் யூகிக்கின்றேன். அங்கே ஒரு - பாப்டிஸ்ட் சபை ஊழியக்காரர் வேதாகமத்தின் பேரிலும், தெய்வீக சுகமளித்தலானது சரியான ஒன்றல்ல என்னும் விவாதம் ஒன்றைச் செய்து என்னை சவாலுக்கு அழைக்க விரும்பினார். சரி, அந்த விதமான காரியங்கள் அநேகவற்றை நான் கடந்து வந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கானோர் ஜெபிக்கும்படிக்காக அங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கையில் ஒரே ஒரு அவிசுவாசிக்காகவா ஒரு இரவு கூட்டத்தை இழக்க வேண்டும், உங்களுக்குப் புரிகின்றதா? அதன் பிறகு, நான் சவாலை சந்திக்க பயப்படுகிறேன் என்று அவர் செய்தித்தாள்களில் விளம்பரமாக பிரசுரித்தார். 5அப்பொழுது ஏறக்குறைய எண்பது வயதான சகோதரன் பாஸ்வர்த் “ஓ, நான் அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும்படிக்கு என்னை அனுமதியுங்கள்” என்றார். “இந்த மலையை நான் எடுத்துக்கொள்ளும்படிக்கு விடுங்கள்” என்று காலேப் கூறினது தான் என் நினைவிற்கு வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா. அப்பொழுது நான், “சகோதரன் பாஸ்வர்த், நீங்கள் தர்க்கிக்கும்படிக்கு எனக்கு - எனக்கு விருப்பமில்லை. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவரோ டொருவர் தர்க்கிப்பது கிறிஸ்துவுக்கு விருப்பமல்ல. அந்த மனிதன் ஒரு அவிசுவாசியாக இருப்பானென்றால், என்ன, அவர் ஒரு அவிசுவாசி மாத்திரமே, அவ்வளவு தான். அதைக்குறித்து செய்வதற்கென்று உங்களிடம் எதுவுமில்லை.'' என்று கூறினேன். அதற்கு அவர், “சரி, என்ன அது, அவர்கள் பத்திரிக்கைகளில் அதை விளம்பரம் செய்து விட்ட பிறகு அதை அப்படியே விட்டுவிட்டால், என்ன கூறுவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா, நாம் பேசுவது என்னவென்றே அறிந்திராத ஒரு சாதாரண குழு மாத்திரமே என்றும் அவர்கள் சற்று உணர்ச்சி வசப்பட்ட ஒரு குழுவினர் மாத்திரமே என்பார்கள். நான் அந்த சவாலை சந்திக்க நீங்கள் எனக்கு வாய்ப்பு அளித்தால் மாத்திரம் போதும்” என்று கூறினார். ஏறக்குறைய எண்பது வயது நிரம்பினவராக, அந்த வேதாகமத்தின் பேரில் மிகுந்த உறுதியான நம்பிக்கை கொண்டவராக அங்கே நின்றுக்கொண்டிருந்ததை நான் நோக்கிப் பார்த்தேன். நான், “சரி சகோதரன் பாஸ்வர்த், நீங்கள் பரபரப்பு கொண்டு தர்க்கிக்க மாட்டீர்கள் என்று எனக்கு உமது கையை என்னிடமாக நீட்டி வாக்குக்கொடுக்க வேண்டும்” என்று கூறினேன். அதற்கு அவர், “ஓ, நான் மட்டுமீறிய பரபரப்பான தர்க்கத்தை செய்யமாட்டேன்'' என்றார். உடனே பத்திரிக்கையாளர்களிடம் அதைக்கூற அவர் கீழே படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றார். பத்திரிக்கைகள் உடனே அந்த செய்தியானது பறந்தோடும் விதத்தில் எப்படி எழுதுவார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்த காரியம் தானே, பாருங்கள். “மத சம்பந்தமான பிரசங்க மயிர்த் தோல் (Ecclesiastical fur) பறக்கப்போகிறது” என்று பத்திரிக்கைகள் எழுதின, அதை நீங்கள் அறிவீர்கள். 6நாங்கள் ஒரு அரங்கத்தை, ஸ்டாம்பீட் கிரவுண்டை ஏற்பாடு செய்தோம். அந்த இரவு சுமார் முப்பதாயிரம் பேர் அங்கே குழுமியிருந்தனர். அப்பொழுது அங்கே நிகழ ஆரம்பித்தது, அந்த மக்கள் விமானங்களிலும், ரயில் வண்டிகளிலும் வந்து சேர்ந்தனர். நான் உங்களுக்குக் கூறுகிறேன் - அவர்கள் ஒற்றைத் திமில் (One-hump) ஒட்டகங்கள். இரண்டு திமில் ஒட்டகங்கள் மற்றும் மூன்று திமில் ஒட்டகங்கள் மேல் சவாரி செய்தனர், ஆனால் நம்மெல்லோருக்கும் இடம் இருக்கின்ற அந்த கிணற்றிலிருந்து தான் அவர்கள் எல்லோரும் குடித்தனர். அந்த அதே கிணறு தான். எல்லாமும் ஒன்று சேர்ந்திருந்தது. ஆகவே அது ..... இப்பொழுது அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கையில் அதிலிலிருந்து எனக்கு ஒரு மகத்தான ஆசீர்வாதம் தான் கிடைத்தது. நீங்கள் பாருங்கள், அந்த கடுஞ்சுமையானது உண்மையாக வரும்போது, நாமெல்லோரும் பொதுவாகக் கொண்டிருக்கின்ற ஒரு காரியமானது இருக்கின்றது. நாமெல்லோரும் பரிசுத்த ஆவியிலும் தெய்வீக சுகமளித்தலிலும் விசுவாசம் கொண்டிருந்தோம். ஆகவே ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கை அளிக்கும்படிக்கு வருகின்றனர். ஆகவே அந்த இரவு என்ன சம்பவித்தது என்றும், பரிசுத்த ஆவியானவர் எப்படி அந்த காரியத்தை தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்தார் என்பதும் நம்மெல்லோருக்கும் தெரியும். அப்பொழுது தான் கர்த்தருடைய தூதனானவர் இறங்கி வந்த சமயமாகும். அதனுடைய புகைப்படத்தை அவர்கள் எடுத்தனர். பிறகு - பிறகு அந்த புகைப்படமானது ஒரு உறுதிப்படுத்தலுக்காக வாஷிங்டன் டி. சிக்குச் சென்றது. அதற்கு பிறகு அந்த படத்தை பல சோதனைகள் மற்றும் காரியங்களுக்குள்ளாக உட்படுத்தினார்கள். FBI போலீசின் தலைவரான ஜார்ஜ். ஜே. லேசி அந்தப் படத்தைக்குறித்து அந்த - அந்த ஆவணத்தை எழுதினார். அவர் FBIயின் கைரேகை தொகுப்புகளின் துறையின் தலைவராவார். “புகைப்படத்தில் உள்ள அது முற்றிலுமாக இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றாகும். அந்த ஒளியானது புகைப்படக் கருவியின் லென்ஸ் கண்ணாடியின் மீது பட்டது. அது வெறும் மனோதத்துவம் அல்ல.'' என்றார். மேலும் அவர், ”நானும் கூட உங்கள் கூட்டங்கள் மனோதத்துவத்தினால் நடத்தப்படுகிறது என்று அடிக்கடிக் கூறியுள்ளேன். நீங்கள் மக்களின் மன எண்ணங்களை மனோத்தத்துவத்தினால் அறிகிறீர்கள் என்று நான் எண்ணினேன். ஆனால் திரு. பிரன்ஹாம், இந்த புகைப்படக் கருவியின் இயந்திரக்கண்ணாடியானது மனோத்தத்துவத்தை படம் பிடிக்காது. அந்த ஒளியானது லென்ஸ் கண்ணாடியின் மனோத்தத்துவத்தை படம்பிடிக்காது. அந்த ஒளியானது லென்ஸ் கண்ணாடியின் மீது பட்டது. இதோ அது இருக்கின்றது“ என்று அவர் கூறினார். 7ஆகவே, அது ஒரு புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அது எடுக்கப்பட்டுள்ளது. அதற்குப்பிறகும் அநேக முறைகள் அது எடுக்கப்பட்டுள்ளது. அதை அறிந்துள்ளதற்காக மிக்க நன்றியுள்ளவனாக மாத்திரமே நான் இருக்கின்றேன். அந்த புகைப்படத்தை இங்குள்ள அநேக மக்கள் பாத்திருக்கிறீர்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்.- ஆசி]. நான் யூகிப்பதென்னவென்றால், ஓ, உங்களில் அநேகர் அந்த புகைப்படத்தை வைத்துள்ளீர்கள். நீங்கள் வைத்துள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சியான ஒன்றாகும். இந்த கடைசி நாளிலே அந்த பெந்தெகொஸ்தே அசைவானது மிகவுமாக பேசப்பட்ட ஒன்றாக இருந்தாலும், ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், வேதாகம வரலாற்றை எடுத்துப்பார்க்கையில் ..... 8கடந்த இரண்டு வருடங்களாக, சபையின் வரலாற்றை முழுவதுமாக நான் பேசி முடித்துள்ளேன். கடைசி அப்போஸ்தலனாகிய யோவானின் மரணத்திலிருந்து, அந்த தீவின்.... அவன் பத்முதீவை விட்டுச் சென்று, வந்து புத்தகங்கள் எழுதுவதை முடித்துக் கொண்டு அவைகளை ஒன்றாகத் தொகுத்துக்கொண்டிருந்தான். அவன் அப்போஸ்தலர்கள் எழுதினவைகளை எடுத்து தொகுத்து ஒரு வேதாகமமாக செய்துக் கொண்டிருந்தபோது அவன் அங்கே போடப் பட்டான். அதனால்தான் அவன் பத்மு தீவிற்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரு இரவு பகல் முழுவதுமாக அவனை எண்ணையில் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட பிறகு அவர்கள் அவனைக் கொண்டு சென்று பத்மூ தீவில் போட்டனர். அப்பொழுது அவன் எல்லா புத்தகங்களையும் ஒன்றாகத் தொகுத்தான். அதனோடு கூட வேதாகமத்தின் கடைசி புத்தகமாக, வெளிப்படுத்தின விசேஷத்தை தேவன் அவனுக்கு அளித்தார். 9பிறகு திரும்ப வந்து, அங்கே யோவானுடைய வாழ்க்கையிலிருந்து நான் ஆரம்பித்தேன், அங்கிருந்து அவனுடைய ... அவனுடைய சீடர்களில் ஒருவரான பாலிகார்ப், இக்னேஷியஸ் மற்றும் அவர்கள் அநேகரைக் குறித்தும் அங்கிருந்து நேராக மார்டீன், ஐரினேயஸ், ஜஸ்டஸ் பரி. கொலம்பா, ஆகியோரைக் குறித்துப் பேசி, அதிலிருந்து நேராக இருண்ட காலங்களின் காரியங்களைப் பற்றிப் பேசி, அதிலிருந்து நேராகலூத்தரன் மற்றும் வெஸ்லி வரைக்குமாகப் பேசினேன். அதிலிருந்து நான் கண்டு கொண்டது என்னவென்றால், அப்போஸ்தலரின் காலம் முதற்கொண்டு, அங்கே பரிசுத்த ஆவியானவர் நடப்பித்த மகத்தான கிரியைகள் எல்லாவற்றைக் காட்டிலும், இங்கே இந்த கடைசி நாட்களில் கர்த்தருடைய இந்த கடைசி அசைவைக் காட்டிலும் இதற்கு மிகையான, மேம்பட்டிருக்கின்ற எந்த ஒரு அசைவும் இல்லை. நண்பர்களே, இதை நாம் தெளிவாக உணர்வதில்லை. தேவனை நிரூபிக்கின்ற காரியங்களானது இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக் கின்றனவே - சரியாக இப்பொழுது அதை நாம் வைத்திருக் கின்ற அந்த கிறிஸ்துவின் புகைப்படத்தைப் போன்று, அந்நாட்களில் அவ்விதமாக செய்வதற்கு அவர்களிடமாக கருவிகள் இல்லை. ஆனால் இப்போதோ மனிதன் ஏதாவதொன்றை செய்து சாதிக்க முயல்கின்றான், தேவனிடத்திலிருந்து எடுத்துப்போட விரும்புகிறான், ஆனால் தேவனோ மனிதன் சாதித்த அதே காரியத்தை எடுத்து அதைக் கொண்டு தம்மைத்தாமே நிரூபிக்கின்றார். ஆகவே, அது தாமே ... உங்களால் ஒருக்காலும் தேவனுக்கு முன்னால் செல்ல முடியாது, ஏனென்றால் அவர் சர்வ வல்லவர், எங்கும் பிரசன்னராயிருக்கின்ற சர்வவியாபி, முடிவற்றவர். அதிலிருந்து புறம்பே செல்வதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது. எனக்குத் தெரிந்த வரையில் செய்யக்கூடிய ஒரே வழி என்னவென்றால் நாம் தாழ்மையாக இருந்து அவரை சேவிப்பதே ஆகும். 10இதைச் செய்வது எனக்கு சற்று கூச்சமுண்டாக்குகிறது, இங்கே இந்த சபையின் மேய்ப்பனின் பெயரை நான் அறியாதிருக்கிறேன் என்றல்ல, எனக்கு .... (சகோதரன் கிரிஃபித் தன்னுடைய பெயரைக் கூறுகின்றார் - ஆசி). சகோதரன் கிரிஃபித், உங்களைச் சந்திப்பதில் நிச்சயம் நான் மகிழ்ச்சிக் கொள்கிறேன், சகோதரனே, இங்கே வருவதற்கான தருணத்திற்காகவும், இந்த ஐக்கியத்திற்காகவும், உங்களுடன் இருப்பதற்காகவும் .... சன்னிஸ்லோப்சில் சஞ்சரித்துத் கொண்டிருக்கிறவர்களை நோக்கி இவ்விதமாகத் தான் அழைக்க நாங்கள் எப்போதுமே விரும்புகிறோம், ஏனென்றால் நாம் இங்கே அந்நியரும் பரதேசிகளுமாக இருக்கின்றோம். இது நம்முடைய வீடல்ல என்று நாம் அறிக்கையிடுகின்றோம். நாம் ஆபிரகாமின் வித்துக்களாக இருந்து, “தேவன் தாமே கட்டி உண்டாக்கின அந்த நகரத்திற்கு காத்திருக்கிறோம்.'' இது ஒரு அழகான பிரதேசமாகும். நான் இதுவரை கண்டதிலேயே இதைப் போன்று இருக்கின்ற ஒரு இடமானது இருக்காது என்று தான் நான் நினைக்கின்றேன். உலகத்தில் இருக்கின்ற ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிற்கும் நான் பிரயாணித்துள்ளேன். ஐரோப்பா, இத்தாலி, ஆசியா, கிழக்கு நாடுகளில் எல்லா இடத்திலும் சரி, அரிசோனாவிலுள்ள பீனிக்ஸுக்கு ஒப்பாக எந்த ஒரு இடத்தை ஒப்பிட முடியாது. இப்பொழுது, அது சரியே, நான் கண்டதிலேயே அது மிகவும் அழகான இடமாகும். ஆனால், ஓ, அந்த மகத்தான ஆயிர வருட அரசாட்சியிலே அந்த இடத்திலே இது ஒரு தோட்டப்பாதை போன்று இருக்கும். ஆகவே நான் - நாம்... இது நம்முடைய வீடல்ல. நாம் இங்கே தற்காலிகமாக இருந்துக் கொண்டிருக்கின்றோம். நாம் ஒன்று கூடி இந்த ஐக்கியத்திற்காக கூடி வந்துள்ளோம். இங்கே இருப்பதிலும் மற்றும் தேவனுடைய சபையானது செழிப்பதையும், ஒரு புதிய கட்டடத்தையும் இன்னும் மற்றவற்றைக் காண்பதில் எனக்கு ஆசீர்வாதமாகும். தேவன் மக்களாகிய உங்களை எப்பொழுதும் ஆசீர்வதிப் பாராக! கிறிஸ்துவுக்கு உத்தமமாக இருங்கள். மேய்ப்பருக்கு உண்மையாக இருந்து ஒவ்வொருவரும் கைக்கோர்த்து ஒன்றாக செயல்படுங்கள், ஏனென்றால் கர்த்தருடைய வருகையானது மிக அருகாமையில் உள்ளது என்று நான் விசுவாசிக்கின்றேன். 11இப்பொழுது, நாம் அந்த வார்த்தையை அணுகுமுன்னர், சற்று நமது தலைகளை தாழ்த்தியிருக்கையில், அதன் ஆக்கியோனை ஜெபத்திலே அணுகுவோமாக. நம்முடைய தலைகளும் இருதயங்களும் தாழ்த்தப்பட்டு நாம் ஜெபிப்பதற்கு முன்னர், இங்கே ஜெபம் செய்யப்பட வேண்டுமென்று ஏதாவது விண்ணப்பம் இருக்குமானால், உங்களுடைய கரங்களை உயர்த்துவதன் மூலமாகத் தெரியப் படுத்தலாம், உங்களுக்கு ஏதாவது தேவையிருக்குமாயின், “கர்த்தராகிய இயேசுவே, என்னை நினைவுகூறுவீரா?” என்று உங்கள் இருதயத்தில் கூறுங்கள். கர்த்தர் ஒவ்வொரு கரத்தையும் காண்கிறார் என்று நான் நிச்சயமாகக் கூறுகிறேன். 12எங்கள் பரலோகப் பிதாவே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த மகத்தான சிருஷ்டிகரே, மகத்தான ஏலோஹீமே, எல் - ஷடாய், பெலத்தை அளிப்பவரே, போஷிப்பவரே. எல்லாவற்றுக்கும் போதுமானவராகிய உம்மை “பிதாவே'' என்று எங்களால் கூப்பிட முடிகின்றதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். உம்முடைய நேசகுமாரனின் மூலமாக, நாங்கள் தாமே உம்மிடத்தில் வந்து அவருடைய நாமத்தை உபயோகித்து எதைக் கேட்டாலும் அது கண்டிப்பாக அளிக்கப்பட அவர் பார்த்துக்கொள்வார், என்று அவர் தாமே எங்களிடமாக இவ்வாறு கூறியுள்ளார். நாங்கள் ஏதாவது தவறான ஒன்றை கேட்போமானால், அதற்கு பதிலளிக்கப்படுமென்ற விசுவாசத்தை எங்களால் கொண்டிருக்க முடியாது. ஆனால் இன்றிரவு எங்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பார்த்து தவறான ஒன்றை நாங்கள் கேட்காமல் ஆனால் சரியானதைத் தான் கேட்கிறோம் என்று கண்டு, நீர் தாமே எங்களுடைய எல்லா பாவங்களையும், தப்பிதங்களையும் மன்னிப்பீரானால், உண்மையாகவே கர்த்தாவே, அது தான் நாங்கள் கேட்கின்ற முதலாவது காரியமாகும். 13எங்கள் மேல் பாவத்தை கொண்டிருப்பவர்களாக உம்முடைய பிரசன்னத்திற்குள்ளாக நுழைய முயற்சி செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. ஆதலால் ஒவ்வொரு நாளும், தொல்லைகளும் மற்றும் காரியங்களும் எங்களை வளைந்து கொள்ளுகிறதை நாங்கள் அறிந்துள்ளோம். அது எங்கள் சொந்த யோசனைகளிலும் கூட அவைகள் கவனிக்கப்பட முடியாதவை களாக இருக்கும், ஆனால் நாங்கள் ஒரு பரிசுத்த தேவனைக் குறித்து நினைக்கும் போது, அவருடைய பார்வையில் தூதர்களும் அசுத்தமானவர்களாக உள்ளனரே, கர்த்தாவே அதைப்பார்க்கும் போது நாங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக வந்தாலொழிய உம்மிடமாக வருவதற்கு ஒரு சிறிய வாய்ப்பு கூட கிடையாது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்களுடைய தவறுகளை அறிக்கை செய்கையில் அவைகள் காணாமல் விடப்படுகின்றன. பிதாவே, தங்கள் கரங்களை உயர்த்தியுள்ள இந்த சபையோரை ஆசீர்வதிக்கும்படியாக இன்றிரவு நான் ஜெபிக்கின்றேன். உயர்த்தப்பட்ட கரங்களின் பின்னால் என்ன எண்ணம், வாஞ்சை, மற்றும் - மற்றும் கரங்கள் உயர்த்தப் பட்டதன் நோக்கம் என்னவென்பதை நீர் அறிவீர். நீர் தாமே அவர்களுடைய ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் பதில் அருள வேண்டுமாய் நான் ஜெபிக்கின்றேன். 14ஆகவே இப்பொழுது, பிதாவே, நாங்கள் இந்த சபைக்காக ஜெபிக்கின்றோம். இந்த இடத்தில் இருப்பதற்காக நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடையவர்களாக இருக்கின்றோம். ஆதி நாட்களிலே கிறிஸ்தவர்கள் மிகவுமாக வெறுக்கப்பட்டு அதினாலே அவர்களுக்கு ஒரு சபையும் கூட இல்லாதிருந்தது என்று நாங்கள் வாசிக்கின்றோம். அவர்கள் மிகவும் ஏழைகளாகவும், அப்படியான சபை ஒன்றைக் கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பு இருந்திருக்குமானால் அவர்களாலே ஒரு சபையைக் கட்டக்கூட வசதியில்லாதவர்களாகவும், அல்லது அப்படியான ஒன்றைக் காணவும் அல்லது அதைப் பெறவும் கூட அவர்களுக்கு வாய்ப்பு இல்லாதிருந்ததே. ஆனால் இப்பொழுது, இன்றைக்கு மகத்தான அருமையான கட்டடங்கள் எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றன, மிக தூய்மையாகவும் மக்கள் வந்து தேவனை ஆராதிக்கும்படிக்கு அவை இருக்கின்றன. இந்த சபைக்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். மக்கள் தங்கள் தசமபாகங்கள், காணிக்கைகள் மற்றும் மற்றும் நன்கொடைகளை அளித்து கர்த்தருக்கென்று வீட்டைக் கட்டியுள்ளனர். இது மக்களுடைய தியாகத்தாலானது. 15இப்பொழுதும் பிதாவே, தேவனே, நீர் தாமே இந்த சபையின் மேய்ப்பரையும் இதனுடைய டீக்கன்களையும், தர்மகர்த்தாக்களையும் மற்றும் இங்கு வருகின்ற ஒவ்வொரு அங்கத்தினரையும் ஆசீர்வதிக்குமாறு நான் ஜெபிக்கின்றேன். இது தாமே வளர்வதாக, மேலும் வளர்வதாக, மேலும் வளர்வதாக. மேலும் இந்த சபையிலிருந்து ஒரு பழமை பாணியிலான எழுப்புதலானது துவங்கி இந்த பள்ளத்தாக்கு முழுவதுமாக முழுவதுமாக வீசுவதாக. இந்த சபையிலிருந்து அடையாளங்களும் அற்புதங்களும், சுகமாக்குதலும் இரட்சிப்பும் புறப்பட்டு வரட்டும். இந்த சபை தாமே தேசம் முழுவதற்கும் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்வதாக. கர்த்தாவே இதை அருளும். மேலும், இந்த இடத்திலிருந்து அருமையான பிரசங்கிகள், அருமையான வாலிப மனிதர், தங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய அழைப்புடனே புறப்பட்டு எங்கெல்லாம் அவர்கள் அழைக்கப்படுகிறார்களோ அங்கே ஊழியங்களுக்குச் செல்வார்களாக. கர்த்தாவே, இதை அருளும். மேலும் இன்றிரவு நாங்கள் ஒன்றாக கூடியுள்ள வேளையில் பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து வார்த்தைக்குள்ளாகச் சென்று, இங்கு குழுமியிருக்கின்ற ஒவ்வொருவருடைய இருதயத்திற்குள்ளாகவும் வித்தை ஊன்றிப் புதைப்பாராக. நாங்கள் தாமே இரவும் பகலுமாக விசுவாசத்தினாலே அதற்கு நீர்ப்பாய்ச்சி, அது தாமே தேவனுடைய மகிமைக்கென மகத்தான மரங்களாக வளரும் வரைக்குமாக அப்படியாக நாங்கள் செய்வோமாக. கர்த்தாவே, இன்றிரவு இங்கே இருக்கின்ற ஒவ்வொரு வியாதிப்பட்ட நபரையும் சுகமாக்கும். இழக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு நபரையும் இரட்சியும். பின்மாற்றக்காரர் எல்லோரையும் கொண்டு வாரும்.ஏற்கெனவே நிரப்பப்பட்டுள்ளவரை புதுப்பித்து இன்னுமாக நிரப்பும். கர்த்தாவே, இதை அருளும், இதை உம்முடைய பிள்ளையாகிய (Child) இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்கின்றோம். ஆமென். 16இப்பொழுது, வழக்கம் போல நான் சிறிது தாமதமாக வந்துள்ளேன். நான் எதிர்ப்பார்த்ததற்கு அதிகமாக இன்றிரவு சற்று தூரமாக இருந்தது. ஆகவே இதோ நாம் கூடியுள்ளோம், நாளை இரவு வேறொரு இடத்தில் கூட்டம் இருக்கும். அதை ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்று நான் யூகிக்கின்றேன். ஆகவே இப்பொழுது, உங்களுடைய இடத்திலே நீங்கள் கூடுவதற்கென சபை இருக்குமானால், நாளை இரவிற்கு, நீங்கள் வரவேண்டாம். ஆனால் உங்களுக்கு சபை இல்லாதிருக்குமானால், நீங்கள் இங்கே இருக்கும்படிக்கு நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். என்னவாக இருந்தாலும் மக்கள் தங்கள் கடமையின் ஸ்தானத்திலே தரித்திருக்கவேண்டுமென்றே நாங்கள் எப்பொழுதும் விரும்புகிறோம். சபையானது திறக்கப் படுகையில் ஒவ்வொரு போர் வீரனும் தன்னுடைய அளிக்கப் பட்ட ஸ்தானத்திலும் தன்னுடைய இடத்திலும் இருக்க வேண்டியவனாக இருக்கின்றான். 17அந்த - அந்த வியாபாரிகள் சங்க கன்வென்ஷன் கூட்டத்திற்கு முன்னதாக நாங்கள் இங்கே வருகை தந்து ஒரு மகத்தான தருணத்தைக் கொண்டிருக்கின்றோம். நான் ஏற்கெனவே அறிவித்தபடியே, வியாழன் இரவு ஆராதனை ஆரம்பிக்க சகோதரன் ராபர்ட்ஸ் இங்கே வரவிருக்கின்றார். சகோதரன் ராபர்ட்ஸை சந்திப்பதில் நாங்கள் மிகவுமாக மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்போம். பிறகு, ஒருக்கால் வெள்ளியன்று சகோதரன் வெல்மர் கார்ட்னர் இங்கே இருக்கப்போகின்றார் என்று நான் நினைக்கின்றேன். அந்த இரவு அவர் பேசுகின்றாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. அங்கே சனிக்கிழமை காலை, காலை ஆகாரக் கூட்டத்தில் நான் இருக்கும்படிக்கு அது எனக்கென்று ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கின்றேன். அது தேவனுக்கு சித்தமாயிருக்குமானால், சனிக்கிழமை காலையில் ஒரு பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். அது தேவனுடைய சித்தமாயிருக்குமானால், “நான் சந்தித்ததிலேயே மிகவும் கீழ்த்தரமான மனிதன்” என்ற தலைப்பில் பேச விரும்புகிறேன். ஆகவே, அதற்கு - அதற்குப்பிறகு, ஞாயிறு மதியம் நான் மறுபடியுமாக பேசப்போகிறேன். ஆகவே நீங்கள் ... இப்பொழுது, சனிக்கிழமை காலை எனக்குத் தெரிந்த வரை சபை இருக்காது. எனக்குத் தெரிந்த வரையில் ஞாயிறு மதியமும் சபை இருக்காது. 18இப்பொழுது, நான் ஆரம்பிப்பதற்கு முன்னர், எனக்கு மறந்து விட்டது, நான் ...... இல்லை . மீதமுள்ள ஜெப அட்டைகளை பில்லி கொடுக்கப்போவதாக கூறினான் என்று நான் நம்புகிறேன். அது சரிதானே? இன்றிரவு ஜெப அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதா? சரி, அவைகளின் ஒரு பகுதியை அவன் கடந்த இரவு வேறொரு சபையில் அளித்தான், ஏனென்றால் நான் - நான் மக்களை நீண்ட நேரத்திற்கு வைத்திருந்ததனாலேயே. நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்யும் ஒருவனாவேன். ஆறு அல்லது எட்டு மணி நேரத்திற்கு, அந்த விதமாக நான் பிரசங்கிப்பேன். நான் தளர்ச்சியுறும் வரைக்குமாக பேசுவேன். இப்பொழுது நான் .... அதன் பாதி அளவிற்கு பிரசங்கம் செய்ய நான் முனையவில்லை . சுமார் .... ஆகவே ஜெப அட்டைகள் கொடுக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்.... அதற்கு பிறகு நாங்கள், நாங்கள் ஜெபவரிசையை முடித்த பிறகு .... நீங்கள் - எப்படியாயினும் நடு இரவில் வீடு சென்றடையலாம். ஆகவே, அதற்கு பாதி அளவிற்கு மட்டுமே நான் பேசுவதானது இருக்கும். எனக்கு அதிகம் தெரியாது, அதனால் தான் எனக்குத் தெரிந்ததை கூறும்படிக்கு எனக்கு நீண்ட நேரம் பிடிக்கின்றது. ஆகவே, எனக்குத் தெரிந்ததை மிக அருமையான விதத்தில் கூற எனக்கு மிகவும் விருப்பம். அதனால் தான் நான் சிறிது நேரத்தை எடுத்துக்கொள்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது அருமையானதாகும். நான் உங்களை சற்று நையாண்டி செய்தேன். நான் - நான் இன்னும் நாற்பத்தைந்து நிமிடத்தில் அல்லது அதற்குள்ளாக முடிக்க முயற்சி செய்து ஜெப வரிசைக்குள் செல்வேன். இன்றிரவு நான் வாசித்து ஒரு பொருளை எடுக்க ஒரு சிறிய வேதவசனத்தை வைத்திருக்கிறேன். அதை தேவன் ஆசீர்வதிக்கும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். நீங்கள் வீடு சென்று அதை வாசிக்க விரும்பினால் அது மாற்கு 10ஆம் அதிகாரம் 28வது வசனத்தில் இருக்கின்றது. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி : இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத் தொடங்கினான். 19இப்பொழுது, எல்லாவற்றையும் விட்டு விடுதல் என்பதை நான் ஒரு பொருளாக எடுத்து, அதன் பேரிலே ஒரு சிறிய காரியத்தை அமைத்து பொருத்த விரும்புகிறேன். அதன் பிறகு சில நிமிடங்களுக்குப் பிறகு நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். ஆகவே இப்பொழுது, மாற்கு 10ஆம் அதிகாரத்தை அறிந்தவர்கள், அதை அப்படியே உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அது ..... அதற்கு முன்னர் இயேசு விவாகரத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு மிகவும் கவனத்தைக் கோருகின்ற ஒரு காரியமானது அவருக்கு சம்பவித்தது, ஒரு ஐசுவரியமான வாலிபன் அவரை நோக்கி ஓடி வந்து, “நல்ல போதகரே, நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு இயேசு, “கற்பனைகளைக் கைக்கொள்” என்று கூறினார். 20அதற்கு அந்த வாலிப மனிதன், “இதை நான் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன். அதைக்காட்டிலும் வேறு ஏதாவது கற்பனைகள் உள்ளனவா?” என்றான். அப்பொழுது இயேசு அவை என்னவென்று அவனுக்குக் கூறினார். அப்பொழுது அவன், “இதை நான் செய்துள்ளேன்” என்று கூறினான். அதற்கு அவர், “ஆனால் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. உனக்கு நித்திய ஜீவன் வேண்டுமென்றால், பூரண சற்குணனாயிரு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு. உன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றி வா” என்று கூறினார். நாம் பொருளிற்குள் செல்லும் முன்னதாக, ஒரு அடிப்படையை அமைக்க நாம் இந்த வாலிபனைக் குறித்து சிறிது நேரம் கவனித்துப் பார்ப்போமாக. 21இப்பொழுது, நீங்கள் பாருங்கள். எல்லாவற்றையும் விட்டு விட வேண்டுமென்று அந்த வாலிப மனிதனுக்குக் கூறப்பட்டது. ஆனால் அதைச் செய்ய அவன் மறுத்தான். ஆகவே சில சமயங்களில் நாம் செழுமையும் ஐசுவரியத்தையும் இன்னும் பிறவைகளையும் நாம் பொருத்தி “வெற்றி” என்று கூறுகின்றோம். ஆனால் இந்த வாலிப மனிதன் வெற்றிகரமாக காரியங்களைச் சாதித்த ஒருவனாவான். ஆனாலும் அவன் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கவில்லை. ஆதலால், சில சமயங்களில் வெற்றி என்பது எப்பொழுதுமே தேவன் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றார் என்பதல்ல. ஆகவே நாம் அவனுடைய காரியத்தைத் தொடர்ந்து பார்ப்போம். இங்கே அவன் தன்னுடைய வாலிபப் பிராயத்திலே இருப்பதை நாம் காண்கின்றோம். ஒருக்கால், ஒரு மிக அழகுள்ளவனாக, அருமையாக உடையுடுத்தினவனாக, வாலிபனாக அவன் இருந்திருக்கக்கூடும். “இயேசு அவனிடத்தில் அன்பு கூர்ந்தார்” என்று வேதாகமம் கூறுகின்றது. அவன் ஒரு அருமையான, மிகவும் நல்ல, மிருதுவான மனசாட்சியைக் கொண்டவனாக இருந்திருப்பான். அவன் மிக அருமையான ஒரு-ஒரு மனிதனாக இருந்திருப்பான், இல்லையென்றால் கர்த்தராகிய இயேசுவின் மெச்சுதலை, ஆர்வப்பாராட்டை அவன் பெற்றிருக்கவே மாட்டான். ஏனென்றால் இயேசு அவனை நோக்கிப் பார்த்த போது “அவர் அவனில் அன்புகூர்ந்தார்.'' அவன் மிக அன்பான ஒரு தோற்றத்தை கொண்டிருப்பவனாக இருந்திருப்பான், பார்ப்பதற்கு அருமையானவனாகவும், சுத்தமுள்ள நன்மகனாகவும், சூதுவாதற்ற நேர்மையான பையனாக இருந்திருப்பான். அவன் இயேசுவிடம் சென்றான். ஒருக்கால் தன் மனதில் ”நான் நித்திய ஜீவனை அடையும்படிக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்“ என்று உத்தமமாக யோசித்து சென்றிருக்கக்கூடும். 22ஆகவே அவன் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள தான் கொண்டிருந்த எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டியிருந்த நேரத்தில், அப்பொழுது அங்கே வாசலண்டையிலே, உன்னால் அதற்குள் செல்ல முடியுமா என்கின்றதான கேள்வியானது இருந்தது. அதே கேள்வியானது நம் ஒவ்வொருவருக்கும் முன்னால் இருக்கின்றது. அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து அவன் வைத்திருந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு அவனுடைய சிலுவையை எடுத்துக் கொண்டு தம்மைப் பின்பற்றும்படிக்கு உறுதியாகக்கூறினார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். “அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்த படியால் அவன் மிகுந்த துக்கத்தோடே போய்விட்டான்.'' அப்பொழுது இயேசு திரும்பி, “ஒரு ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எவ்வளவு கடினமோ, அதே போல ஒரு ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அவ்வளவு கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் மனிதனால் அது இயலாத, செய்ய முடியாத ஒன்றாகும், ஆனால் அது தேவனால் இயலாத, செய்யமுடியாத ஒன்றல்ல' என்று கூறினார். 23இந்த இளம் தலைவனைக் குறித்து நாம் சற்று பார்ப்போமாக. வேதாகமத்தில் அடுத்த இடத்தில் நாம் காண்கையில், அவன் ... காரியமானது அவனுக்கு முன்பாக கடுமையானதாக வைக்கப்பட்ட போது, இயேசுவைப் பின்பற்றுவதற்கான தருணத்தை அவன் உடனடியாகப் புறக்கணித்தான். நீங்கள் பாருங்கள், நம்மால் முடிந்த வரைக்குமாக எல்லாவற்றையும் நாம் தக்க வைத்துக் கொண்டு அதன் பிறகு இயேசுவைப் பின்பற்ற நாம் விரும்புகிறோம். ஆனால் சில சமயங்களில் நாம் எல்லா காரியத்தை விட்டு விடவேண்டு மென்று இயேசு விரும்புகிறார். அதினாலே நாம் நம்முடைய இரு கரங்களால் அவரைப் பற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும். நம் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பதனால் அவ்விதமாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 24என் சிறு பெண் பிள்ளைகளைக் குறித்து நான் வழக்கமாக கூறுகின்ற ஒரு சிறு காரியத்தை அது நினைவுபடுத்துகிறது. இப்பொழுது அவர்கள் மிகச்சிறு வயதுடையவர்கள் அல்ல, அவர்கள் இப்பொழுது வளர்ந்த பிள்ளைகளாவர். ஆனால், சிறு பிள்ளைகளாக இருந்த போது ...... அவர்களில் ஒருவள் ரெபெக்கா; அவள் தான் மூத்தவள். சாராள் இளையவள். பெக்கி நீல நிறக் கண்களையுடையவள், சாராளுக்கு பழுப்பு நிறக் கண்கள். ஆனால் அவர்கள் இருவரும் அப்பாவின் செல்லப் பிள்ளைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் வீட்டிற்கு வருவதைப் பார்ப்பதற்கு அவர்கள் காத்துக் கொண்டிருப் பார்கள். அவர்கள் என்னை பார்ப்பதற்கு எப்பொழுதுமே விருப்பங்கொள்வார்கள். பெக்கி ஒரு விதமான ... உயரமான மெலிந்த ஒரு சிறு பிள்ளை. சாராளோ சற்று சிறியவளாக, குள்ளமாக மெலிந்து இருப்பாள். 25ஒரு இரவிலே நான் வீடு திரும்புவதற்காக அவர்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். நான் கூட்டங் களுக்காக வெளியூர் சென்றுவிட்டிருந்தேன், நான் வீடு திரும்புவேன் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே சிறிது நேரம் காத்திருக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். நான் வீடு திரும்புகையில் என்னைக் காண வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். சரி, மண்தெளிப்பான் (sandman)அவர்களுடைய கண்களில் மண்ணைத் தெளித்திருப்பான், அவர்களுக்கு தூக்கம் வந்து விட்டது. முடிவில் அவர்கள் தங்களுடைய அறையில் தங்கள் படுக்கைக்குச் சென்றனர். நான் மிகவும் நேரம் கடந்த பிறகு வீடு திரும்பினேன். நான் உள்ளே நுழைந்த போது மிகவும் களைப்புற்றிருந்தேன். ஆகவே நேராக படுக்கைக்குச் சென்று விட்டேன். கூட்டங்களுக்குப் பிறகு, சில வாரங்கள் கூட்டங்களுக்குப் பிறகு எனக்கு உறக்கம் வராத அளவிற்கு மிகவும் களைத்துப் போயிருப்பேன். நான் சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் உறங்கி, எழுந்து கொண்டேன், நேராக வீட்டின் முன் அறைக்குச் சென்று நாற்காலியில் அமர்ந்தேன். அந்த அதிகாலைப் பொழுதில் அங்கே நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். 26சிறிது நேரம் கழித்து பெக்கி தன்னுடைய படுக்கையறையில் புரண்டுப்படுத்தாள். அது பகல் வெளிச்சம் என்று அவள் அறிந்துக் கொண்டாள். அவள் தன்னுடைய அறையிலிருந்து முகப்பறையை உற்றுப் பார்த்தாள், அங்கே நான் நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டிருந்ததை அவள் கண்டாள். உடனே தன் படுக்கையிலிருந்து அவள் தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடி வந்தாள், அந்த சிறிய மெலிந்த நீண்ட கால்களை நீட்டிக்கொண்டு ஓடி வந்தாள். ஆம், அது - அது சாராளை தூக்கத்திலிருந்து எழுப்பினது. உங்கள் பிள்ளைகள் அதைச் செய்வார்களா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால். என்னே, மூத்தப் பிள்ளைக்கு நீங்கள் ஏதாவதொன்றைச் செய்யும் போது, இரண்டாவது பிள்ளை தான் புறக்கணிக்கப்பட்டு விட்டோம் என்று நினைக்க ஆரம்பித்து விடும். அப்பொழுது சாராள் ரெபெக்காவின் இரவு உடையை அணிந்திருந்தாள், அந்த ஆடையின் கால்கள் மிகப் பெரிதாக இருந்தது, அவள் ஓடி வந்தபோது அந்த பெரிய ஆடை காற்றில் பறந்தது. ரெபெக்காவின் ஓட்டத்திற்கு அவள் ஈடு கொடுக்க முடியவில்லை. 27ஆகவே ரெபெக்காள் சாராளைத் தோற்கடித்து முதலாவதாக என்னிடமாக வந்தாள். அவள் குதித்து என் தொடையின் மீது அமர்ந்து, தன்னுடைய இரண்டு கரங்களால் என்னை தழுவினாள். அது ஒருவிதமான ..... அவள் என்னுடைய வலது முட்டியின் மீது உட்கார்ந்தாள். அவளுடைய நீண்ட கால்கள் தரையைத் தொட்டிருந்தன. அவள் சமன்படுத்தப் பட்ட நிலையில் தள்ளாட்டமின்றி அமர்ந்திருந்தாள். இக்காரியமானது, இது வரையிலும் வந்துள்ள முதலாவதான மகத்தான ஸ்தாபனங்களில் சிலவற்றை எனக்கு நினைவு படுத்துகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா, அவைகள் நீண்ட காலமாக, நீண்ட கால்களைப் போல, மிகச் சிறந்த விதத்தில் சமநிலையில் இருந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே இங்கே சாராள் கூடவே ஓடி வந்தாள், சிறியதான, நீண்ட காலமாக இல்லாமல் உள்ள இளையச் சபையைப் போன்று என்று உங்களுக்குத் தெரியும். பெக்கி அவளை தோற்கடித்து - அவளை தோற்கடித்து விட்டாள் என்று அவள் கண்டாள். 28ஆகவே ரெபெக்கா தன்னுடைய கரங்களால் என்னை அணைத்துத் தழுவினாள். அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள், “என் சகோதரியாகிய சாராளே, நீ ஒன்றை அறிந்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் தான் இங்கே முதலாவதாக வந்தேன். ஆகவே நான் அப்பாவின் முழுமையுமே எடுத்துக் கொண்டேன், உனக்கென்று ஒன்றுமே கிடையாது” என்று கூறினாள். (அவ்விதமாகத்தான் நம்மிடமாக எந்நேரமும் கூற முயல்கின்றனர் என்று உங்களுக்குத் தெரியும்.) மேலும் அவள், “நான் தான் இங்கே முதலாவதாக வந்தேன், ஆதலால் அப்பாவின் முழுமையையும் நான் எடுத்துக் கொண்டேன், ஆகவே உனக்கு மீதமாக எதுவுமேயில்லை” என்றாள். பரிதாபத்திற்குரிய சிறிய சாராள் தன்னுடைய தலையை கீழே போட்டாள். அவளுடைய சிறிய உதடானது கீழே தொங்க ஆரம்பித்தது. அவள் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள். அந்த பெரிய பழுப்பு நிறக் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. பெக்கி தன் தலையை என் தோள்களின் மீது போட்டுக் கொண்டு ஒரு விதமாக என்னை அணைத்துக் கொண்டிருந்தாள். 29நான் என் விரலை இந்தவிதமாகசாராளை நோக்கி நீட்டி என்னுடைய இன்னொரு காலை நீட்டினேன். அப்போது அவள் ஓடி வந்தாள், இன்னொரு காலில் மீது குதித்தேறி அமர்ந்தாள், பாருங்கள் அவளால் - அவளால் - அவளால் தன்னை சமநிலைப் படுத்தி ஆடாமல் உட்கார முடியவில்லை . அவளுடைய சிறிய கால்கள் தரையைத் தொடும் அளவிற்கு நீண்டதாக இல்லை. ஆனால் எப்படியோ என்னுடைய காலின் மீது உட்கார்ந்திருந்தாள், பாருங்கள்? அவள் அந்த விதமாக சிறு பிள்ளையைப் போல தள்ளாடிக் கொண்டிருந்தாள். ஆகவே அப்பொழுது நான் அவள் கீழே விழாமல் தடுக்க, அவளை பிடித்துக் கொள்ள, என் இரு கரங்களையும் அவளைச் சுற்றிலும் இந்த விதமாக வைத்தேன். அப்பொழுது நான் அவளை நெருக்கமாக அணைத்துக் கொண்டிருந்தேன், அவளும் இருந்த சிறிய இடத்தில் தன்னுடைய சிறிய தலையை சாய்த்துக் கொண்டாள். அவள் எழுந்து பெக்கியை ஏறெடுத்துப் பார்த்து, “இதோ, என் சகோதரியாகிய ரெபெக்கா, நானும் கூட ஒன்றை உனக்குக் கூற விரும்புகிறேன், நீ ஒருவேளை அப்பாவின் முழுமையையும் எடுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் அப்பா என்னுடைய முழுமையையும் கொண்டிருக்கின்றார் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றாள். ஆகவே அது சரிதான். 30ஆகவே அந்த விதமாகத் தான் நாமும் விரும்புறோம். நாம் விரும்பவில்லை .... அவர் நம்முடைய எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். ஆகையால், நாம் செய்கின்ற எல்லாவற்றிலும் நாம் விசுவாசத்தினாலே நடந்து சென்று அவரில் விசுவாசிக்க வேண்டும், அவ்வளவு தான், அவரை அப்படியே நம்ப மாத்திரம் செய்யுங்கள். நம்மால் அதை விவரிக்க முடியாது. அதை விவரிப்பதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது. நாம் அதை விசுவாசிக்க மாத்திரம் செய்து அதை அப்படியே அந்த விதமாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த ஐசுவரியமான இளம் மனிதன் தன்னைத் தானே கிறிஸ்துவுக்கென அளிக்க விரும்பவில்லை, ஆகவே அவன் புறப்பட்டுச் சென்று விட்டான். பிறகு நாம் பார்ப்பது என்னவென்றால் அவன் தானே..... அவன் மிகவுமாக செழித் தோங்கினான், அவனுடைய களஞ்சியங்கள் மிகவுமாக நிரம்பி வழிந்து, “ஆத்துமாவே உன் இளைப்பாறுதலுக்குச் செல்” என்று அவன் கூறும்படிக்கு ஆயிற்று. ஓ அவன் எல்லாவற்றிலும் செழித்தோங்கினான். அவனுக்கு மிகவுமாக இருந்தபடியால் அவனுக்கு தேவை என்பதே இல்லாதிருந்தது. 31ஆனால் ஏதோ ஒன்று நடந்தது. அடுத்த முறை நாம் அவனைக் காண்கையில் அவன் நரகத்தில் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்து அங்கே தூரத்திலே ஆபிரகாமின் மடியிலே அமர்ந்திருந்த அந்த தரித்திரனைக் காண்கின்றான். ஏன் அவ்வாறு ஆனது என்றால் அவன் எல்லாவற்றையும் விட்டு விட்டு கர்த்தராகிய இயேசுவை பின்பற்ற அவனுக்கு விருப்பமில்லாதிருந்தது. அப்பொழுது, இது நிகழ்ந்த போது, அந்த இளம் தலைவன் தான் கொண்டிருந்ததை விட்டு விட்டு இயேசுவைப் பின்பற்ற விருப்பமில்லாதிருந்த காரியமானது நிகல்ந்த போது பேதுருவின் மனதில் இவ்விதமான ஒரு எண்ணம் உதித்திருக்கும். அந்த கருத்துக் குறிப்பை அவன் தான் கூறினான் அல்லது கேள்வியைக் கேட்டான், எழுப்பினான் என்று நான் நம்புகிறேன். அப்போது அவன், “பாருங்கள், உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டோமே. நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டோமே. நாங்கள் என்ன செய்தோம் என்று பாருங்கள். எங்கள் வீடுகளை விட்டோம். எங்கள் குடும்பங்களை விட்டு விட்டோம். எங்கள் நிலங்களை விட்டோம். உம்மைப் பின்பற்றும்படிக்கு எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் விட்டு விட்டோம்” என்று கூறினான். 32அந்த கருத்தானது அவனுடைய மனதில் உதிக்க ஆரம்பித்தது. ஒருக்கால் கிறிஸ்து செய்த காரியங்கள், இன்னும் பிறவற்றை அவன் கவனித்துக் கொண்டேயிருந்ததினால் அவன் மிகவுமாக மெய் மறந்து போய், அவனாலே .... அவன் தன்னுடைய வீட்டை விட்டு வந்து விட்டான் என்று அவனுக்குத் தோன்றவே இல்லை. அவன் தன்னுடைய குடும்பத்தை விட்டான். அவன் தன்னுடைய தகப்பனை, தாயை விட்டான். இயேசுவை பின்பற்றும்படிக்கு தான் கொண்டிருந்த எல்லாவற்றையும் விட்டு விட்டிருந்தான். ஆனால் தேவனுக்கு சரியாக அது தான் தேவையாயிருக் கிறது; எல்லாவற்றையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். அது தேவனுடைய தேவைப்படுகின்ற ஒன்றாகும். நாமும் கூட அதைச்செய்தாக வேண்டியவர்களாக இருக்கின்றோம். சில சமயங்களில் நம்முடைய எண்ணங் களையே விட்டுவிட வேண்டியவர்களாக இருக்கின்றோம். தேவனுடைய வார்த்தைக்கு முரணாக எந்த ஒரு காரியத்தைக் குறித்ததான நம்முடைய எண்ணங்கள் இருக்குமானால் நாம் நம்முடைய சொந்த எண்ணங்களை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டியவர் களாக இருக்கின்றோம். அவரை நாம் பின்பற்றத்தக்கதாக நமக்கு இருக்கின்ற ஒரே வழியானது அவருடைய வார்த்தையைப் பின்பற்றி அதற்குக் கீழ்ப்படிவதே. ஆகவே தேவனுடைய வேண்டு கோள் மற்றும் தேவனுக்குத் தேவையாயிருப்பது என்னவென்றால் எல்லாவற்றையும் நாம் விட்டு விட்டு அவரைப் பின்பற்றுவதாகும். ஆனால் அவ்விதமாகச் செய்யும் போது நாம் காண்ப தென்னவென்றால், சில சமயங்களில் நம்முடைய நண்பர் களையும் கூட விட்டு விட வேண்டியதாக இருக்கும். அநேக சமயங்களில் அவ்விதம் செய்வதானது மிகவும் கடினமான காரியமாகும், அநேக மக்கள் முதலாவதாக கிறிஸ்துவுக்குள்ளாக வந்து ஆவியினால் நிரப்பப்படுகையில் அவ்விதமாக இருக்கும். ஒருக்கால், ஒவ்வொரு குறிப்பிட்ட - குறிப்பிட்ட இரவில், பெண்கள் ஒரு விதமான களியாட்ட விருந்துக்கு செல்பவர்களாக இருக்கலாம், அங்கே பக்கத்து இடங்களில் பங்கோ (நம்பிக்கை மோசம் செய்து பொருள் பறித்தல் விளையாட்டு - தமிழாக்கியோன்) விளையாடுதல் போன்றவை. அண்டைவீட்டார் எல்லோருடனும் பழகுதல் மற்றும் இன்னும் பிற காரியங்கள், சுற்றுமுற்றத்தில் இருக்கும் குறிப்பிட்ட சங்கங்களைச் சார்ந்திருத்தல், மற்றும் அவர்கள் சென்று பங்கோ விளையாட்டு விளையாடுவார்கள். அந்த ஸ்திரீகள் அதைக்குறித்து ஏதாவதொன்றை கூறுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அதைப் புரிந்துக் கொள்ளப் போவதில்லை. ஆனால், இன்னுமாக, நீங்கள் அந்த காரியத்தை விட வேண்டியவர்களாக உள்ளீர்கள். ஏனென்றால் சூதாடுவது, சீட்டாட்டம் (play cards) விளையாடுவது சரியான ஒரு காரியமல்ல. நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக இருந்தால் அதை நீங்கள் விட்டுவிட வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். 33சில சமயங்களில் நம் சபைகளில் பெண்கள் குட்டைக் கால் சட்டை , மற்றும் - மற்றும் இந்த டங்கரீஸ் (Dungarees) போன்ற அவலட்சணமான ஆடைகளை அணிவதுண்டு. “ஒரு ஸ்திரீ இப்படிப்பட்டவைகளை அணிவது தேவனுக்கு அருவருப்பானது” என்று வேதாகமம் கூறுகின்றது. அவள், அவள் என்ன நினைத்தாலும் சரி, அவள் அதை விட்டுவிட வேண்டியவளாக இருக்கின்றாள். சில சமயங்களில் பெண்கள் இரட்சிப்பின் வழிக்குள்ளாக இரட்சிக்கப்படும் போது வழக்கமாக தங்கள் மயிரைக் கத்தரித்துக் கொள்பவர்களாக இருப்பதை நாம் காண்கிறோம். ஏனைய உலகத்தார் போலவே தாங்களும் புகழ்பெற்றவர்களாக இருக்க விரும்புவார்கள். ஆனால் அவர்கள் கண்டு கொள்வது என்னவென்றால், இது ஒரு கடினமாக காரியமாகும். ஏனென்றால், ஒரு கிறிஸ்தவளைப் போல உடை உடுத்தி, கிறிஸ்தவளைப் போல நடந்து கொண்டு, ஒரு கிறிஸ்தவளைப் போல ஜீவிக்கும் போது அவர்கள் உங்களை பழமை நாகரீகம் கொண்டவள் என்று உங்களை அழைப்பார்கள். அவர்கள் உங்களை பழமை நாகரீக ஆள் என்று அழைப்பார்கள். ஆனால் நீங்கள் அவரைப் பின்பற்றும் படிக்கு எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். 34இயேசு கூறினார் அல்லது வேத வாக்கியம் கூறுகின்றது, “உலகத்திலோ அல்லது உலகத்தின் காரியங்களில் அன்பு கூறுகிறவனிடத்தில் தேவனுடைய அன்பானது அவனுக் குள்ளாக இல்லவே இல்லை,” சரியா. எல்லாவற்றையும் விட்டு விடுதல் தான் அதைச் செய்யும். அதோ, நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரை பின்பற்ற விரும்புவீர்களானால், அப்பொழுது, “நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருக்குமானால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” ஆனால், அந்த காரியங்களெல்லாம் தவறு என்று அறிந்துள்ள நிலையில் உங்களால் கேட்கமுடியாது. அவைகள் தவறு என்று உங்களுக்குத் தெரியும். சீட்டாட்டம் விளையாடுவது (Card-playing), சிகரெட்டு புகைப்பது, மது குடிப்பது, அவலட்சணமான ஆடைகளை உடுத்துவது என்பவைகள் - வேதாகமம் அவைகளுக்கு எதிராக உள்ளது. அவைகளைச் செய்து விட்டு கிறிஸ்தவன் என்று உரிமை கோருவது. உங்களுக்குள்ளாக இருக்கும் ஆவியானது அதைக் கடிந்துக் கொள்ளாவிட்டால், அப்படியானால் உங்களுக்குள்ளாக இருக்கும் அந்த ஆவியிடம் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம். ஏனென்றால், அந்த வார்த்தையை எழுதின தேவன் தாமே வார்த்தையாக இருக்கின்றார். அந்த வார்த்தை உங்களுக்குள்ளாக இருக்கின்றது, அது உங்களைக் கடிந்துக் கொள்கிறது. அது அவ்விதம் செய்தாக வேண்டும். அந்தக் காரியங்கள் உங்களை விட்டுச் செல்ல வேண்டும். அது போகவில்லை என்றால் நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் ஒன்றை எழுதியிருக்கும் போது நீங்கள் திரும்பி அதற்கு முரணான ஒன்றைச் செய்து பரிசுத்த ஆவி உங்களை வழி நடத்துகிறது என்று எப்படி கூற முடிகின்றது? உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆகவே, சிகரெட்டு புகைப்பது, விஸ்கி குடிப்பது, சீட்டாட்டம் விளையாடுவது, மயிரைக் கத்தரிப்பது, குட்டைக்கால் சட்டை அணிவது, மற்றும் இந்த விதமான எல்லா காரியங்களும் தவறானதாகும். பாவச் செயலாகும், தவறாகும், ஆகவே நீங்கள் அதை விட்டு விட்டாலொழிய உங்களால் வேறெங்காயினும் செல்லக்கூட முடியாது. 35அது நம்முடைய பெந்தெகொஸ்தே அசைவுகளுக் குள்ளாக ஊர்ந்து உள்ளே வந்துக் கொண்டிருக்கின்றது. அது வெட்கக்கரமான ஒன்றாகும். நீங்கள் வெட்கப்பட வேண்டியவர் களாக இருக்கின்றீர்கள். உலகளாவிய எழுப்புதலை நம்மால் கொண்டிருக்க முடியாதது ஆச்சரியமான ஒன்றல்ல, ஒரு பெந்தெகொஸ்தே எழுப்புதலை நாம் கொண்டிருக்க முடியாதது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏதோ ஒன்று நடந்துள்ளது. அது சரி. நாம் ஒழுக்க வரம்பை மீறி விட்ட படியால் காரியங்கள் நடக்கும்படிக்கு அப்படியே விட்டு விட்டுள்ளோம், அதனால் தான் நடக்கக்கூடாத காரியங்களெல்லாம் இப்பொழுது நடந்து கொண்டிருக் கின்றது. ஆகவே கிறிஸ்துவை பின்பற்றும்படிக்கு எல்லா வற்றையும் நீங்கள் விட்டு விட வேண்டும். 36நீங்கள் உங்களையும், உங்கள் சொந்த கருத்துக்களையும் விட்டு விட வேண்டும். அவருடைய வார்த்தையுடன் செயலாற்ற வேண்டும். வார்த்தையானது உரைத்துள்ள எந்த ஒன்றையும் பரிசுத்த ஆவியானது மறுதலிக்கவே செய்யாது. வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டுள்ளது. வேதம் அவ்விதமாகக் கூறுகின்றது. ஆகவே அது ..... வேதாகம வார்த்தைகள் தேவனாகும். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அது தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' 37இப்பொழுது அந்த வார்த்தை ஆவியாகி நமக்குள்ளாக வாசம் செய்கின்றது, “ஏனெனில் நான் உங்களோடு இருப்பேன், உலகத்தின் முடிவு பரியந்தம், உலகத்தின் நிர்மூலம் வரைக்கும் உங்களோடு இருப்பேன்.” இப்பொழுது, அந்த வேதாகமத்தை எழுதின அதே தேவன் உங்களுக்குள் இருக்கின்றார். நீங்கள் உங்களுக்கு சொந்தமல்லவே. உலகத்தின் காரியங்களுக்கு நீங்கள் மரித்துவிட்டீர்கள். உங்கள் சொந்த எண்ணங்களுக்கு நீங்கள் மரித்து விட்டீர்கள், உங்கள் சிந்தையானது அந்த..... “கிறிஸ்துவில் இருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது.'' அதோ, அப்பொழுது நீங்கள் அவரைப் பின்பற்றத் தக்கதாக எல்லாவற்றையும் விட்டு விடுகிறீர்கள். உங்களுடைய சொந்த எண்ணங்கள் அல்ல; அவர் என்ன கூறுகின்றாரோ அது தான் காரியமாகும். ”என் சித்தமல்ல ; கர்த்தாவே உம்முடைய சித்தம்தான்.“ அப்பொழுது நீங்கள் தேவனுடைய வார்த்தை யுடனே உங்களை வரிசைப்படுத்திக் கொள்ள ஆரம்பிக் கின்றீர்கள். இதிலேயே நீண்ட நேரம் தரித்திருக்கலாம், ஆனால் நான் இன்னும் சிறிது பேசுவேனாக. “ஆனால், எல்லாவற்றையும் விட்டுவிட்டால் எனக்கு என்ன கிடைக்கும்? எல்லாவற்றையும் விட்டுவிட்டால் எனக்குக் கிடைப்பதென்ன?” என்று நீங்கள் கூறலாம். 38உலகம் உங்களைப் பார்த்து பரியாசம் பண்ணும்படிக்கு நீங்கள் எதிர்பார்க்கலாம். உலகம் உங்களை எல்லாவிதமான கேவலமான பெயர்களைக் கொண்டும் அழைப்பதை எதிர்பார்க்கலாம். அவர்களால் எப்படியெல்லாம் உங்களை அழைக்கமுடியுமோ அந்த விதமாக உங்களை அழைப்பார்கள். நீங்கள் அசட்டைப்பண்ணப்பட்டு புறக்கணிக்கப்படுவீர்கள். இயேசுவுக்குள் தேவன் வாசம் பண்ணி இம்மானுவேலாக இருந்தபடியால், அவர் சபைக்குள்ளே வந்தவுடனே தம்முடைய சொந்த சபையே தம்மை புறம்பாக்கிக் போடும்படிக்கு, அவர் தாமே தம்முடைய சொந்த சபைக்கே மிகவும் வினோதமான வராக இருக்கும்படிக்கு அது செய்தது. அவர்கள் தான் அவரை சிலுவையில் அறைந்து தொங்கவிட்டனர். அவர்கள்தான் அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தனர். அவர் மக்களை நேசித்தார். அவருடைய முழு இருதயமும் மக்களுக்காகத்தான் இருந்தது. ஆனால் அவர் தேவனைப் பின்பற்றும்படிக்கு அவர் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியதாயிற்று. 39தேவனைப் பின்பற்றும்படிக்கு நாம் தாமே எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியவர்களாக இருக்கின்றோம். “இப்பொழுது, எனக்கு ஆதாயமாக திரும்ப என்ன கிடைக்கும்?” நாம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. சிலசமயங்களில் ஊழியக்காரர்களாகிய நாம் மனந்திரும்பு கிறவர்களுக்கு சிறிது அதிகமாக மிருதுவானவை களைக் காண்பிக்கின்றோம். “ஓ, கிறிஸ்துவண்டை வாருங்கள். எல்லாக் காரியமும் அருமையாக இருக்கும்.” ஆனால் நீங்கள் பாருங்கள். காரியமானது அப்படியன்று, எல்லாக்காரியமும் மலர்ப் படுக்கையைப் போல அருமையாக, மிருதுவாக இருக்கும் என்று கூறுகிறோம். ஏனென்றால், எந்த கிறிஸ்தவனும்.... வேதாகமம், “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்கிறவர்கள் யாவரும் துன்பப்படுவார்கள்” என்று கூறுகின்றது. ஆகவே கிறிஸ்துவுக்காக நீங்கள் துன்பங்கள் படவில்லையெனில் அப்படியானால் ஏதோ தவறு ஒன்று இருக்கின்றது. பிசாசு உங்களை தொடர்ந்து வரவில்லையெனில் அவன் உங்களைப் பிடித்து விட்டான் என்று அர்த்தம். அவ்வளவு தான். ஏனென்றால் அவன் உங்கள் பின்பாக வந்து கொண்டிருக்கும் வரைக்குமாக அவன் இன்னுமாக உங்களைப் பிடிக்கவில்லை என்று தான் அடையாளமாகும். ஆனால் அவன் உங்களைப் பின் தொடர்ந்து வரவில்லையெனில் அவன் உங்களைப் பிடித்து விட்டான் என்று தான் அடையாளமாகக் காண்பிக்கின்றது. ஆமாம். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அவன் உங்களை தாக்கிக் கொண்டே இருக்கும் வரைக்குமாக, இன்னுமாக நீங்களும் சில அடி தூரம் தாவிக்கடந்து அவனுக்கு முந்தி இருக்கின்றீர்கள், ஆகவே அப்படியே சென்று கொண்டிருங்கள். 40“அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்கிறவர்கள் யாவரும் துன்பப்படுவார்கள்.” அவர், “சந்தோஷப்பட்டு களிகூருங்கள்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” என்று கூறினார். அது சரி. உங்கள் முகத்தை துக்கத்தால் கீழே தொங்கவிட்டு, “உம், அதை நான் செய்திருக்கக்கூடாது. நான் நினைக்கின்றேன். அவர்கள் - அவர்கள், யாரோ ஒருவன் என்னைக் குறித்து பேசுவதையும், என்னை ஒரு பழைமை பாணியிலான நாகரீகம் கொண்டவன் என்றும், நான் இப்படிப்பட்டவன், அப்படிப் பட்டவன் மற்றும் அதைப் போன்றவன் என்று என்னைக் குறித்து கூறுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கூறிச்செல்லாதீர்கள். ஓ, நீங்கள் - நீங்கள் சந்தோஷப்பட்டு களிகூர வேண்டும், அதைக்குறித்து நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ஏனென்றால், அவருடைய நாமத்தைக் குறித்ததான நிந்தையை நீங்கள் சுமக்கிறீர்களே. அவருடைய கட்டளைகளைக் காத்துக் கொள்கிறதினாலே தான் உங்களுக்கு அது நேரிடுகின்றது. 41ஆகவே இதையும் கூறிட விரும்புகிறேன். (நம்மால் முடிந்தவரைக்கும் வேகமாக செல்லலாம்). தேவன் எந்த விதத்திலும் ஒரு மனிதனுக்கு கடன்பட்டவராக இருக்க மாட்டார். தேவன் எந்த ஒரு மனிதனுக்கும் கடன்பட்டவராக இருக்கமாட்டார். நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தேவனுக்காக அதைச் செய்திருப்பீர்களானால், தேவன் உங்களுக்கு ஆயிரமாயிரமடங்கிற்கு திருப்பிக் கொடுப்பார். அது சரியே. தேவன் அதை திருப்பிக் கொடுப்பார். நீங்கள் உலகத்தின் காரியங்களையும், உலகத்தையும், உலகத்தின் காரியங்களையும் விட்டு விடுங்கள். தேவன் உங்களுக்கு அநேக மடங்குகள் திருப்பிக் கொடுப்பார். 42இங்கே இன்றிரவு எத்தனைப் பேர் அதற்கு சாட்சிகளாயிருக்கிறீர்கள்? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) சரி, தேவன் திருப்பிக் கொடுப்பார் என்று நாமெல்லோரும் அறிவோம். இப்பொழுது எல்லாவற்றையும் விட்டுவிட்டவர்களில் சிலரைக் குறித்து நாம் சிறிது பார்ப்போமாக. முதலாவதாக விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாமைக் குறித்து நாம் சிந்திப்போம். ஆபிரகாம் தன்னுடைய சொந்த தேசத்தையும், தான் கொண்டிருந்த சொத்தையும் மற்றும் எல்லாவற்றையும் விட்டுவிட்டான். கல்தேயாவிலுள்ள ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அவன் வெளியே அழைக்கப் பட்டான். அவன் தன்னுடைய தேசத்தையும், தன்னுடைய வீட்டையும், தன்னுடைய ஜனங்களையும் மற்றும் எல்லா வற்றையும் விட்டுவிட்டு தேவனைப் பின்பற்றினான். அவன் எல்லாவற்றையும் பின்னே அப்படியே விட்டு விடவேண்டிய தாயிருந்தது. கல்தேயாவில், ஊரில் இருந்த தன்னுடைய - தன்னுடைய நிலத்தை, தன்னுடைய சொத்தை விட்டுவிட்டான். அவன் தன்னுடைய சொத்தை விட்டான். பிறகு தேவன் அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட முழு தேசத்தையுமே அவனுக்குக் கொடுத்தார். தேவன் அதிகமான வட்டியுடன் திருப்பிக் கொடுக்கின்றார். அவர் அவனுக்கு அளித்தார். அங்கே அந்த நாளிலே, அவர் அவனை சந்தித்தபோது, அவர் “ஆபிரகாமே, எழுந்திரு, கிழக்கேயும், வடக்கேயும், மேற்கேயும், தெற்கேயும் பார். அதை எல்லாவற்றையுமே நான் உனக்கு கொடுத்து விட்டேன். அவை முழுவதும் உன்னுடையதாகும்” என்று கூறினார். 43இன்றிரவு கிறிஸ்தவர்களிடம் இருக்கின்ற காரியம் அது தான். தேவன் அதை நமக்குக் கொடுத்திருக்கின்றார். ஆனால் அதை ஆராய்ந்து பார்க்க நாம் பயப்படுகிறோம். நீங்கள் ஒரு கிறிஸ்தவராகும் போது வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் நீங்கள் சுதந்தரவாளிகளாக இருக் கின்றீர்கள். அது சரியே. தேவன் வாக்குத்தத்தம் செய்த ஒவ்வொன்றும் உங்களுடையதே. அது மேலே மூடப்பட்டு நீண்ட வரிசைத் தூண்கள் உடைய ஒரு பெரிய மகத்தான நடைபாதை (arcade) போன்றதாகும், ஒரே ஆவியினாலே நாமெல்லாரும் கிறிஸ்துவாகிய இந்த நடைபாதைக்குள்ளாக அபிஷேகிக்கப்பட்டுள்ளோம். ஆம், நான் .... யாராவதொருவர் ஏதாவதொன்றை எனக்குக்கொடுப்பார்களானால் நான் சுற்றுமுற்றும் பார்த்து எனக்கு சொந்தமானது எது என்று பார்ப்பேன். கிறிஸ்தவர்கள் இன்றிரவு அதைத்தான் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர். நீங்கள் எதைக் கொண்டிருக் கிறீர்கள் என்பதை கண்டறியுங்கள். ஏதாவதொன்று எனக்கு எட்டாத அளவிற்கு சிறிது உயரமாக செல்லுமானால் அப்போது நான் ஒரு ஏணியை எடுத்து அதை நோக்கி ஏறிச் செல்வேன். ஆகவே வேதாகமத்தில் தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற ஏதாவதொன்று எனக்கு எட்டாத அளவிற்கு சிறிது உயரமாக இருக்குமானால் நான் என்னுடைய முழங்காலில் தரித்திருப்பேன், அதை அடையும் வரைக்குமாக யாக்கோபின் ஏணியைக் கொண்டு ஏறுவேன், ஏனென்றால் அது என்னுடையதாகும். தேவன் அதை எனக்கு அளித்துள்ளார். 44வேதாகமத்தில் தெய்வீக சுகமளித்தலானது வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கும் போது நான் வியாதியுள்ளவனாக இருப்பேனானால், தேவன் எனக்கு சுகத்தை அளிக்கும் வரைக்குமாக நான் அதிலேயே தரித்திருப்பேன், ஏனென்றால் அது ஒரு வாக்குத்தத்தமாகும். நான் உலகத்தை விட்டு விட்டால் அவர் எனக்கு பரிசுத்த ஆவியை அருளுவார் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் எனக்கு அதை அளிக்கும் வரைக்குமாக நான் சரியாக அங்கேயே தரித்திருப்பேன், ஏனென்றால் அவர் அதை வாக்குரைத்துள்ளார். என் இருதயத்தின் வாஞ்சையை அளிப்பார் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்து அந்த என் இருதயத்தில் வாஞ்சையானது சரியான ஒன்றாக இருக்கும் பட்சத்தில், தேவன் அதை எனக்கு அளிக்கும்வரைக்குமாக நான் அதிலேயே தரித்திருப்பேன், ஏனென்றால் அது ஒரு வாக்குத்தத்தமாகும். நான் உலகத்திற்குரிய எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். அவரிடம் பின்னே நான் நடக்க விரும்புகிறேன், அவர் எனக்கு ஏற்ற பலனை அளிப்பார். அது உண்மையென்று எனக்குத் தெரியும். அது முற்றிலும் சரியே. 45அவன் என்ன செய்தான்? அவன் தன்னுடைய நிலத்தை, தன்னுடைய தேசத்தை விட்டான். பிறகு தேவன் அவனுக்கு அந்த முழு தேசத்தையுமே, எல்லாவற்றையுமே, பாலஸ் தீனத்தின் முழு கண்டத்தையுமே அவனுக்கு அளித்தார். ஆபிரகாம் அங்கே பாலஸ்தீனாவில் அவனுக்கென்று ஒன்று இருந்திருக்குமானால், அந்த ஒரு மிகச்சிறிய அளவிலான நிலத்தை விட்டு விட்டான் ; ஒருக்கால் ஒரு ஏக்கர் நிலத்தில் அவனுடைய வீடானது, பழைய வீடானது இருந்திருக்கும். அருமையானது. ஆனால், முதலாவதாக அவன் தன்னைத் தானே வேறு பிரித்துக் கொள்ள வேண்டியவனாக இருந்தான். அவன் தன்னுடைய ஜனங்களிடமிருந்தும், தன்னுடைய அருமையானவர் களிடமிருந்தும், அவன் வழக்கமாக சில கூட்டாளிகளோடு, தன்னுடைய சிறு வயது முதல் நண்பர்களாக இருந்த பையன்களோடு வெளியே சென்று வருவதுண்டு, அவனுடைய கூட்டாளிகள், நண்பர்கள் பாபிலோனிலிருந்து அவனுடனே வந்திருந்தனர் - அவர்களிடமிருந்தும், தன்னுடைய எல்லா சகோதரர்களிடமிருந்தும், சகோதரிகளிடமிருந்தும் மற்றும் அவன் அறிந்திருந்த எல்லா நண்பர்களிடமிருந்தும், கூட்டாளிகளிடமிருந்தும் அவன் தன்னை வேறுபிரித்துக் கொண்டு வந்தான். தேவன் அவனை அழைத்த போது, அவனை நோக்கி, “உன்னுடைய இனத்தாரிடமிருந்து உன்னை வேறுபிரித்துக்கொள். அவர்கள் எல்லாரையும் விட்டு புறப்பட்டு வா” என்று கூறினார். இப்பொழுது, அது மிகவும் கடினமான ஒன்றாகும், ஆனாலும் அவன் தன்னுடைய எல்லா இனஜனபந்துக்களிடமிருந்து தன்னைத் தானே வேறு பிரித்துக் கொண்டான். ஏன் அவ்விதமாக இருந்தது? ஏனென்றால் அவர்களெல்லாரும் அவனுடன் இணங்க, ஒத்துப்போக மாட்டார்கள் என்பதனாலேயே. 46அவர்கள் இணங்குவதை, ஒத்துப் போவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அங்கே, அறுபத்தைந்து வயதான தன்னுடைய மனைவியுடனே, ஒரு வயதான மனிதன், எழுபத்தைந்து வயது நிரம்பின ஒரு வயதானவன் “என்ன நடந்ததென்று உனக்குத் தெரியுமா? அங்கே வெளியே நான் தேவனை சந்தித்தேன். அப்போது அவர், சாராளின் மூலமாக நான் ஒரு - ஒரு - ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்று என்னிடமாகக் கூறினார்” என்று கூறினான். என்ன, அவர்கள், அவனுடைய மருத்துவ நண்பன் அவனிடமாக “அந்த கிழவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது” என்று கூறியிருப்பான். ஆனால் ஆபிரகாமோ ஏற்கனவே குழந்தைக்குத் தேவையான துணிகளைப் பொருத்தும் ஊசிகள், மற்றும் மணி உருவம் போன்ற பூ வேலைப்பாடு செய்யப்பட்ட குழந்தை அரையாடை, மற்றும் எல்லாவற்றையும் வாங்கி வைத்து குழந்தைக்குத் தயாரானான், ஏனென்றால் தான் அதைப் பெற்றுக்கொள்ளப் போகிறான் என்று அவன் அறிந்திருந்தான். அது சரி. அதன் பேரில் எந்த ஒரு யோசனையும் கிடையாது. ஏன்? தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். சரி, அவனுக்கு மூளையில் ஏதோ கோளாறு ஏற்பட்டு பைத்தியம் பிடித்து விட்டது என்று அந்த மக்கள் கூட்டமானது அவனைப் பார்த்து ஏளனமாக சிரிக்க விருப்பங் கொண்டது. ஒவ்வொரு விசுவாசிக்கும் அந்தவிதமாகத் தான் அவர்கள் செய்தனர். ஆபிரகாமின் ராஜரீக வித்துக்கள் எல்லாருக்கும் அதே விதமாகக் தான் செய்யப்படும். அது சரியே, உங்கள் சபைகளில் சில, உங்களை வெளியே துரத்தவும் செய்யும். உங்களுடைய கிளப்புகள், நீங்கள் சார்ந்திருக்கும் இடங்கள், உங்கள் பக்கத்து வீட்டு நண்பர்கள், உங்கள் கூட்டாளிகள் உங்களை புறம்பாக்கு வார்கள். சில சமயங்களில் உங்கள் ஆண் நண்பன் அல்லது உங்கள் பெண் சிநேகிதி உங்களை புறம்பாக்குவார்கள். ஆனால் நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டுமென்றால், எல்லாவற்றையும் விட்டு விட வேண்டுமென்பது தேவனுக்குத் தேவைப்படுகின்ற ஒன்றாகும். அவருக்கு முரணாயிருக்கின்ற எந்த ஒன்றையும் விட்டு விடுங்கள், அவரைப் பின்பற்றுங்கள். 47இப்பொழுது, ஆபிரகாம் தன்னுடைய ஜனங்களை விட்டு விட்ட பின்னர், அதற்குப் பலனாக எதைப் பெற்றுக் கொண்டான்? அப்படிச் செய்ததினாலே என்ன அவனுக்கு வந்தது? அவன் திரளான ஜாதிகளுக்கு தகப்பனானான். தேவன் அவனை அநேக தேசங்களுக்கு (father of many nations) தகப்பனாக ஆக்கினார். அவன் வைத்திருந்த சிறிய காரியத்தை விட்டு விட்டான், பிறகு அவன் என்னவாக ஆனான் என்பதைப் பாருங்கள். இயேசு, “எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னை .... தந்தைகளையும், தாய்களையும் இன்னும் காரியங்களையும் பெற்றுக்கொள்வான்” என்று கூறினார். எல்லாவற்றையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினதால் ஆபிரகாமுக்கு என்ன கிடைத்தது என்று பாருங்கள். ஆம், “திரளான ஜாதிகளுக்கு பிதா.' 48ஆனால், முதலாவதாக, அவன் தன்னைத் தானே எல்லா அவிசுவாசத்தினின்றும் தன்னுடைய குளிர்ந்து போன, வெதுவெதுப்பான, சபை அங்கத்தினனான சகோதரனாகிய லோத்தினிடமிருந்தும் தன்னை வேறு பிரித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அதற்காகவே, அவன் தானே எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியதாக இருந்தது. அவிசுவாசத்தைக் கொண்டிருக்கின்ற ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் உங்களை வேறு பிரித்துக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளீர்கள்; எந்த ஒன்றாக இருந்தாலும் சரி, அது ஒரு போதகமாக இருந்தாலும், நீங்கள் ஒரு சபையில் இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு போதகத்தின் பேரில் மாத்திரமே சார்ந்து கொண்டு வார்த்தையை விசுவாசிக்காமல் இருப்பது மற்றும் வார்த்தையானது காரியங்களுக்கு முரணாக.... அந்த போதகமானது வார்த்தைக்கு முரணானதாக இருக்குமானால், நீங்கள் அதை விட்டு விட வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். 49ஆபிரகாம் முற்றிலுமாக அவருக்குக் கீழ்ப்ப டியும் வரையிலும் தேவன் அவனை ஆசீர்வதிக்கவில்லை . ஆபிரகாம் தன்னுடைய தகப்பனை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பினான், அந்த வயதான மனிதன் பரிமளத்தைலத்தில் ஈ போன்று ஒத்துப் போகாதவனாக இருந்தான், எல்லா நேரங்களிலும் அப்படியாக இருந்தான். முடிவாக அவன் மரித்துப் போனான். பிறகு, லோத்தும் கூட இருந்தான். அப்பொழுது அங்கே வாக்குவாதமும் மற்றவையும் உண்டா யிருந்தது. அதன் பிறகு ஆபிரகாம் தேவனுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிந்து தன்னை வேறுபிரித்துக் கொண்டு லோத்து அங்கே இருந்த நல்ல நிலங்களுக்குச் செல்லும்படி, அவன் எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று விரும்பினானோ அங்கே செல்லும்படிக்கு விட்டு விட்டான், லோத்து சோதோமுக்குச் சென்றான். அதன் பிறகுதான் தேவன் ஆபிரகாமிடம் தோன்றி, “உன் கண்களை ஏறெடுத்து பார். அது முழுவதையும் நான் உனக்குக் கொடுத்தேன்” என்று கூறினார். ஆபிரகாம் தான் வேறு பிரிந்தான். தேவனைப் பின்பற்றும் படிக்கு, பின்பற்றத்தக்கதாக அவன் தான் எல்லாவற்றிலிருந்தும் வேறு பிரிந்தான். ஆகவே அவன் விசுவாசத்திற்கு தகப்பனாவான். விசுவாசமுள்ளவனாக இருந்தான் என்று நாம் விசுவாசிக்கின்ற ஆபிரகாம் தான் அவன். ''ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தமானது பண்ணப்பட்டது. கிறிஸ்துவுடனே மரித்தவர்களாகிய நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும் வாக்குத்தத்தத்தின்படியே அவருடைய சுதந்தரராயும் இருக்கிறோம்.'' 50இஸ்ரவேலர் எகிப்தை விட்டனர். அங்கே எகிப்தில் இருந்த நிலங்களை அவர்கள் விட்டு விட்டனர். எதைப் பெற்றுக் கொள்வதற்காக? பாலஸ்தீனாவை. அங்கே எகிப்திலே மிகவும் பயங்கரமான இடத்தையும், எகிப்தின் ஆளோட்டிகளையும் விட்டு வந்தனர். இன்றைக்கு அநேக மக்கள், வாலிபப் பெண்கள் அங்கே வெளியில் தெருவில் சிகரெட் பிடித்துக் கொண்டும், குடித்துக் கொண்டும், இருக்கின்றனர். அன்றொரு நாளிலே வானொலியில் கூறப்பட்டதை நாம் கேட்ட விதமாக இன்று நாம் காண்கிறோம். அங்கே தெருவில் அந்த பழைய பிசாசின் ஆவியைத் தங்கள் மேல் கொண்டிருந்து, இந்த புதியதான பூகிலி உகிலி (பூகி ஊகி, Boogie Woogie இசையை தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) இசையை இசைத்து, எந்தப் பெயர் கொண்ட இசையாக இருந்தாலும் சரி, அங்கே தெருவில் மிகவுமாக கட்டுமீறி, மனமாறாட்டமான நிலையில் ஆடிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்கள் கூட்டத்தை கைது செய்ய போலீஸ் வர வேண்டியதாயிருந்தது. பாருங்கள்? உண்மையாக, ஒரு வாலிப ஸ்திரீ தன்னைக் குறித்து ஒரு மிகச் சிறிய அளவு பண்பு நலனைக் கொண்டிருப்பாளானால், அவளோ அல்லது ஒரு வாலிபனோ அல்லது அவர்களில் ஒருவரோ சரி, அந்தக் காரியம் தான் அவர்கள் அதைச் செய்யும்படிக்குச் செய்யும் ஆளோட்டியாகும். நீங்கள் அதை விட்டுவிடுங்கள், அப்போது தேவன் உங்களுக்கு ஒரு நடனத்தை அளிப்பார். ஓ, என்னே! நிச்சயமாக அவர் செய்வார். நீங்கள் அதை விட்டுவிட மாத்திரம் செய்தால் அவர் ஒன்றை உங்களுக்குத் தருவார். ஆனால் அதைக் கொண்டிருக்க வேண்டுமென்றால் நீங்கள் அந்த எல்லாக் காரியங்களையும் விட்டுவிட வேண்டியவர்களாக இருக் கின்றீர்கள். அந்த இரண்டுடனே உங்களால் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. 51அவன் பாலஸ்தீனத்தைப் பெற்றுக் கொண்டான், ஆபிரகாம் செய்தான் அல்லது இஸ்ரவேலர் செய்தனர், அவன் நிலத்தை விட்டதினால் பாலஸ்தீனாவை பெற்றுக் கொண்டான். அவர்கள் அங்கே இருந்த அந்த தேசத்தை விட்டனர். பிறகு பாலும் தேனும் ஓடின தேசமாகிய பாலஸ்தீனாவைப் பெற்றுக் கொண்டனர். ஆம், ஐயா. அவர்கள் எதை விட்டனர்? அவர்கள் தகிக்கின்ற சூரியனின் கீழ், எகிப்திலே ஆளோட்டிகளின் கீழாக இருப்பதை அவர்கள் விட்டனர். அந்த வெப்பமான சூரியனை விட்டதற்காக அவர்கள் எதைப் பெற்றுக் கொண்டனர்? அக்கினி ஸ்தம்பத்தின் வெளிச்சத்தின் கீழ் நடக்கின்றதான காரியத்தைப் பெற்றுக் கொண்டனர். அங்கே இருந்த அந்த வெப்பமான சூரியனை விட்டு விட்டு தேவனுடைய அக்கினி ஸ்தம்பத்தின் வெளிச்சத்தில் நடக்கும்படியாக ஆனது. என்ன ஒரு பரிமாற்றம்! அந்த பரிமாறிக்கொள்ளுதலை எடுத்துக் கொள்ள நான் விரும்புகிறேன். நீங்களும் கூட அவ்விதமாக செய்யலாமே? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) அக்கினி ஸ்தம்பம். இயற்கையான சூரிய வெளிச்சத்தில், அங்கே ஆளோட்டிகள் அவர்களை விரட்டிக் கொண்டிருந்தனர் ; அங்கேயிருந்து வெளியே வந்து தேவனுடைய வெளிச்சத்தின் கீழ் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் வந்தனர், அக்கினி ஸ்தம்பம் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நடத்திக் கொண்டிருந்தது. இன்றைக்கும் கூட அதே காரியம் தான். தேவனுடைய வெளிச்சத்தில் நடக்கும்படிக்கு இந்த உலகத்திலிருந்து, உலகத்தின் காரியங்களிலிருந்து வெளியே நடந்து வருதல், அது உங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்துகிறது. 52அவர்கள் எகிப்தில் வெள்ளைப் பூண்டு பானைகளையும். மாம்சப் பானைகளையும் கூட விட்டு விட்டு வந்தனர். அந்த பழைய இறைச்சிப் பானைகளை விட்டுவிட்ட போது அவர்களுக்கு என்ன கிடைத்தது? அவர்களுக்கு உணவாக தூதர்களின் ஆகாரம் கிடைத்தது. வெள்ளைப் பூண்டின் இடத்தை எடுக்க வானத்திலிருந்து மன்னா கீழே வந்தது. இப்பொழுது, வெள்ளைப் பூண்டைத் தவிர வேறு எந்த ஒன்றையும் நீங்கள் சாப்பிட்டதில்லையென்றால், இப்பொழுது நான் உங்களுக்கு ஒன்றைக்கூறப் போகிறேன். உங்களை போஷிக்கும்படிக்கு தேவன் பரலோகம் முழுவதுமாக தூதர்களின் ஆகாரத்தை உங்களுக்கென கொண்டிருக்கிறார். அது சரியே. தூதர்களின் ஆகாரம் - எகிப்தின் பழைய வெள்ளைப் பூண்டிற்கு பதிலாக இதைத்தான் அவர்கள் பெற்றுக் கொண்டனர். எகிப்தின் சேறும் சகதியுமான தண்ணீர்களை அவர்கள் விட்டனர். அங்கே வெளியே அவர்களுக்கு என்ன கிடைத்தது? வனாந்திரத்தில் அடிக்கப்பட்ட அந்த கன்மலையிலிருந்து கண்ணாடி போன்ற சுத்தமான தேவனுடைய தண்ணீரை அவர்கள் பெற்றுக் கொண்டனர். அவர்கள் எகிப்தின் சேறும் சகதியுமான, தலைகீழான சேறும் சகதியுமான ஸ்தாபன தண்ணீரை அவர்கள் விட்டனர். 53இன்றைக்கு நாமும் கூட அதைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். ''அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டன. அந்த ஆட்கள் மனநிலை தாறுமாறானவர்கள் ஆவர். அவர்கள் ஒரு உருளும் பரிசுத்தர் கூட்டம் மாத்திரமே“ என்று கூறுகின்ற அந்த பழைய போதகத்தையும் ஸ்தாபனத்தையும் விடுங்கள். அந்த காரியத்தை பின்னாலே அப்படியே விட்டு விடுங்கள், இங்கே வாருங்கள். இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுக்கு வந்து பருகுங்கள். இந்த ஊற்றில் மூழ்கும் பாவிகளின் பாவக்கறைகள் அகன்று போகும். ஆம், ஐயா. சந்தேகம், கலக்கங்கள், வாதங்கள், மனக்குமுறல்கள் மற்றும் எல்லாவற்றாலும் கலந்து நிறைந்திருக்கின்ற சேறு நிறைந்த அந்த பழைய தண்ணீரை விடுங்கள். அவர்கள் பிரசங்கிக்குக் கொடுப்பதற்காக இரவு நேரங்களில் சென்று ஒரு சூப் ஆகாரத்தை சாப்பிட்டு கோழிக்கறி துண்டுகள் சிலவற்றை எடுத்து கொதிக்க வைத்து ஒரு தட்டு ஐம்பது செண்டுகளுக்கு விற்கின்றனர். ஆனால் இங்கே தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழாக வருவீர்களானால், தேவனுடைய பரிசுத்த பிரமாணங் களுக்குக் கீழாக வந்து தேவனோடு நடப்பீர்களானால், நீங்கள் உங்கள் தசமபாகங்களை செலுத்துவீர்கள். அப்போது பிரசங்கி அருமையாக காரியங்களைச்செய்வார், நீங்கள் மாத்திரம் அதைச் செய்வதற்காக தேவனுடைய வழியை எடுப்பீர் களானால் நல்லது. சரி. பழைய சேறும் சகதியுமான தண்ணீ ரி லிருந்து வந்து கன்மலையிலிருந்து வந்த தண்ணீரைக் குடித்தல். 54“நாங்கள் தான் இன்றைக்கு மிகவும் சாமர்த்திய சாலிகளான மனிதர்” என்று கூறி பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த எகிப்திய வைத்தியர்களை அவர்கள் விட்டு வந்தனர். அந்த தற்பெருமை கொண்ட வைத்தியர்களை விட்டு விட்டு, அந்த மகத்தான வைத்தியருடன் இருக்கத்தக்கதாக அவர்கள் வந்தனர். ஆமென். அந்த மகத்தான வைத்தியர் செய்ததைப் போலவே மருத்துவர்கள் செய்வதை நான் காண விரும்புகிறேன். அந்த மக்கள் வனாந்திரத்தில் நாற்பது வருஷங்கள் இருந்தனர், அவர்கள் மத்தியிலே - மத்தியிலே வெளியே வந்தவர்களில் எந்த ஒரு பலவீனரும் இருக்கவில்லை . நாற்பது வருடங்களாக எந்த ஒரு பலவீனரும் அவர்கள் மத்தியில் காணப்படவில்லை. அந்த சமயத்திலே வெளியே வந்தவர்கள் சுமார் இருபது இலட்சத்திற்கும் மேலானவர்கள் இருந்தனர். ஒவ்வொரு இரவும் எத்தனைக் குழந்தைகள் பிறந்திருக்கும்? எத்தனைப் பேர் வியாதியாயிருந்தனர்? ஆகவே அவர்கள் ..... நான் டாக்டர் மோசேயிடம் சென்று அவனுடைய பையினுள்ளே பார்த்து எந்த விதமான ஒரு மருந்து சீட்டை அவர்களுக்கு அளித்துள்ளான் என்பதை பார்க்க எனக்கு விருப்பம். அதைக் காண நீங்களும் விருப்பங்கொள்வீர் களல்லவா? அந்த மருந்து சீட்டு என்னவென்பதைக் காண நிறைய மருத்துவர்கள் விரும்பலாம் என்று நான் கற்பனை செய்து பார்க்கின்றேன். சரி, என்னால் அதைக் கூற முடியும். அது என்னவென்பதை நான் வாசித்துள்ளேன். அது என்னவென்று நான் உங்களுக்குக் கூறவேண்டுமென்று நீங்கள் விரும்பு கிறீர்களா? “உன் நோயையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே.” அதை மாத்திரம் தான் மோசேவைத்திருந்தான். அது தான் அவனுக்குத் தேவையாயிருந்தது. ஏனென்றால் அவர்கள் அந்த வீண் பெருமை பாராட்டிக் கொண்டிருந்த அந்த வைத்தியர்களை விட்டு விட்டு மகத்தான வைத்தியரிடம் இருக்கும்படிக்கு வந்தார்கள். ஆம். ஐயா. 55“அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது. இனிமேல் அற்புதங்கள் என்கின்ற எந்த ஒரு காரியமும் இருக்கப் போவதில்லை” என்று கூறின அங்கிருந்த மக்களை அவர்கள் விட்டனர். எதைச் செய்வதற்காக அவர்கள் அதை விட்டு விட்டனர்? அதன் பிறகு அவர்கள் என்ன செய்தனர்? ஒவ்வொரு நாளும் அற்புதங்கள் நிகழுகின்ற அந்த பிரசன்னத்திற்குள்ளாக இருக்கும்படிக்கு அவர்கள் செய்தனர். ஆமென். அற்புதம் என்கின்ற ஒன்று கிடையாது என்று இன்று கூறுகின்ற மக்களைப் பார்க்கும் போது அவர்களுடைய மனதிற்கு ஏதோ ஒரு கோளாறு நேர்ந்து விட்டது என்பது காரியமாகும். அது சரியே. 56ஒரு சமயத்திலே ஒரு நபர் என்னிடமாக, “நீங்கள் என்ன செய்திருந்தாலும் அதைக்குறித்து எனக்கு அக்கறையில்லை. அதைப் பெரிதாகக்கூட நான் எண்ணுகிறதில்லை. நீங்கள் எவ்வளவாக அதற்கான அத்தாட்சிகளைக் கொண்டிருந்தாலும் என்னால் அதை பொருட்படுத்த முடியாது. அதை நான் நம்புவது கிடையாது” என்று கூறினார். அதற்கு நான், “நிச்சயமாக முடியாது. உங்களால் அதை ஒருக்காலும் காணவே முடியாது. அதைக் காண்பதற்கு நீங்கள் மிகவுமாக குருடாயிருக்கிறீர்கள்” என்று கூறினேன். அது சரியே. மேலும் நான், “அது அவிசுவாசிகளுக்கு அல்ல. அது விசுவாசிகளுக்கு மாத்திரமே. விசுவாசிகள் அதைக் காண்பார்கள்” என்றேன். அது சரி. ஒரு சமயத்திலே ஒரு ஆள் என்னை தெருவில் சந்தித்து, “உங்கள் போதகத்தில் நீங்கள் தவறாயிருக்கிறீர்கள்” என்றார். நான், “அது வேதாகமப் பூர்வமானது” என்றேன். அதற்கு அவர், “நீங்கள் தவறாயிருக்கிறீர்கள்” என்றார். மேலும் அவர், “நான் உங்களுக்கு எதிராயிருக்கிறேன்”, என்றார். பிறகு அவர், “என்னை குருடாக்குங்கள் பார்க்கலாம். ஒரு சமயத்தில் பவுல் ஒருவனை குருடாக்கினான். என்னையும் குருடாக்குங்கள் பார்க்கலாம்” என்றார். நான், “என்னால் - என்னால் - என்னால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் ஏற்கெனவே குருடாயிருக்கிறீர்கள். ஆமாம், நீங்கள் .... உங்கள் பிதாவாகிய பிசாசானவன் ஏற்கெனவே உங்களுக்கு செய்திருப்பதை நான் எப்படிச் செய்ய முடியும்? நீங்கள் ஏற்கெனவே குருடாயிருக்கிறீர்கள்'' என்றேன். அது சரியே. அவ்விதமான ஒரு காரியத்தைக் கூறும் மனிதனானவன் இருளுக்கும் பகல் வெளிச்சத்துக்கும் வித்தியாசம் அறியக்கூட முடியாத அளவிற்கு மோசமான குருடனாக இருக்கின்றான். ஜீவன் மரணம் ஆகிய இரண்டடையும் அவனால் பகுத்தறிய முடியாது. அது தான் உண்மையாக குருடாயிருப்பதாகும். ஆமாம், ஐயா. ஆம். 57அந்த மகத்தான வைத்தியர் அவர்களுடன் இருந்தார், அற்புதங்கள் நிகழ்ந்ததை அவர்கள் கண்டனர், நிச்சயமாக. அந்த சீஷர்கள் எதை விட்டனர்? அவர்கள் வலைகளை, மீன் பிடிக்கும் வலைகளைக் கொண்டிருந்தனர், அவருடனே நடந்து மேசியாவாக இருந்த அவருடைய அடையாளங் களையும், அற்புதங்களையும், அவருடைய வல்லமையும் காணும்படிக்கு அவர்கள் தங்களுடைய மீன் வலைகளை விட்டனர். அதைப் பின்பற்றும்படிக்கு ஒருவன், ஒரு நாளுக்கான மீன் பிடிக்கும் பணியைக் கூட விட முடிய வில்லையெனில், ஏதோ தவறு இருக்கின்றது. அவர்கள் முழுவதுமாக மீன்களால் நிறைந்திருந்த தங்கள் வலைகளை அப்படியே விட்டு விட்டார்கள். அதுவரைக்கும் தாங்கள் பிடித்திராத அளவிற்கு அதிகளவில் மீன்களைப் பிடித்திருந்தார்கள். அப்பொழுது அவர்கள் வலையை இழுக்கத் துவங்கினார்கள். ஆகிலும் அவரைப் பின்பற்றும்படிக்கு அதின் ஒவ்வொன்றையும் அவர்கள் விட்டு விட்டனர், ஏனென்றால் அவர்தான் மேசியா என்று தங்கள் இருதயங்களில் விசுவாசித்தனர். ஆகவே மேசியா என்கின்ற விதத்திலே அவரை அந்த அடையாளங்கள் பின் தொடருகின்றதை காணும்படிக்கு அவர்கள் அவரைப் பின்பற்ற விரும்பினர். அது முதல் அவர்கள் அதைக் காணவும் செய்தனர். 58இயேசு தம்மை வெளிப்படுத்துவதை, விசேஷமாக அது தாமே என்னுடைய வாழ்க்கையில் தத்ரூபமாக்கப்பட்டு, நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக பிரவேசித்து விட்டேன் என்பதை அறிந்து, அவர் தான் அந்த மேசியா என்று நான் அறியும்படிக்காக உலகத்திலுள்ள எந்த ஒரு காரியத்தையும் நான் விட்டு விடுவேன், அது எதுவாயிருந்தாலும் அதைக்குறித்து நான் அக்கறைக் கொள்ள மாட்டேன். அவரை, அவருடைய வார்த்தையின் பேரில் எடுக்கையில் அவர்தாமே என்னை பாவ வாழ்க்கையிலிருந்து என்னை இரட்சித்தார் என்பதை நான் அறிவேன். பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளாக வாசம் செய்கிறார் என்பதை நான் அறிவேன். அதை நோக்கிக் காண்பிக்கும் அவருடைய அடையாளங்களை எல்லா இடங்களிலும் நான் பார்க்கின்றேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை நான் அறிவேன். எல்லா வற்றையும் விட்டு விடுகிறேன். எந்த ஒன்றையும் நான் விட்டு விட விரும்புகிறேன். 59நான் ஒரு அருமையான ஸ்தாபனத்தை, ஒரு அருமையான சபையை, இந்த நாட்டில் இருக்கின்ற சிறந்த சபைகளில் ஒன்றைச் சேர்ந்தவனாக இருந்தேன். அவர்கள் என்னிடம், 'பில்லி, நீங்கள் உன் மனநலத்தை இழந்து ஒரு பரிசுத்த உருளையனாக மாறப்போகின்றீர்“ என்று கூறினர். சரியாக அப்பொழுதே நான், “நீங்கள் இப்பொழுதே என்னுடைய ஐக்கியச்சீட்டை திரும்ப எடுத்துக் கொள்ளலாம், ஏனென்றால் நான் பரிசுத்த ஆவியைப் பின்பற்றப் போகிறேன்” என்று கூறினேன். அது உண்மை . உண்மை . அவரைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் எல்லாவற்றையும் விட்டு விட வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். அது சரியே, ஆகவே எல்லாவற்றையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்று கிறவனுக்கு தேவன் திரளான சம்பூரண ஆசீர்வாதங்களாகத் திருப்பித் தருகின்றார். அதனுடன் ஒப்பிடுவதற்கு எதுவுமே யில்லை . அது சரி. 60இப்பொழுது, சீஷர்கள் தங்கள் வலைகளை விட்டனர், முழுவதுமாக மீன்களால் நிறைந்திருந்த வலைகளையும், தங்கள் தொழிலையும் விட்டனர். கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றவும், அவருடைய வல்லமையைக் காணவும், அந்த அடையாளத்தைக் காணவும் அவர்கள் தங்கள் தொழிலையும் விட்டனர். அந்த மனிதர் தேர்ந்த மனிதராவர். மேசியா எதைச் செய்பவராக இருப்பார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் அதை வேதாகமத்தில் வாசித்திருந்தனர். மேசியா என்ன செய்யவிருக்கின்றார் என்பதை சரியாக அவர்கள் புரிந்து கொண்டனர். அது நடக்கவேண்டிய நேரமானது சமீபம் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே இந்த மனிதன் காட்சியிலே தோன்றி காரியத்திலே சரியாக பொருந்தின இவரை அவர்கள் கண்டவுடனே, அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்பதற்காக, அப்பொழுதே அவர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டனர். ஏனென்றால் அது மேசியாவாக இருக்கு மானால் அது அவர்களுக்கு ஜீவனாக இருந்தது, ஏனென்றால் அவரைப் பின்பற்றும்படிக்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டனர். 61அதே போலத்தான் இன்றைக்கும் கூட, முன்மாரியும், பின் மாரியும் ஆகிய இரண்டையும் ஊற்றுவேன் என்று அவர் கூறியிருக்கின்ற, இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் இந்த செய்தியானது, இது சரியானதாக இருக்குமென்றால், இந்த காரியங்களானது சரியானது தான் என்றால் எல்லாவற்றையும் விட்டு விடுவது மிகவும் மேன்மையான ஒன்றாகும். அதைப் பின்பற்றுங்கள். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக் கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று இயேசு கூறினார். அது உண்மை . 62“நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப் படுத்தாது. வியாதியஸ்தர் மேல் அவர்கள் கைகளை வைத்தால் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.'' அதைத் தான் அவர் கூறியுள்ளார். “பிதா என்னை அனுப்பினது போல நான் உங்களை அனுப்புகிறேன்.” குமாரனை அனுப்பின அந்த பிதாவானவர், குமாரனுடன் கூட சென்றார், குமாரனுக்குள்ளும் இருந்தார். ஒரு மனிதனை அனுப்பின இயேசுவானவர் தாமே, அந்த மனிதரோடே கூடச்சென்று அந்த அதே கிரியைகளை செய்யும் படியாக அந்த மனிதனுக்குள்ளும் இருக்கின்றார். “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கின்றேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்”. 63சகோதரனே, அதை முழுவதுமாக மறுதலிக்கின்ற அங்கிருக்கின்ற ஏதோ ஒன்றைச் சார்ந்திருக்கின்ற, உலகத்தின் பழைய போதனைகளும் மற்றும் அந்தப்படியான காரியங்களைக் காட்டிலும் அது மேலானதல்லவா! என்ன, ஜீவிக்கின்ற ஜீவன் நம் மத்தியில் இந்த விதமாக அசைவாடுகையில்; அவரைப் பின்பற்றும்படிக்கு நாம் எல்லாவற்றையும் விட்டுள்ளோம் என்பதை அறிந்தவர்களாகிய நாம்தாம் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியுள்ள மக்களாக இருக்கவேண்டுமென்று நான் நினைக்கின்றேன். ஆமென். அது என்னை பக்திப்பரவசமாக்கு கின்றது. கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றும்படிக்கு எல்லாவற்றையும் விட்டு விடுதல். அதே போன்று தான் இன்றைக்குக் கூட, நீங்கள் எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். அங்கே முன்பு அவர்கள் செய்தது போல, நீங்களும் கூடசெய்ய வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். 64இப்பொழுது, நீங்கள் ஒருவர் ஒன்றை விட்டு விடுவதைக் குறித்து பேசுகிறீர்களே, இயேசு எதற்காக, இயேசு நமக்காக எதை விட்டு விட்டார் என்பதை நாம் பார்ப்போமாக. இயேசு எல்லாவற்றையும் விட்டு விட்டார். அவருக்கு பரலோகத்தில் ஒரு வீடு இருந்தது. பரலோகத்தில் இருந்த தம்முடைய வீட்டை அவர் துறந்து பூமிக்கு வந்து தம்முடைய தலையைச் சாய்க்கக் கூட இடமில்லாதவராக அவர் இருந்தார். அது சரியே. அவர் மிகவுமாக தாழ்ந்து, அவராலே ஒரு ... . தாம் படுத்து உறங்குவதற்கு ஒரு கட்டில் கூட அவருக்கு இல்லாத அளவிற்கு மிகவும் ஏழையாக இருந்தார். அவர், “நரிகளுக்கு குழிகள் இருக்கின்றது, ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் இருக்கின்றது. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்று கூறினார், பாருங்கள்? ஆகவே அதற்காக அவருக்கு திருப்பி அளிக்கப்பட்டது என்ன? பரலோகத்தைப் பார்க்கும்படி தலையை கீழே குனிந்து பார்க்க வேண்டிய அளவிற்கு அவர் மிகவுமாக உயர்த்தப்பட்டார். அவர் உலகத்துக்கு வந்தார், உலகத்தில் இருப்பதிலேயே இழிவான ஒரு பெயரே அவருக்கு வழங்கப்பட்டது. அவர் மிகவும் கீழ்த்தரமான ஒரு பெயரைக் கொண்டிருந்தார், மிகவும் கீழ்த்தரமான ஒரு பெயரை எடுத்துக் கொண்டார். அவர் பெயல்செபூல் என்று அழைக்கப்பட்டார். பெயல்செபூல், பெயல்செபூல் என்பது .... அவர் அந்த ஆவிகளை அந்த விதமாக பகுத்தறிவதை அவர்கள் கண்டபோது, “அவன்குறிசொல்பவன். அவன் பெயல்செபூல், ஒரு பிசாசு” என்று கூறினர். குறி சொல்லுதல் என்பது பிசாசாகும். அவர்கள் அவரை இருந்ததிலேயே மிகவும் கீழ்த்தரமானதான பிசாசு என்று அழைத்தனர். அவர் மிகவும் கீழ்த்தரமான ஒரு பெயரைக் கொண்டிருந்தார். 65அவர் மிகவும் கீழ்த்தரமான ஒரு நகரத்துக்குச் சென்றார். அந்நகரத்தில் இருந்த குள்ளமான ஒரு மனிதன் அவரை அவருக்கு மேலேயிருந்து அவரைக் கீழாகப் பார்த்தான் ; அவன் சகேயு ஆவான், அது - அது சரியே, எரிகோவில் இது சம்பவித்தது. கீழாகப் பார்த்தான், நிச்சயமாக அதைச் செய்தான். பூமியில் இருந்ததிலேயே மிகவும் இழிந்த, கீழ்த்தரமான ஒரு பெயரை அவர் கொண்டிருந்தார், அவர் பூமிக்கு “ முறை தவறிப் பிறந்தவன்” என்னும் பெயருடனே வந்தார், அவ்விதமாக அவரை அவர்கள் அழைத்தனர். ஏனென்றால் அந்த குழந்தையானது பரிசுத்த விவாகத்துக்குப் புறம்பே பிறந்த ஒன்று என்று அவர்கள் உண்மையாகவே நம்பினர். ஆரம்பத்திலே காரியமானது அவ்விதமாக இருந்தது. அதை அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகு, கீழ்த்தரமான ஒரு பெயரைப் பெற வேண்டுமென்றால் அந்த விதமான பெயராகிய பெயல்செபூல் என்னும் பெயரைக் கொண்டு அவரை அவர்கள் அழைத்தனர். அவர் அதை எடுக்கத்தக்கதாக அவர் தம்முடைய பரலோக இடத்தை விட்டு விட்டு வந்தார். ஆனால், தேவன் அவருக்கு, பரலோகத்தில் அழைக்கப் படுகின்ற நாமத்தைக் காட்டிலும், பரலோகத்தில் மற்றும் பூமியில் உள்ள முழு குடும்பத்துக்கும், கர்த்தராகிய இயேசு என்று பெயரிடப்படும்படியாக மேலான ஒரு நாமத்தை அளித்தார். அல்லேலூயா! அது தான். அவர் விட்டு விட்டார்; அதற்கான பரிசை அளிக்கப் பெற்றார். நிச்சயமாக, அவர் செய்தார். அது சரியே. 66வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர் பூமிக்கு வந்தார், ஆனால் சாப்பிடுவதற்கு அவருக்கு எதுவுமே இல்லாதிருந்தது. நமக்காக அவர் உபவாசம் இருக்கையில் சாத்தான் அவரை சோதித்தான், ஆனால் மற்றவர்கள் அறியாதிருந்த அந்த போஜனத்தை அவர் பெற்றுக் கொண்டார். ஒரு நாளிலே அவர், “என்னிடம் ஆகாரம் உண்டு” என்றார். “நீங்கள் வந்து சாப்பிடலாமே?” என்றனர். 67அவர், “நீங்கள் இதுவரை அறியாதிருக்கின்ற ஆகாரத்தை நான் கொண்டிருக்கிறேன்” என்றார். அது சரி. அவர்கள் அறியாதிருந்த ஆகாரத்தை அவர் கொண்டிருந்தார். இங்கே பூமியில் அவருக்கு தங்குவதற்கு ஒரு கூடாரம், புகலிடம் (shelter) இருக்கவில்லை , ஒரு இடம் இல்லாதிருந்தது. ஒரு வீடு இல்லாதிருந்தது, எதுவுமே அவருக்கு இல்லாதிருந்தது. ஆனால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அவர் நம் ஒவ்வொருவருக்கும் புகலிடம், அடைக்கலமானார். தேவன் அவரை முழு மானிட இனத்திற்கும் அடைக்கலம், புகலிடமாக்கினார். அவருக்கு தமக்கென தங்குவதற்கு ஒரு இடமில்லாதிருந்தது. ஆனால் அவர் தாம் நம்முடைய அடைக்கலமானவர். அணுகுண்டு தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள பூமிக்கு அடியில் மக்கள் அமைத்திருக்கும் அணுகுண்டு வெடி புகலிடத்தைக் குறித்து மிக அதிகமாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஓ , என்னே! நாமும் ஒன்றைக் கொண்டிருக்கிறோம். அது சரி. அணுகுண்டு வெடி புகலிடம், பூமியில் ஒரு துளையைப் போட்டு அதனுள்ளாகச் செல்லுதல், மேலும் அவர்கள், “அந்த அணு குண்டுகள் பூமியின் மீது விழுந்து சுமார் நூற்று ஐம்பது அடி ஆழமும் சுமார் நூற்றுச் சொச்சம் மைல்கள் அளவிற்கு அகலமும் கொண்ட ஒரு பெரிய துளையை உருவாக்கும்” என்று என்னிடமாகக் கூறினார். என்ன, நீங்கள் பூமிக்கு அடியில் அரை மைல் தூர அளவிற்கு கீழே இருந்தாலும் உங்கள் ஒவ்வொரு எலும்பையும் அது நொறுக்கிப் போடும். நிச்சயமாக, அது எந்த இடத்திலும் அவ்விதம் செய்யும். ஆனால் நமக்கு ஒரு புகலிடம், அடைக்கலம் இருக்கிறது. கிறிஸ்துவே நம்முடைய அடைக்கல மானவர். ஆமென். 68அன்றொரு இரவு நான் கூறினது போன்று, ரஷியா தன்னுடைய மகத்தான காரியத்தைக் குறித்து பெருமை பாராட்டிக்கொண்டிருந்தது. “நாங்கள் முதன் முறையாக ஒரு மனிதனைவிண்வெளிக்கு அனுப்பியுள்ளோம்” என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர். அந்த கருத்துடன் நான் வேறுபடுகின்றேன். இரண்டாயிரம் ஆண்டுகளாக நாம் ஒருவரை விண்வெளியில் கொண்டிருக்கின்றோம். ஆமென். அது சரியே. ஆம் ஐயா. ஒரு மத்தியஸ்தர். ஆம் ஐயா, அவர் பரலோகத்துக்குள்ளாகச் சென்று அரை நொடிப் பொழுதில் திரும்ப வருகின்றார். நிச்சயமாக, நாம் ஒரு மனிதனை விண்வெளியில் கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு எதுவுமே இல்லை . ஆம், ஐயா, அது சரி, நாம் காண்பது என்னவென்றால் அவருக்கு ஒரு ... அவர் நம்மெல்லாருக்கும் புகலிடமாக ஆக வேண்டியதாக இருந்தது. 69நமக்காக பாவமாக்கப்படும்படியாக தமக்கும் பிதாவுக்கும் இடையே இருந்த தம்முடைய குமாரத்துவத்தை அவர் துறந்தார். அது உங்களுக்குத் தெரியுமா?“ அவர்பாவம் அறியாதவர்; நமக்காக பாவமானார். நம்முடைய பாவங்கள் அவர் மீது வைக்கப்பட்டது.” அவர் பாவமாகத்தக்கதாக குமாரத்துவத்தை விட்டார், இப்பொழுதோ அவரால் பாவிகளை குமாரன்களாக ஆக்க முடியும். ஆமென், அது தான் அருமையான பகுதியாகும், பாவிகளை எடுத்து குமாரர்களாக ஆக்குதல். ஆமென். பாவமாகும்படியாக அவர் தம்முடைய குமாரத்துவத்தை விட்டதால் இப்பொழுது அவர் பாவிகளை எடுத்து அவர்களிலிருந்து குமாரர்களைச் செய்கின்றார். ஆமென். எப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியம்! ஆம் ஐயா. தேவனை எந்த விதத்திலும் தாழ்த்தி மதிப்பீடு செய்ய முடியாது. முடியாது ஐயா, உங்களால் இதைச் செய்ய முடியாது. ஏனென்றால் அவைகள் நடக்கும்படிக்கு தேவன் பார்த்துக் கொள்கிறார். இப்பொழுது அவர் தாமே கிரயம் கொடுத்து பாவிகளை எடுத்து அவர்களிலிருந்து தேவனுடைய குமாரர்களை செய்தெடுக்கும்படியாக, அவருடைய குமாரன் பாவ பலியாக ஆனார். அது என்ன ஒரு அழகான காரியமாகும். ஆமாம். 70இப்பொழுது, ஆம், ஐயா, அவர் - அவர் தம்முடைய பெலத்தை அளித்தார். நம்முடைய பெலனாக அவர் இருக்கும்படியாக அவர் பெலவீனரானார். அவர் தாமே நம்முடைய எல்லாவற்றிற்கும் போதுமான பெலன் ஆவார். கர்த்தராகிய இயேசுவின் பெலனைத் தவிர வேறே ஒரு பெலன் நமக்குத் தேவையேயில்லை. “ஒவ்வொரு நாளுக்கான பெலன் அவரே. அவரில்லாமல் நான் விழுந்து போவேன்” என்று கவிஞர் கூறியுள்ளான். அது எவ்வளவு அற்புதமானது! நீங்கள் எதை விட்டு விடுகிறீர்களோ; நீங்கள் எதை விட்டாலும் ஒன்றைப் பெற்றுக் கொள்கிறீர்கள்! என்னே! உலகத்தை விட்டு விடுங்கள். உங்கள் சொந்த கருத்துகளை விட்டு விடுங்கள். உங்கள் சந்தேகங்களை விட்டு விடுங்கள். உங்கள் மனக்குமுறல்களை விட்டு விடுங்கள். அதை விட்டு விட்டு அவரைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவரை விசுவாசியுங்கள். “ இப்பொழுது, அப்படித்தானே? அற்புதங்களின் நாட்கள் கடந்து போனதா?” என்பார்கள். அப்படிப்பட்ட கருத்தை விட்டு விடுங்கள். அதை விசுவாசியுங்கள். 71யாரோ ஒருவர், “உண்மையாகவே இயேசு சுகமளிப்பவரா, அல்லது இது வெறுமனே ஒரு மன உணர்ச்சியா, அந்த மக்கள் அதைத்தான் கொண்டிருக்கின்றனரா?” என்று கூறினார். அந்தக் கருத்தை ஒரு விசை அப்படியே விட்டு விடுங்கள். “இப்பொழுது, அது சரியா அல்லது இல்லையா என்று எப்படி உங்களுக்குத் தெரியும். அது ஒரு வாக்குத்தத்தமாகும். அவ்விதமாகத் தான் அதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள், “ஓ, அங்கே முற்காலத்திலே, நீண்ட காலத்திற்கு முன்னர் இருந்த மக்களுக்கு, சீஷர்களுக்கு மாத்திரம் தான் பரிசுத்த ஆவி அருளப்பட்டது என்று நான் நம்புகிறேன்” என்று நீங்கள் கூறலாம். ஓ, அவ்விதமாக இருக்கமுடியாது. அது அப்படியாக இருக்குமானால், வேதாகமம் தன்னைத் தானே முரண்படுத்திக் கொள்கிறது என்பதாகும். பெந்தெகொஸ்தே நாளிலே பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது' என்று கூறினான். அப்படியானால் அது தேவனுடைய வாக்குத்தத்தமாகும், பரிசுத்த ஆவி பெறுவதற்கென தேவன் எல்லாரையும் வரவழைக்கையில், நாம் வருவதற்கு நமக்கு உரிமையுண்டு. அது நம்மால் முடியும். அதைக்குறித்த கருத்துகளை விட்டு விடுங்கள். அதைக் குறித்த தேவனுடைய உறுதியான வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். 72நீங்கள், “மக்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதானது அல்லது ஏதோ ஒரு முட்டாள்தனமான ஒன்று அல்லது குழந்தைகளின் பிதற்றுதலைப் போல அவர்கள் செய்கின்றனரே, அப்படிப்பட்ட ஒன்று இருக்கின்றதா?” எனலாம். அதைக் குறித்த உங்கள் சொந்த கருத்தை விட்டு விடுங்கள். இயேசு இதைக் கூறினார், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள். வேதாகமம் அவ்விதமாகக் கூறுகின்றது. ஆம், ஐயா. “சகோதரனே, கூட்டங்களில் நான் காண்கின்ற இந்த அடையாளங்கள், தேவனாலான ஒன்றாக இருக்கக்கூடுமோ?” நிச்சயமாக, அது அவ்விதமே. “சரி, மக்கள் எந்தவிதமான ஒரு வாழ்க்கையும் வாழ்ந்து, அவர்கள் வியாதியஸ்தருக்காக ஜெபம் ஏறெடுக்கப்படும் போது சென்று ஜெபிக்கப்பட்டு அவர்கள் சொஸ்தமாவதைக் கண்டேன். நான்....' இயேசு, “என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக் குறித்து தீங்கு சொல்லமாட்டான்” என்று கூறினார். அது சரியே. ஒரு மனிதன் தவறாக இருந்து தேவனுடைய வரத்தை எடுத்து தவறான ஒன்றைச் செய்வானானால், தேவன் அவனைப் பார்த்துக் கொள்வார். ஆனால் தேவன் தாமே அதைச் செய்கின்றார். நிச்சயமாக, அது அப்படியே. அவன் ஒரு மாய்மாலக்காரனாக இருக்கின்றபடியால் அது உங்களுக்கு மிகவும் பளபளப்பாக காணப்பட்டாக வேண்டும். உங்களால் ஒன்றை ...... உண்மையான ஒன்றை நீங்கள் கொண்டிருக்கும் படியான ஒரே வழி என்னவென்றால்.... ஒரு - ஒரு போலியான டாலர் நோட்டானது, உண்மையான ஒன்றிலிருந்து தான் செய்யப்பட வேண்டும். 73ஒவ்வொருவரும், “நான் சபைக்கு போகமாட்டேன். சபைக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. அதில் மிக அநேக மாய்மாலக்காரர்கள் இருக்கின்றனர்' என்று கூறுகின்றனர். அப்படிக் கூறுவதனால் நீங்கள் இன்னுமாக தரம் குறைவானவர்களாக இருக்கின்றீர்கள். அவர்களுக்குப் பின்னால் நீங்கள் மறைந்து கொள்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்குக் பின்னால் மறைந்துக் கொள்வீர்களானால், நீங்கள் அவர்களை விட மிகவும் தரம் குறைந்தவர்களாக இருக்கின்றீர்கள். அது சரியே. 74முன்னொரு நாளிலே செய்தித்தாளில் நான் ஒரு சிறு கட்டுரையை வாசித்தேன், அதில் ஒரு வயதான மனிதன் .... அவர் இரண்டிலும் செவிடனாகவும் ஊமையாகவும் மற்றும் குருடாகவும் இருந்தார், ஆனாலும் அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனைக்குச் சென்றார். அவர்கள் ரெயில் (Braille) (பார்வையற்றவர்கள் எழுத படிப்பதற்கான முறை - தமிழாக்கியோன்) முறையைக் கொண்டு எழுதி அவரிடமாக, “நீங்கள் ஏன் சபைக்குச் செல்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “நான் யார் பக்கம் இருக்கின்றேன் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அப்படிச் செய்கிறேன் என்றார். அவர் எதன் பட்சமாக இருக்கின்றார் என்பதை பிசாசும் மற்ற எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அது அருமையானது என்று நான் நினைக்கின்றேன். ஆம், ஐயா. 75இயேசுவும் கூட என்ன செய்தார்? அவர் தம்முடைய சொந்த ஜீவனை அளித்தார். கொடுத்தார். உங்களுடையதையும் என்னுடையதையும் இரட்சிக்கும்படிக்கு அவர் தம்முடைய ஜீவனை அளித்தார். ஏனென்றால் அவர் தாமே - அவர் தாமே தம்முடைய சொந்த ஜீவனை அளித்தார் .... அவர் செய்துத் தானாக வேண்டும் என்பதாக இல்லை. அவர் விருப்பமுடனே முன் வந்து அதைச் செய்தார். அவர் அதைச் செய்தாக வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனாலும் அவர் விருப்பமுடனே முன் வந்து அதைச் செய்தார், ஏனென்றால் அதினாலே அவரால் உங்களை இரட்சிக்கும்படியாக அப்படிச் செய்தார். ஆகவே இப்பொழுது அவர் ஒருவரால் மாத்திரமே உங்களை இரட்சிக்க முடியும். உங்களை இரட்சிக்கக்கூடிய வேறு எந்த ஒன்றும் கிடையாது. தங்கள் சபை தான் உங்களை இரட்சிக்கின்றது என்று கூறுகின்ற ஒரு ஸ்தாபனம் ஒன்று இருக்கின்றது என்று எனக்குத் தெரியும். “சபையினாலே தான் நீங்கள் இரட்சிக்கப் படுகிறீர்கள்”, என்று கூறுகின்ற ஒன்று. நீங்கள் இயேசு கிறிஸ்துவினாலே தான் இரட்சிக்கப் படுகிறீர்கள், இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டு விட்டீர்கள். ஆம் ஐயா, உங்களால் எதுவுமே செய்யமுடியாது. உங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்புகின்ற ஒன்றைத் தவிர உங்களால் வேறே ஒரு காரியத்தைக் கூட செய்ய முடியாது. இயேசு கிறிஸ்து தான் இரட்சகர் ஆவார். ஆம் ஐயா, அவர் அளித்தார், அவர் தம்முடைய சொந்த ஜீவனை உங்களுக்காக அளித்தார். இப்பொழுது, நான் நினைப்பதாவது, இன்றைக்கு ....நாம் முடிக்கையில், இதை நாம் சற்று கூறலாம். அது, நாம் தாமே நம்முடைய ஜீவனையும் மற்றும் நம்முடைய எல்லாவற்றையும் அளித்து, உலகப்பிரகாரமாக இருக்கின்ற ஒவ்வொன்றையும், தேவனற்றிருக்கின்ற ஒவ்வொரு காரியத்தையும், நம்முடைய எல்லா அவிசுவாசத்தையும் மற்றும் எல்லாவற்றையும் விட்டு விட்டு, அங்கே அந்த சீஷர்கள் செய்தது போல நாம் அவரைப் பின்பற்றும்படிக்கு அப்படிச் செய்வது நமது தலையாய கடமையாகும். அதைச் செய்ய உங்களுக்கு விருப்பமுண்டா ? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) எதற்காக நாம் அவரைப் பின்பற்ற வேண்டும்? அவருடைய வருகையின் மகத்தான அடையாளங்களை காணும்படிக்காகவே. 76இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். இந்த கடைசி நாட்களிலே, காலத்தின் முடிவின் சமயத்திலே இன்னொரு கிறிஸ்தவ வெளிச்சமானது வரும் என்று வேதாகமம் வாக்குத்தத்தம் செய்கின்றது. “முன்மாரியும் பின்மாரியும் வரும்”, சேர்ந்து வரும், தீர்க்கதரிசி, “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும். பகலா அல்லது இரவா என்று சொல்லப்பட முடியாத நாள் ஒன்று வரும்” என்று கூறினான். அது எந்த விதமான ஒரு நாளாக இருக்கும்? அது மழை பெய்கின்ற, பனி படர்ந்த, மந்தாரமான நாளாக இருக்கும். சூரியனானது பிரகாசித்துக் கொண்டிருக்கும், நிச்சயமாக, அங்கே அந்த மூடுபனி மற்றும் மேகங்களுக்கு மேலாக சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அந்த மூடுபனி மற்றும் அவைகளைத் தாண்டி அது வெளிச்சத்தைக் கொடுக்கின்றது. அதினாலே உங்களால் நடக்கவும் எப்படி சுற்றிலும் செல்ல வேண்டும் என்று காணும்படியாகவும் அது செய்கின்றது. அநேக அநேக வருடங்களாக, இரண்டாயிரம் வருடங்களாக அதை நாம் கொண்டிருக்கின்றோம். பாருங்கள்? நாம் விசுவாசத்தினாலே நடந்தோம், மற்றும் “சரி, அது எல்லாம் சரிதான். அஹ்-உஹ். நாம் விசுவாசிக்கின்றோம், மற்றும் சபையைச் சேர்ந்துள்ளோம், நம்முடைய பெயரை அந்த புத்தகத்தில் சேர்த்துள்ளளோம். ஆகவே அது சரிதான். நாம் விசுவாசிக்கின்றோம். முந்நாட்களிலே, அங்கே முன் காலத்திலே அவர் செய்திருந்த விதமாக இந்த காரியங்களை இப்பொழுது நாம் காண்கிறதில்லை” என்று நினைத்தோம். அவர்கள், “அவையெல்லாம் கடந்து சென்று விட்டன. அது முன்பு நடந்தது” என்று கூறினர். ஆகவே நூற்றுக்கணக்கான, நூற்றுக் கணக்கான, நூற்றுக்கணக்கான வருடங்களாக அவ்விதமாகத் தான் இருந்து வந்துள்ளது. ஒரு மந்தாரமான நாளாக. ஆனால் அவர், “சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்'' என்று கூறினார். 77இப்பொழுது, கிழக்கில் உதிக்கின்ற அந்த அதே சூரியன் தான் மேற்கில் மறைகின்றது. அதே இயேசு தான் .... கிழக்கில் இருந்த அந்த மக்களின் மீது தம்முடைய ஆவியை ஊற்றினார், இந்த கடைசி நாட்களில் தம்முடைய ஆவியை ஊற்றிக் கொண்டிருக்கின்ற அதே இயேசுவாக இருக்கின்றார். அது மேற்கு மக்களின் மீது இருக்கின்றது. அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். அவர் ஒரு வாக்குத்தத்தத்தைச் செய்துள்ளார். அவர், “லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வருங்காலத்திலும் அப்படியே நடக்கும்” என்று கூறினார். தேவன் எப்படியாக தம்மை ஒரு மானிட சரீரத்தில் வெளிப்படுத்தினார், அங்கே உட்கார்ந்து ஆபிரகாமோடு ஆகாரம் சாப்பிட்டார், தன்னுடைய முதுகை கூடாரத்தின் பின்புறமாக வைத்திருக்கையில் அங்கே கூடாரத்திற்குள் சாராள் என்ன நினைத்துக்கொண்டிருந்தாள் என்பதைக் கூறினார். ஆபிரகாமிடமாக அவனுடைய பெயர் என்னவென்றும் சாராளின் பெயர் என்னவென்றும் எப்படி தாம் அவர்களை சந்திக்கப்போகின்றோமென்றும் அவர் கூறினார். சாராள் அப்போது அதை விசுவாசிக்காமல் கூடாரத்தில் இருந்து கொண்டு நகைத்தாள். அப்போது தூதனானவர், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். அவள் அங்கே அந்த மனிதனுக்கு பின்புறமாக கூடாரத்துக்குள் இருந்தாள். 78இயேசு, “அந்த நாளில் நடந்தது போலவே மனுஷ குமாரன் வருகையிலும் அப்படியே நடக்கும்” என்று கூறினார். நான் அடிக்கடி கூறினது போல, கடந்த இரவு நான் கூறினேன், அதை மறுபடியுமாக நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். எல்லா காலத்திலும், நோவாவின் மூன்று குமாரர்களான காம், சேம், யாப்பேத்தைப் போல் மூன்று பிரிவான மக்கள் எப்போதுமே இருந்து வருகின்றனர், ஆதியிலிருந்து தொடர்ந்து காட்சியிலே மூன்று பிரிவான மக்கள் உள்ளனர். இப்பொழுது அவர்கள் என்னென்ன பிரிவு என்று வகையறுப்போமாக: அவிசுவாசி, பாவனை விசுவாசி மற்றும் விசுவாசி. இப்பொழுது இந்த விதமாகத் தான் அது ஒரே விதமாக இருக்கின்றது. அங்கேயும் அதே காரியம் தான் இருந்தது. இயேசு, “சோதோமின் நாட்களில் நடந்தது போல, இந்நாள் வரைக்குமாக அப்படியே இருக்கும்” என்று கூறினார். 79ஆபிரகாம், பின்பற்றும்படியாக எல்லாவற்றையும் விட்டு விட்ட அவன், இப்பொழுது சரியாக இங்கே இருக்கின்றான். அவன் அந்த வாக்குத்தத்தத்தை அநேக, அநேக வருடங்களாக, இருபத்தைந்து வருடங்களாக பற்றிக் கொண்டிருந்தான். இதோ இவனுக்கு இப்பொழுது நூறு வயதாகின்றது. இங்கே அவன் வயலில் இருக்கின்றான். அவனுடைய மந்தையானது சிறிதாகிக் கொண்டே வருகின்றது, அங்கே தண்ணீர் இல்லை, ஆனால் லோத்து அங்கே அவன் விரும்பினதையெல்லாம் கொண்டிருந்து மிகவும் சொகுசாக, சுகபோகமாக வாழ்ந்துக் கொண்டிருக் கின்றான். இங்கே சாராள், ஒரு காலத்திலே அந்த தேசத்திலேயே மிகவும் அழகான பெண்ணாகிய சாராள், இப்பொழுது இங்கே எல்லாம் இழந்த ஒரு நிலையில் இருக்கின்றாள். ஆகவே ஒருக்கால் திருமதி லோத்து அப்பொழுது இருந்த புதிய நவீன தலைமுடி அலங்காரத்தைக் கொண்டவளாக இருந்திருப்பாள், இப்பொழுதிருக்கின்ற இந்த சிகையலங் காரங்களைப் போன்று இருந்திருக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். அவள் அங்கே மிகவும் சொகுசாக வாழ்ந்துக் கொண்டிருந்தாள். அவள் மேயரின் மனைவியாக இருந்தாள், மிக மகத்தான சபையாக இருந்த ஒரு சபையைச் சேர்ந்தவளாக இருந்தாள். ஆம், ஐயா, அவள் பல சமுதாய சங்கங்களைச் சேர்ந்தவளாக இருந்திருப்பாள் என்பதில் சந்தேகமே இல்லை. அவளுக்கு ஜீவிக்கவும் விருப்பமில்லாமல், அதை விடவும் விருப்பமில்லாமல், அவள் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அதினாலே அவள் அந்த தூதனுடைய சத்தத்துக்கு கீழ்ப்படிய விருப்பங்கொள்ளாமல் அதை விட உலகத்தை அதிகமாக நேசித்ததினால் அவள் ஒரு உப்புத் தூணாக மாறினாள். 80இப்பொழுது இந்த மூன்று பிரிவினரை கவனியுங்கள். அவிசுவாசிகளாகிய சோதோமியர், பாதி வழி, அனலுமின்றி, குளிருமின்றி வெது வெதுப்பான சபை அங்கத்தினர்களாக இருந்தவர்கள், லோத்து அவர்களைப் போல இருந்தான். ஆனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களாக, வெளியே அழைக்கப் பட்ட சபையாக ஆபிரகாமும் அவனுடைய குழுவும் இருந்தனர். இந்த தூதர்கள் வந்த போது யாரிடமாக அவர்கள் வந்தனர்? ஆபிரகாமிடமும் அவனுடைய குழுவினரிடமே வந்தனர். அது சரியே. அவர்களில் இருவர் நவீன சுவிசேஷகர்களைப் போல அங்கே சென்றனர். இன்றைக்கு ஸ்தாபன சபைக்கு செல்கின்ற மகத்தான சுவிசேஷகர்களை நாம் கொண்டிருக்கின்றோம். தேசத்தில் இருப்பதிலேயே மகத்தான மனிதர்களில், நாம் அறிந்திருப்பது, பில்லி கிரஹாம் ஆகும். அவர் அங்கே வெளியே இருக்கின்ற மக்களிடமாக சுவிசேஷத்தை பலமாக வெடிக்கப் பண்ணிக் கொண்டிருக்கின்றார் என்பது நிச்சயம், “சோதோமை விட்டு வெளியே வாருங்கள்” என்று அவர்களை வெளியே அழைத்துக் கொண்டிருக்கின்றார். 81ஆகவே நாம் இந்த சபையை நோக்கி “சோதோமை விட்டு வெளியே வா” என்று கூக்குரலிட வேண்டிய அவசியம் இல்லை. அது ஏற்கெனவே வெளியே வந்திருக்க வேண்டியதாக இருக்கின்றது. அது பரிசுத்த ஆவியினாலே அழைக்கப் பட்டிருக்குமானால், அது நீண்டகாலத்திற்கு முன்பாகவே சோதோமை விட்டு வெளியே வந்து விட்டது. அது சரியே. அது சோதோமை விட்டு விட்டது. அவள் அங்கே வெளியே இங்கே தாமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். சரியாக வேறு பிரிக்கப்பட்டிருக்கின்றது. சபை என்கின்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால், “வெளியே அழைப்படுதல், வேறுபிரிக்கப்பட்டது'' என்பதே, ஆகவே, நீங்கள் வேறுபிரிக்கப்பட்டு, உங்களுடைய .... “அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு வெளியே வாருங்கள். அவர்களுடைய அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள்”. “நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால் நீங்கள் சோதோமுக்குள்ளாக இருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்; நீங்கள் ஒரு சபை அங்கத்தினனாக, அனலுமின்றி, குளிருமின்றி வெது வெதுப்பானவர்களாக இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அப்படியானால் நீங்கள் உங்களை வேறு பிரித்துக் கொண்டு உலகத்தின் காரியங்களினின்று புறம்பே. சென்று, வெளியே வந்து, சுத்தமான மற்றும் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்து, தேவனுடைய கட்டளைகளில் நடக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். 82நினைவில் கொள்ளுங்கள், அந்த தூதர்களில் இரண்டு பேர் அங்கே சென்றனர். அவர்கள் அங்கே நிறைய அற்புதங்களைச் செய்யவில்லை. அவர்கள் செய்த ஒரே ஒரு அற்புதம் என்னவென்றால், மக்கள் அவர்களை நோக்கி ஓடி வந்த போது அவர்களுக்கு குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினது மட்டுமே. ஆம், வார்த்தையைப் பிரசங்கித்தல் சரியாக அதைத் தான் செய்கின்றது. மக்களை குருடாக்குகின்றது. ஆகவே இன்றைக்கு, நாம் அறிந்திருக்கின்ற இந்த மகத்தான சுவிசேஷகர்கள், அவர்களில் அநேகர் இங்கே ஃபீனிக்ஸுக்கு வருகின்றனர். ஆகவே - ஆகவே அந்த மகத்தான சுவிசேஷகர்கள் ... ஊழிய களத்திற்குள்ளாக சென்றுள்ள இவர்கள் அற்புதங்கள் மற்றும் பிறவைகளை செய்வதில்லை. ஆனால் அவர்கள் “இயேசு கிறிஸ்துதான் தேவனுடைய குமாரன்” என்ற, அந்த வார்த்தையை பிரசங்கிப்பதனால், அந்த விசுவாசிகளை, அந்த சோதோமியரை முழுவதுமாக குருடாக்குகின்றார்கள். 83ஆனால், அப்படியானால், ஆவிக்குரிய சபையானது இங்கே இருக்கின்றது; உலகப்பிரகாரமான அல்லது சோதோமியரைப் போல அல்ல. ஆனால் அது ஆபிரகாமைப் போல, அப்போதிலிருந்து, தேவன் வந்து சந்தித்த, தேவனில் விசுவாசம் கொள்ளுகின்ற, ஆவிக்குரிய சபை. ஆபிரகாம் அவனுக்குப் பிறகு சபையிலே இருக்கின்ற ஆபிரகாமின் வித்திற்கு ஒரு பரிபூரண நிழலாக இருக்கின்றான், “புற ஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை தெரிந்துக் கொண்டார்,” அந்த ராஜரீக வித்து - ஞாயிற்றுக்கிழமையன்று நான் பிரசங்கித்தது போல. பாருங்கள்? இப்பொழுது, இந்த சபையானது, வெளியே அழைக்கப்பட்டு, வேறுபிரிக்கப்பட்டு, உலகத்தின் எல்லா காரியத்தையும் விட்டுவிட்டு, ஆபிரகாம் செய்தது போல, பரிசுத்த ஆவியானவரோடு நடக்கும்படிக்கு வெளியே வந்த ஒன்றாகும். நாம் எல்லாவிதமான காரியங்களையும் கண்டிருக் கின்றோம், ஆபிரகாம் செய்தது போல, செய்து வந்துள்ளோம். ஆனால் பிரயாணத்தின் முடிவிற்கு முன்னர் அவன் கண்ட கடைசி அடையாளம் என்னவாக இருந்தது? எதிர்பார்க்கப் பட்ட குமாரன் காட்சியில் வருவதற்கு முன்னர் இருந்த கடைசி அடையாளம் என்ன? ஆபிரகாம் ஒரு குமாரனை பெற காத்துக் கொண்டிருந்தான். அது சரியா? [சபையார் “ஆமென்' என்கின்றனர் - ஆசி.) நாம் ஆபிரகாமின் வித்துக்கள் தானே? (”ஆமென்.“) அப்படியானால் நாம் ஒரு குமாரனை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை, தேவனுடைய குமாரனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 84ஆகவே, தேவன் அந்த காலத்தில் ஆபிரகாமை, அந்த சிறிய ஒளியிலிருந்தும், மற்றும் அந்த பலியிலிருந்தும் அழைத்து உடன்படிக்கையை அவனுக்கு உறுதிபடுத்தினபோது அவருடைய பரம இரகசிய கிரியைகளை அவன் கண்டிருந்தான். அநேக முறை தேவன் பலவிதமான வித்தியாசமான வழிகளில் அவனை சந்தித்தார். ஆனால் அவர் ஆபிரகாமுக்கு காண்பித்த கடைசி அடையாளமானது என்னவென்றால், அவர் வந்த போது, மாம்சத்தில் வெளிப்பட்டு, கூடாரத்துக்கு நேராக தம்முடைய முதுகு புறத்தை பின்புறமாக திரும்பியிருந்த நிலையில் நின்று கொண்டு சாராளுக்கு காரியத்தைக் கூறினதுவே. நிச்சயமாக அது தேவன்தான் என்பதை எந்தவித சந்தேகமுமில்லாமல் ஆபிரகாம் விசுவாசித்தான். சில மக்கள் அப்படியாக விசுவாசிப்பதில்லை. ஆனால் அது தேவன் தான் என்று வேதாகமம் கூறுகின்றது. அது தேவன் தான் என்று ஆபிரகாம் கூறினான். அவன் அவரை, “ஏலோகிம்” என்றழைத்தான். ஏலோகிம் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்த அந்த மகத்தான சிருஷ்டிகர் ஆவார். 85இப்பொழுது, இந்த கடைசி நாட்களிலே, ஒரு அடையாளத்திற்காக, அவர் தம்மைத்தாமே மாம்ச மாக்கியுள்ளார். அந்த அவிசுவாசியாகிய சோதோமியரைப் பாருங்கள்? சபை அங்கத்தினனைப் பாருங்கள்? இப்பொழுது தெரிந்துக் கொள்ளப்பட்ட, வெளியே அழைக்கப்பட்டவர் களைப் பாருங்கள். இந்த தெரிந்து கொள்ளப்பட்டவர் களிடத்தில், அவர் தம்மைத்தாமே, பரிசுத்த ஆவியின் வல்லமையிலே, மானிட மாம்சத்திலே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ஆமென். அது தான் மேசியா என்பதை உங்களால் காணமுடிகின்றதா? தேவன், கிறிஸ்து, தம்முடைய சபையிலே பிரதிநிதித்துவப்பட்டுக் கொண்டிருக்கின்றார்; சபையும் அந்த அதே ஜீவனை நடப்பித்துக் கொண்டு, அதே ஜீவியத்தைச் செய்து, அந்த அதே அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கின்றது. “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்”. 86ஒரு - ஒரு சட்டவிரோத கும்பலைச் சார்ந்தவனுடைய ஆவி எனக்குள்ளாக இருக்குமானால், நான் துப்பாக்கிகளை என் மீது பொருத்தி வைத்திருப்பேன். ஒரு ஓவியனின் ஆவி எனக்குள்ளாக இருக்குமானால், ஒரு ஓவியனால் வரைய முடிகின்ற ஒரு ஓவியத்தை என்னால் வரைய முடியும். இயந்திரம் பழுது பார்ப்ப வனின், (mechanic) ஆவி என் மேல் இருக்குமானால், உங்கள் காரில் என்ன பழுதிருக்கின்றது என்று என்னால் உங்களிடம் கூற முடியும். பாருங்கள்? ஆகவே இயேசு கிறிஸ்துவின் ஆவி எனக்குள்ளாக இருக்குமானால், கிறிஸ்துவின் கிரியைகளைத்தான் நான் செய்வேன், ஏனென்றால் கிறிஸ்துவின் ஜீவன்தான் உங்களுக் குள்ளாக இருக்கின்றது. பாருங்கள்? அவர் யாருக்குள்ளாக வெளிப்பட்டார்? அவர் யாரை வெளிப்படுத்தினார் ? அவர் தானே..... தம்முடைய குமாரத்துவத்தை விட்டார். பாவமாகி நம்முடைய பாவங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அதினாலே அவர் பாவிகளை எடுத்து குமாரர்களாக அவர்களை ஆக்கும்படிக்கு அப்படியாகச் செய்தார். நான் அவராக ஆகும்படிக்கு அவர் நானாக ஆனார். நான் தேவனுடைய குமாரனாக ஆகும்படிக்கு அவர் ஒரு பாவியானார். அவர் ... ஓ, அது. - அது, அவர் செய்தது விசேஷமானதல்லவா. பாருங்கள், நீங்கள் அவருடைய இடத்தை எடுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்படிக்கு அவர் உங்களுடைய இடத்தை எடுத்துக் கொண்டார். “ராஜ்யத்திலே நீங்கள் அவருக்கு உடன் சுதந்தரராக இருக்கின்றீர்கள். உங்களைப் போல அவரும் ஒரு பாவியானார், உங்களுடைய பாவங்கள் அவர் மீது வைக்கப் பட்டது ; அதினாலே அவர்தாமே உங்களை எடுத்து தம்மைப் போலவே பரலோகத்தின் உடன் குடிமக்களாக உங்களை ஆக்கி, தேவனுடைய ராஜ்யத்திலே உங்களோடு கூட அவரும் உட்காரும்படிக்கு ஏதுவாக இருக்கும்படிக்கு அப்படி செய்தார். உங்களுக்குப் புரிகின்றதா; தம்முடைய ஆவியை உங்களுக் குள்ளாக வைத்தார். ஆகவே அவருடைய ஆவியானது உங்களுக்குள்ளே இருக்குமானால், அவர் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். 87இப்பொழுது, அவர் இங்கே பூமியில் இருந்த போது அவர் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள். அவர் தம்மைத் தாமே எவ்விதமாக வெளிப்படுத்தினார்? நீங்கள் இங்குமங்குமாக சுற்றிக் கொண்டும், கோல்மேசை, பில்லியர்ட்ஸ் விளையாட்டு அரங்கங்களுக்கு செல்வதும், சபைக்குச் செல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பதும், ஏதோ ஒரு விதமான அசுத்த தொலைக்காட்சி நாடகத்தை அல்லது அதைப்போன்ற ஒன்றை பார்ப்பதற்காக புதன் இரவு ஆராதனைக்குச் செல்லாமல் வீட்டிலே தங்கியிருத்தல், உன் சபையை விட்டு விடுதல் மற்றும் அதைப் போன்ற எல்லாவற்றையும் செய்துவிட்டு கிறிஸ்துவை காண எதிர்ப் பார்க்க இயலாது. பரிசுத்த ஆவியைப் பின்பற்ற நீங்கள் அந்த எல்லாக் காரியங்களையும் விட்டு விட வேண்டும். அந்த முதல் சீஷர்கள் செய்தது போல, அவர் தாமே மேசியாவாக வெளிப்படுத்தப்படும்படிக்கு ஆவன செய்யுங்கள். அவர் மேசியா தானா என்பதைக்காணும்படிக்கு அவர்கள் அவரைப் பின்பற்றினர். அந்திரேயா அவருடன் இரவு முழுவதுமாக தங்கினதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவனும் பிலிப்பும் செய்ததைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அடுத்த நாள் காலையில் பிலிப்பு ஒரு வழியாகப் போனான், அந்திரேயா வேறு வழியாகப் போனான். 88அந்திரேயா தன்னுடைய சகோதரனை தேடிச் சென்றான். அவன் சீமோனைக் கண்டுபிடித்தவுடன், “வந்து பார், அந்த மேசியாவை நாங்கள் உறுதியாகக் கண்டு கொண்டோம்” என்று கூறினான். அவர்தான் மேசியா என்பதை அவன் அறிந்து கொண்டான். எப்படி? மேசியா என்னவாக இருப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான். வேதப்பூர்வமாக மேசியா எப்படியாக இருப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான். இப்பொழுது, அந்த நாளில் இருந்த யூதர்கள், அந்த மிக மகத்தான பெரிய சபைகள் அவர் எப்படியாக இருக்க வேண்டும் என்று முழுவதுமாக கற்பனை செய்து விளக்கப் படமெல்லாம் வைத்திருந்தனர் என்பதில் சந்தேகமேயில்லை. “ஓ, மேசியா வரும் போது அங்கே ஆகாயவிரிவு முழுவதுமாக ஒரு எக்காள முழக்கமுண்டாகும், தேவன் ஒரு கைப்பிடி கொண்ட ஒன்றை சுழற்றுவார், அப்போது வானத்தின் பலகணி அப்படியே கீழே இறங்கும். அப்பொழுது ஒரு தூதன் வந்து பூமி முழுவதும் வெடித்து ஒலிக்கும்படியான ஒரு அணிவகுப்பு முறை வணக்கம், சல்யூட் (salute) அடிப்பான். அப்போது மேசியா தூதர்களுடனும், பாண்ட் வாத்தியங்கள் மற்றும் அதைப் போன்றவைகள் முழங்க அந்த விதமாக பலகணிகளை விட்டு சவாரி செய்து வருவார், நேராக இந்த ஆலயத்துக்கு வந்து இறங்கி அதனுள்ளாக நடந்து செல்வார். அவர் மேசியாவாக இருப்பார். அவர் இரும்புக் கோலை எடுத்து உலகை ஆளுவார்.'' ஆனால் அந்தவிதமான கருத்துக்கு மாறாக அவர் எவ்வளவு வித்தியாசமாக வந்தார் என்பதைப் பாருங்கள். ஆனாலும் வேதப்பூர்வமாகவே வந்தார். “ஒரு கோவேறுக் கழுதைக் குட்டியின் மேல் ஏறிக்கொண்டு, தாழ்மையுள்ள வராக, சாந்தகுணமுள்ளவராக வந்து, எருசலேமுக்குள்ளாகச் சென்றார்” அது சரி. பாருங்கள்? 89தீர்க்கதரிசியாகிய யோவானையும் கூட அது திரும்பும் படிக்குச் செய்தது. தூற்றுக்கூடையை தம்முடைய கரங்களில் வைத்து தம்முடைய களத்தை நன்றாய் விளக்கின ஒரு மேசியாவைப் பற்றி அவன் பிரசங்கித்திருந்தான்; அவர் வந்த போது மிகவும் சாந்தகுணமுள்ளவராகவும் தாழ்மையுள்ள வராகவும் வந்தார். ஆனால் அது தான் மேசியா என்று யோவான் அறிந்திருந்தான், ஏனென்றால் அவரின் மீது இருந்த அந்த ஒளியை அவன் கண்டான். அதுதான் என்று அவன் அறிந்திருந்தான். அவன், “வனாந்தரத்தில் அவர் என்னிடமாக, ”ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் ஞானஸ்நானங் கொடுக்கிறவர் நீ போய் அவருக்கு ஜலத்தினால் ஞானஸ் நானங்கொடு என்று கூறினார்“ என்றான். வேறு யாரும் அதைக் காணவில்லை. யோவான் அதைக் கண்டான். அது யோவானுக்கு செய்யப்பட்ட வாக்குத்தத்தம் ஆகும். சாஸ்திரிகள் பின்பற்றின அந்த நட்சத்திரத்தை வேறுயாரும் காணவில்லை. 90ஆகவே அப்படித்தான் இன்றிரவும் கூட. நீங்கள் இங்கே இரு மடங்கு குருடாயிருந்து தேவனுடைய வல்லமையை காணமுடியாமல் இருக்கலாம். தேவன் உங்களுடைய ..... திறந்தாலொழிய உங்களால் அதைப் புரிந்து கொள்ளவே முடியாது. “பிதாவானவரால் எனக்குக் கொடுக்கப்பட்ட யாவும் என்னிடத்தில் வரும், என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான் அவ்வளவு தான். அது காரியத்தை முற்றுப் பெறச் செய்கின்றது. அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றி, அவர்தான் அந்த மேசியா என்று கண்டார்கள் என்று நாம் பார்க்கின்றோம். அந்திரேயா சென்று பேதுருவிடம், “நம் தந்தை நமக்கு என்ன கூறியுள்ளார் என்று உனக்குத் தெரியுமா?” என்றான். ஒருக்கால் இந்த விதமாகக் கூறியிருப்பான். “மேசியா எப்பொழுது வருவார் என்று நமக்குத் தெரியும். மோசே நம்மிடமாக 'நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்க தரிசியை எழும்பப் பண்ணுவார்' அவனைப் போலவே அவர் இருப்பார். அதை நாம் அறிவோம், அது நமக்கு போதிக்கப் பட்டுள்ளது. மேலும், 'நம் மத்தியில் ஒரு ஆவிக்குரியவன் அல்லது ஒரு தீர்க்கதரிசி இருந்து, அவன் கூறுவது நிறை வேறுமானால் அவனுக்குச் செவி கொடுங்கள். அவன் கூறினது நிறைவேறாமல் போனால் அப்பொழுது நீங்கள் அவனுக்கு செவிக் கொடுக்க வேண்டாம்' என்று நமக்கு போதிக்கப் பட்டுள்ளதே. ஆகவே மேசியாவானவர் ஒரு ..... தீர்க்கதரிசியாக மட்டுமே இருக்கமாட்டார் என்று நமக்குத் தெரியும். அவர் தேவன் தீர்க்கதரிசியாக இருப்பார். ஆகவே இந்த நபர் தான் அந்த மனிதன் ஆவார்.' “உனக்கு எப்படி தெரியும் அந்திரேயா?” “வந்து பார்.” அவன் அங்கே நடந்து சென்றான். அவன் நடந்து வந்து இயேசுவுக்கு முன்பாக நின்றவுடனே, இயேசு, “உன்னுடைய பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரனாவாய்” என்றார். சரியாக அந்தப் பொழுதிலேயே அவர்தான் தேவனுடைய குமாரன் என்று அவன் அறிந்து கொண்டான். அங்கே பிலிப்பு நாத்தான்வேலுடன் வருகின்றான். நாத்தான்வேல் அவருக்கு முன்பாகச் சென்று நின்றவுடனே, அறிந்து கொண்டான் ..... 91ஒருக்கால் அவர்கள் அதைக்குறித்து ஒரு மகத்தான சம்பாஷனையைச் செய்து, அதைக்குறித்து பேசிவிட்டு பிறகு அங்கே வந்திருப்பார்கள் என்று நான் யூகிக்கின்றேன். எப்படி அவர் பேதுருவிடம் இந்த காரியங்களைக் குறித்துக் கூறி, அவனுக்கு வேறு ஒரு பெயரை அளித்து, அவன் யார் என்றும், அவனுடைய தகப்பன் யார் என்றும் கூறினார் என்றும், இன்னும் அதைக்குறித்தும் விவாதித்தனர். “மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று உனக்குத் தெரியுமா”. ஆம், இதோ அவன் அப்பொழுது அங்கே வருகின்றான், நேராக இயேசுவுக்கு முன்பாகச் செல்கிறான். அப்போது இயேசு, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று கூறினார். அவன், “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?” என்றான். அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும் போது நான் உன்னைக் கண்டேன்” என்றார். அதற்கு அவன், “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று கூறினான். அவன் உறுதிகொள்ள அது அவனுக்கு போதுமானதாயிருந்தது. 92அந்த சிறிய கேவலமான ஸ்திரீ, இழிந்த ஒழுக்கமுள்ளவள், அசுத்தமானவள், ஆறுபேருடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் ஐந்து பேரை விவாகம் செய்திருந்தாள், அந்த சமயத்தில் அவள் தான் விவாகம் பண்ணியிராத ஒருவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். தண்ணீர் மொள்ளத்தக்கதாக ஒரு நாள் அவள் கிணற்றண்டைக்குச் சென்றாள். அவள் தண்ணீர் பம்ப் அருகில் அல்லது அவள் திருகு உருளைப் பொறியில் கயிற்றைக் கொண்டு வாளியை கிணற்றுக்குள்ளாக இறக்கினாள். தண்ணீர் மொண்டு மேலே இழுக்கையில் அங்கே ஒரு நடுத்தர வயதுள்ள ஒரு மனிதன், ஒரு யூதன் உட்கார்ந்திருந்ததைக் கண்டாள். அவர், “ஸ்திரீயே, தாகத்துக்குத்தா” என்றார். அதற்கு அவள், “இங்கே எங்களிடையே நிற, இனப்பிரிவினை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகவே ஒருக்காலும் - ஒருக்காலும் .... யூதராகிய நீர் இங்கே வந்து சமாரிய ஸ்திரீயாகிய என்னிடம் தண்ணீர் கேட்பதென்பது, மற்றும் அந்த விதமாகச் செய்வது வழக்கம் அல்லவே. நாங்கள் சம்மந்தங்கலவாதவர்களாயிற்றே என்று கூறினாள். அவர், “நீ யாரிடமாக பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தாயானால், நீயே என்னிடம் தாகத்திற்கு கேட்டிருப்பாய். நீ என்னிடமாக தண்ணீர் கேட்டிருப்பாய்” என்று கூறினார். அவர்கள் . . . அவர்கள் பேசிக் கொண்டேயிருந்தனர், ஒருவருக்கொருவர் சிறிது நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ? அவளுடைய பிரச்சனை என்ன என்பதை கண்டுகொள்ள முயன்று கொண்டிருந்தார். இப்பொழுது, “இயேசு சமாரிய நாட்டின் வழியாய்ப் போக வேண்டியதாயிருந்தது'' 93நினைவில் கொள்ளுங்கள், அவர் தாமே யூதரிடம் மாத்திரமே தம்மை அடையாளப்படுத்திக் காண்பித்தார், புறஜாதியார் .... அது காம், சேமின் மக்களாவர். பாருங்கள்? யாப்பேத்தினுடைய மக்கள் விடப்பட்டனர். ஆங்கிலோசாக்ஸன்களாகிய (Anglo-Saxons) நாம் அஞ்ஞானிகளா யிருந்தோம், அந்நாட்களிலே விக்கிரகங்களை தொழுது கொண்டிருந்தோம். நினைவில் கொள்ளுங்கள். இயேசு பூமியில் இருந்த போது புறஜாதிகளுக்கு அந்த அதே அடையாளத்தில் தம்மைத் தாமே வெளிப்படுத்தவில்லை, ஏன் அவர்களுக்கு அதைக் காண்பிக்கவில்லை? ஏனென்றால் புறஜாதிகள் மேசியாவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. யூதர்கள் மேசியாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதே போல சமாரியர்களும் மேசியாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 94ஆனால், ராஜ்யத்தின் திறவுகோல்களை அவராலே கொடுக்கப் பெற்றவனாகிய பேதுருவிடம் கூறுகையில், அவர் தம்மைத்தாமே மேசியாவாக வெளிப்படுத்திக் காண்பித்தார். நாத்தான்வேலுக்கும் அவ்விதம் செய்தார். குருடனான பர்திமேயுவின் விசுவாசமானது அவரை நிறுத்தின போது அவ்விதம் செய்தார். பெரும்பாடுள்ள ஸ்திரீக்கும் அவ்விதம் செய்தார். யூதர்களுக்கு அவ்விதமாகச் செய்தார். ஆனால் இங்கே அவர் இப்பொழுது சமாரியர்களுக்கு முன்பாக இருக்கின்றார், அந்த உண்மையான மேசியாவாக தம்மைத்தாமே தெரியப்படுத்த சமாரியரிடத்திற்கு வருகின்றார். இப்பொழுது, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, யூதரும் சமாரியருமாகிய இருவரும் ஒரு மேசியா வரப்போகின்றார் என்று விசுவாசித்தனர். ஆகவே மேசியா பூமியில் இருந்தாரானால், தம்மைத்தாமே வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது மேசியாவைப் பொறுத்த ஒன்றாகும். “கர்த்தராகிய கிறிஸ்துவை நான் காணும் முன்னே மரணமடையமாட்டேன்” என்கின்ற ஒரு சாட்சியுடனே அங்கே தேவாலயத்தில் இருந்த வயதான சிமியோனைப் பாருங்கள். மரியாள் அந்தக்குழந்தையை உள்ளே கொண்டு வந்து அந்த அதே நிமிடத்தில் பரிசுத்த ஆவியானவர் சிமியோனிடம் பேசினார். அவன் நேராக அவர் இருந்த இடத்திற்குச் சென்றான். இந்த விதத்தில் தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, “உமது வார்த்தையின்டி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர், உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” என்று கூறினான். மேசியாவுக்கான கிரியைகளை அவர் செய்வதைக் காணத்தக்கதாக சிமியோனால் நீண்ட காலம் உயிர் வாழ முடியவில்லை, ஆனால் அவர்தான் மேசியா என்பதற்கான சாட்சியை கொண்டவனாக அவன் இருந்தான். 95ஆனால் அவர்தம்மைத்தாமே மேசியாவாகவும், தேவன்தீர்க்கதரிசியாகவும் ஜனங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டார். அந்த ஸ்திரீ, அவர் அவளிடம் பேசுகையில், “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்று கூறினார். அதற்கு அந்த ஸ்திரீ, “எனக்குப் புருஷன் இல்லை ” என்றாள். அவர், “நீ சரியாகச் சொன்னாய். உனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள், இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருக்கும் நபர் உனக்கு புருஷனல்ல” என்றார். அவள், “ஐயா (Sir), நீர் தீர்க்க தரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வரும்போது இந்த காரியங்களை எங்களுக்கு அறிவிப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் வருகையில் இது தான் மேசியாவின் அடையாளமாக இருக்கும். இந்த காரியங்களை எங்களுக்கு அறிவிக்கும் அந்த ஒருவர் தான் அவர்,” என்றாள். அப்பொழுது இயேசு, “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அவள் உடனடியாக அந்த குடத்தை வைத்து விட்டு ஊருக்குள்ளே ஓடிச்சென்று அந்த ஊரில் இருந்த ஜனங்களை நோக்கி, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவர் அந்த அதே மேசியாதானே? மேசியா நமக்கு காண்பிக்க வேண்டிய அடையாளம் அது தானோ?” என்று கூறினாள். அவர் அதை இன்னொரு முறை அவர்களுக்கு முன்னர் செய்து காண்பிக்கவில்லை, ஏனென்றால், அவர் தான் அந்த மேசியா என்று அந்த ஸ்திரீயின் சாட்சி கூறினதால் அந்த ஊரின் மனிதர் அவரை விசுவாசிக்கிறோம் என்று கூறினர். ஆமென். 96இப்பொழுது இது புறஜாதிகள் காலமாகும். நாம் இரண்டாயிரம் வருடங்களாக ஐயங்கொள்ளுதல், மேன்மை மற்றும் அவமானங்கள், ஸ்தாபனங்கள், உள்ளே செல்லுதல், மற்றும் வெளியேறுதல், குழப்பங்கள், மனக்கவலைகள், மேலும் குழப்பங்கள், சண்டை மற்ற எல்லாமும், வேதாகம வல்லுனர்கள், வேதாகமக் கல்லூரிகள், இன்னும் என்னவெல்லாமே கொண்டிருந்தோம். இப்பொழுது, உலகத்தின் தேவர்களை விட்டு விட்டு வரவிருக்கின்ற மேசியாவிற்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அந்த சமாரியர்களையும், யூதர்களையும் வரும்படிக்கு அவர் செய்திருப்பாரானால்; அந்த நாளிலே மேசியாதம்மைத் தாமே யூதர்களுக்கு அந்த விதமாக தம்மை தெரியப்படுத்தியிருப் பாரானால், தம்முடைய ஒழுங்கு முறைகளை அவராலே மீற முடியாது. ஒருவருக்கு ஒரு விதத்திலும், மற்றவருக்கு மற்றொரு விதத்திலும் வித்தியாசமாக காரியங்களைச் செய்கின்ற பிதா அவரல்ல. அவர் அந்த அதே இயேசுவாக இருக்கின்றார். அது சரியே. 97இப்பொழுது, இங்கே, நமக்கு இரண்டாயிரம் வருடங்கள் இருந்தன. பரிசுத்த ஆவி நம் மீது விழுந்துள்ளது. நாம் அந்நிய பாஷையில் பேசினோம், அடையாளங்களையும், அற்புதங் களையும் இன்னும் பிறவற்றையும் கண்டோம். இப்பொழுது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்னர் ஆபிரகாம் கண்ட கடைசி அடையாளமானது ஆகாரம் புசிக்கமுடிகின்ற ஒரு சரீரத்தில் தேவன் தம்மை தாமே வெளிப்படுத்திக் கொண்டு, முன்னுரைத்து, மேசியாவாக இருக்கத்தக்கதாக இயேசு இங்கே பூமியில் இருந்த போது செய்த அதே அடையாளத்தை செய்தலே ஆகும். இப்பொழுது, அந்த விதமாகத்தான் இருக்கும் என்று இயேசு தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கின்றார். ஆகவே, நண்பர்களே, இதோ அந்த மணி நேரம் இப்பொழுதுள்ளது. 98அங்கே நின்றுகொண்டிருந்த அந்த யூதர்கள், இயேசு அந்த மனிதனிடம் கூறினதை அவர்கள் கண்ட போது, அவர்கள் கூறினர். அவர்கள் தங்கள் சபையாருக்கு பதில் சொல்ல வேண்டியதாயிருந்தது. அவர்கள், அது செய்யப்பட்டாயிற்று என்பதை அறிந்திருந்தனர், ஆகவே அதைக்குறித்து அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விட்டது. அவர்கள் தங்களுடைய சபையாருக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருந்தனர், ஆகவே அவர்கள், “அந்த மனிதன் பெயல்செபூல். அவன் ஒரு .....'' என்றனர். அவர்கள் தங்கள் இருதயத்தில் அவ்வாறு நினைத்தனர். ”பார், இந்த மனிதன் பெயல்செபூல் ஆவான், ஏனென்றால் அவன் குறி சொல்பவனாக இருக்கின்றான், ஏதோ ஒரு - ஒரு விதமான மனோதத்துவவாதி, அல்லது ஏதோ ஒன்று, அவன் பெயல்செபூல்.“ இயேசு அவர்களுடைய நினைவுகளை பகுத்தறிந்தார். அவர் அவர்களிடமாகத் திரும்பி. “மனுஷ குமாரனான எனக்கு எதிராக நீங்கள் பேசுகிறீர்கள், நான் உங்களை மன்னிக்கிறேன். ஆனால் ஒரு நாளிலே இந்த இதே காரியத்தைச் செய்ய பரிசுத்த ஆவியாக வரவிருக்கின்றார். அதற்கு எதிராக நீங்கள் பேசுவீர் களானால் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பென்பதே கிடையாது” என்று கூறினார். 99ஓ, சகோதரனே, இன்றிரவு பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தை கொண்டிருப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். ஆமென். இங்கே எந்த ஒரு சந்தேகமுமில்லை. சகோதரரே, சர்ச் ஆஃப் காட், சதுர சபை (Foursquare Church), அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையிலிருந்தும் மற்றும் பல்வேறு சபைகளிலிருந்தும் வந்து இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். அது அருமையானதாகும். அது தான், தொடர்ந்து முன்னே போய்க் கொண்டிருங்கள். ஒரு போதும் ...... சரியாக அதனுடன் தரித்திருங்கள். பாருங்கள்? ஆனால் அந்த போர்வையானது கூடுமான வரைக்கும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கின்ற வேறொரு ஸ்தாபனத்தில், உங்களுடைய இன்னொரு சகோதரன் மீது அது விரிந்து செல்லாது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். “தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு தேவன் பரிசுத்த ஆவியை அருளினார். ஆகவே மற்றைய சகோதரனும் கூட அவ்வாறு செய்துள்ளார், புரிகின்றதா, ஆதலால் அதை இன்னுமாக விரியுங்கள். அது சரியே. ஆகவே நாம் ஒன்று கூடி களிகூருவோமாக. 100நாம் உலகத்தை விட்டு விட்டோம். நாம் ஆபிரகாமின் வித்து. நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தாகிய, கிறிஸ்துவின் வித்தாகும். ஆகவே இதோ நாம் சரியாக உள்ளோம். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு அவர் அளித்திருந்த கடைசி காரியமானது என்னவாயிருந்தது? சோதோமுக்கு அக்கினியில் எரிந்து போவதற்கு முன்னர், மற்றும் அந்த குமாரன் வருவதற்கு முன்னர் வந்த அந்த அடையாளம், இப்பொழுது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்னர், சோதோம் அக்கினியால் எரிந்து போவதற்கு முன்னர், சரியாக அந்த விதமாக இருக்கும் என்று தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக, “சோதோமின் நாட்களில் நடந்தது போல” என்று வாக்குத்தத்தம் செய்துள்ளார். இன்றைக்கு உலகத்திற்குள்ளாகப் பாருங்கள். இன்றைக்கு நம்மிடையே இருக்கின்ற அநேக தாறுமாறுகளைப் போல முன்பெதையும் உலக சரித்திரமானது கண்டதேயில்லை. இங்கே கலிபோர்னியாவிலிருந்து கதறுகின்ற தாய்களின் கடிதங்களால் என் கடிதப்பெட்டி நிறைந்திருக்கிறது. செய்தித்தாளை வாசிக்கையில், அந்த தாறுமாறானது, என்ன, கலிபோர்னியாவில் அது பதில் மாற்றாக வந்து அமர்ந்துள்ளது, கடந்த வருடத்தைக் காட்டிலும் அது முப்பது சதவிகிதம் என்று நான் நினைக்கின்றேன். தாறுமாறு, இழிந்த நிலை எல்லாவிடத்திலும் இருக்கின்றது. பள்ளிகள், வேதாகமம் பள்ளிகள் தங்களிடமிருந்து இந்த ஜனங்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களை கண்டெடுக்க மிகுந்த சிரத்தைக் கொள்கின்றது. தாறு மாறானவர்கள், “இயற்கையான உறவுகளை மாற்றி செய்தல், ”சோதோமில் இருந்தது போல“, அந்தமுறையில் நாம் அதைக் காண்கிறோம். 101அங்கே அதனுள்ளாக சுவிசேஷத்தை அசைத்துக் கொண்டிருக்கின்ற தேவனிடத்திலிருந்து வந்துள்ள செய்தி யாளனாகிய பில்லி கிரஹாமைப் பாருங்கள். இப்பொழுது, தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையைக் குறித்து என்ன? அதுவும் கூட ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கின்றது. அது சரியல்லவா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் -ஆசி.] அது அடையாளத்தைக் கொண்டிருக்கத்தான் வேண்டும். இன்றிரவு நாம் தாமே நம்முடைய எல்லா அவிசுவாசத்தையும் விட்டு, கர்த்தர் பேரில் விசுவாசம் வைத்து, அவரைப் பின்பற்றி, கடைசி நாளின் அடையாளங்களை காண்போமாக, ஏனெனில் அது இங்கே இருக்கும் என்று அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 102அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக அறிந்திராமல், இப்பொழுது எல்லாக்காரியத்தையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்ற விரும்புகிற யாராவது இன்றிரவு இங்கே இருக்கின்றீர்களா? உங்கள் கரத்தையுயர்த்தி, ''சகோதரன் பிரன்ஹாம் எனக்காக ஜெபிக்கவும். அதை செய்து ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருக்க எனக்கு விருப்பம்“ என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் வேறே யாராவது உள்ளனரா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களையும் கூட சகோதரனே, வேறே யாராவது? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ”நான் எல்லாவற்றையும் விட்டுவிட விரும்புகிறேன். சகோதரன் பிரன்ஹாம், நான் - நான் அதைச் செய்யப் போகிறேன்“. 103நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சகோதரனே, சகோதரியே, நான் - நான் யாரையும் புண்படுத்த விழைய வில்லை . ஆனால், நீங்கள் பாருங்கள், “நீங்கள் - நீங்கள் - நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருக்கு மானால்”. சில சமயங்களில் என்னை வெட்டுகின்ற காரியங்களை நான் கூறவேண்டியதாக உள்ளது. முக்கியமாக சில சமயங்களில் என் சகோதரிகளிடம் கூறுகின்றவைகள். ஏனென்றால், சாத்தான் ஆதியிலே உபயோகித்தது எதை என்றால் ஒரு ஸ்திரீயே என்பதை நீங்கள் உணர வேண்டும். தேவன் மனிதனை தெரிந்து கொண்டார். சாத்தான் ஸ்திரீயை தெரிந்துக் கொண்டான். 104ஆம், இயேசு கிறிஸ்துவை பூமிக்கு கொண்டு வந்த ஒரு கருவியாக இருக்கும்படிக்கு அவள் ஆசீர்வதிக்கப்பட்டாள். ஆனால் அது அவளுடைய குமாரன் அல்ல. நீங்கள் எல்லோரும் அதை அறிவீர்கள். இயேசு ஒரு முறை கூட அவளை தம்முடைய தாய் என்று அழைக்கவில்லை . அவள் ஒரு போதும் ..... இது எல்லா வயதினரும் கலந்திருக்கின்ற கூட்டமாயுள்ளது, ஆனால் நீங்கள் எனக்கு செவி கொடுங்கள். மரியாளிடமிருந்து எந்த ஒரு விந்தும் வரவில்லை. அவள் கன்னிகையாக இருந்தாள், அது தேவனால் முற்றிலுமாக சிருஷ்டிக்கப்பட்டது. “பரிசுத்த ஆவியானவர் நிழலிட்டார்.'' அதன் காரணமாகத்தான் இயேசுவால் அவளை தாய் என்று அழைக்க முடியவில்லை. அவர் அவளின் எந்த ஒரு பாகத்தைச் சேர்ந்தவராக இல்லவே இல்லை. அந்த குழந்தையை கொண்டு வரத்தக்கதாக தேவன் உபயோகப்படுத்தின ஒரு கருவியாக மாத்திரமே அவள் இருந்தாள். ஏனென்றால், அந்த பெண்ணின் எந்த ஒரு பாகமும் அந்த மகனுக்கு, அந்த குழந்தைக்கு தொடர்புடையதாக இருந்திருக்கு மானால், (உங்களுக்கு புரிகின்றதா; வயது வந்தவர் நான் என்ன கூற விழைகிறேன் என்று புரிந்து கொள்வர்) அங்கே ஏதோ ஒரு விதமான கர்ப்பம் தரித்தலானது இருந்திருக்க வேண்டும், அந்த பெண்ணிடமிருந்து ஏதோ ஒரு விந்தானது வந்து, அதன் மூலமாக, அப்படியாக இருக்குமானால் அது சர்வவல்லமை யுள்ள தேவனோடு ஒரு உடலுறவு போன்றதாக இருந்திருக்கும். காரியமானது அப்படியாக இருக்க முடியாது. 105தேவன் குழந்தையை, முட்டையை மற்றும் இரத்தத்தையும் சிருஷ்டித்தார். பெண்ணுடைய மற்றும் ஆணுடைய முட்டை இரண்டையும் தேவன் சிருஷ்டித்தார். அந்த காரணமாகத்தான் அந்த சரீரமானது மேலே வந்தது. நிச்சயமாக. அவர்தான் முதலாம் உயிர்த்தெழுதல் ஆவார். ஆகவே அவர் அவளை தாய் என்று அழைக்கவேயில்லை. அவர்கள், “உம்முடைய தாயார் அங்கே வெளியே உம்மைத் தேடுகிறார்கள்” என்று கூறினர். அவர், “என் தாயார் யார்?” என்றார். அவர் “என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் எவர்களோ, அவர்களே எனக்கு தாயுமாய் இருக்கிறாள்” என்று கூறினார். பாருங்கள்? ஆகவே அவர் எந்த ஒரு சமயத்திலும் அவளைத் தாய் என்று அழைக்கவில்லை . அவர் அவளை “ஸ்திரீயே'' என்று அழைத்தார். அவ்வாறே தான் அவள் இருந்தாள். 106ஆகவே மரியாளை ஒரு தெய்வமாகவும், அல்லது ஒரு தேவதையாகவும், பரலோக ராணியாகவும் செய்திருக்கின்ற சில அருமையான கத்தோலிக்க மக்களே, அது சரி அல்ல. இல்லை. அவ்வாறாக அது இல்லை. அவள் நல்ல ஒரு ஸ்திரீயாக இருந்தாள். ஆம், ஐயா. சரியாக அவ்விதமே. தேவன் தாம் உபயோகிப்பதற்காக தெரிந்தெடுக்கும் மற்ற எந்த ஒரு பெண்ணைப் போலத்தான் அவளும் ஒருவளாக இருந்தாள். வேறே எதாவது ஒரு காரியத்துக்கும் அவர் ஒரு பெண்ணை உபயோகப்படுத்த முடியும். எந்தவிதத்திலும் அவர் அவளை உபயோகப்படுத்த முடியும். அவள் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு கருவியாக மாத்திரமே இருந்தாள், ஏனென்றால் அவ்விதமாகத்தான் அவள் இருந்தாள், அந்த வித்தை சரியான வெப்பநிலையில் வைத்திருக்கும் படியாகவும், இன்னும் அதைப்போன்ற பிறவற்றுக்காகவும் அவள் இருந்தாள். ஆகவே, அந்த குழந்தைக்குள் ஜீவனானது வந்தது. ஆகவே அந்த இரத்தம். இரத்த அணுக்களில் உள்ள பிராண வாயுவை கொண்டு செல்லும் சிவப்பு அணுப்பொருள், ஆண் பாலரிடமிருந்து தான் வருகின்றது என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆகவே அந்த சிருஷ்டிகர், அவர் அந்த ஆணாக இருந்தார். அவள் ஒரு யூத ஸ்திரீயாகவோ . . . அந்த குழந்தையானது .... இயேசு ஒரு யூதனோ அல்லது ஒரு புறஜாதியோ அல்ல. அவர் தேவன். அது சரி, தேவன் தாமே ஒரு சரீரத்தை சிருஷ்டித்து அதில் அவர் வாசம் செய்தார். அதுதான் அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்து. அந்த பரிசுத்த, கன்னிப் பிறப்பானது பரிசுத்த ஆவியினாலுண்டான மாசற்ற கருத்தரித் தலான இந்த மானிட சரீரத்தை கொண்டு வந்தது. அந்த எந்த ஒரு காரியத்துக்கும் பெண்ணுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. முட்டையோ அல்லது இரத்த அணுவோ எதற்குமே சம்பந்தம் கிடையாது. மனிதன் இரத்த அணுவைக் கொண்டிருக்கின்றான். பெண் முட்டையைக் கொண்டிருக்கிறாள், ஆகவே இந்த முறையில் கருத்தரிக்க ஒரு விதமான வாஞ்சையும் மற்றும் ஒரு கருத்தரித்தலும் தான் ஒன்றைப் பிறப்பிக்க ஏதுவாகச் செய்யும். ஆகவே இந்தக்காரியத்தில், பரிசுத்த ஆவியானவர் நிழலிட்டதும் தேவன் அந்த பெண்ணில் சிருஷ்டித்ததும் தவிர வேறெதுவுமே இல்லை. அது என்னுடைய இரட்சகர். அவரில்லா மலிருந்தால் நாமெல்லாருமே அழிந்து போயிருப்போம். 107இப்பொழுது, இங்கே இருக்கின்ற மக்களாகிய சிலர், பெண்களாகிய நீங்கள், நீங்கள் பெந்தெகொஸ்தே பெண்களாக இருக்கலாம், ஆனால் அவலட்சணமான ஆடைகள் அணியும் காரியங்களிலும், மயிரைக் கத்தரிக்கும் காரியத்திலும் மற்ற காரியங்களைச் செய்வதிலும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்து வருகிறீர்கள். இங்கே கலிபோர்னியாவில் நான் கவனித்துக் கொண்டு வருகின்றேன். அவர்களில் அநேகம் பேர்.... அல்லது, இங்கே அரிசோனாவில், அவர்களின் அநேகர் முகஒப்பனை, மேக் அப் போட்டுக்கொள்வதில்லை. அதற்கெதிராகவும் கூட யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆம், நீங்கள் முகஒப்பனை போடக்கூடாது என்று கூறும் காரியமானது வேதாகமத்தில் இல்லை . (well, there's nothing in the Bible to say for you not to wear make up) அது தவறான ஒன்று என்று நாம் அறிந்திருக்கின்றோம், ஏனென்றால் அது உலகப் பிரகாரமான ஒன்றாகும். ஆனால் தன்னுடைய மயிரைக் கத்தரிக்கின்ற ஒரு பெண்ணானவள் அவமரியாதைக்குரிய ஒருவளாவாள் என்கின்ற ஒரு கட்டளையானது வேதாகமத்தில் உள்ளது. ஆகவே தேவனுக்கு அது அந்த விதமாகத் தென்பட்டுக் கொண்டிருக்க, நீயோ பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறாய் என்று கூறிக்கொண்டு அவ்விதமாக செய்துகொண்டிருப் பாயானால், அங்கு ஏதோ தவறு உள்ளது. ''ஒரு ஆணின் உடையை தரித்துக் கொள்வது. ஓ, அருமையான சகோதரியே, உலகத்தார் செய்கின்றதை முன்மாதிரியாகக் கொண்டு அவ்விதமாகச் செய்யாதே. உலகத்தை விட்டு விடு. கிறிஸ்துவைப் பற்றிக்கொள். “அப்படிச் செய்வதனால் என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது?” என்று கூறலாம். 108“அவருடைய எல்லா கற்பனைகளின்படி செய்கிறவன் பாக்கியவான், அதினாலேஜீவவிருட்சத்திற்குள்ளாகபிரவேசிப்பதற்கு அவனுக்கு அதிகாரம் உண்டு”. ஒருவன் சிறிய ஒன்றிலே தவறுவானானால் எல்லாவற்றிலும் குற்றவாளி யாயிருப்பான். நலமானவைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பீர்களானால் அது நிச்சயமாக உங்களுக்கு நலமானதைக் கூறும். அது பரிசுத்த ஆவியாக இருக்குமானால் நலமானதைத் தான் உங்களுக்குக்கூறும். இப்பொழுது, நீங்கள் குற்றவாளியாக இருந்து இன்றிரவு நல்ல துவக்கத்தை துவக்க விரும்புவீர்களானால், “சகோதரன் பிரன்ஹாம், அதை நான் உணர்ந்து கொள்ளவில்லை. நான் வழுக்கிக்கொண்டே இருந்து வந்துள்ளேன். நான் புதிதாக துவங்க விரும்புகிறேன். இந்த நிமிடம் முதல் நான் தேவனை ஆராதிக்க விரும்புகிறேன் என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதைச் செய்ய தைரியம் தேவைப் படுகின்றது. அதை செய்ய உண்மையான.... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நிறைய கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அது சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படி யானால், உங்களுக்குத் தெரியுமா, உங்களுக்குள் இருக்கின்ற ஒன்று நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்று கூறுகிறதென்றால், அப்பொழுது தேவன் உங்கள் அருகாமையில் இருக்கின்றார் என்று அறிந்து கொள்ளுங்கள். 109ஆனால், சரியாக இந்த இடத்தில் நான் வார்த்தையை மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கையில், வார்த்தையை மிகத் தெளிவாக நீங்கள் கேட்டு, இன்னுமாக அங்கே உட்கார்ந்துக் கொண்டு, “நான் அதைச் செய்யமாட்டேன். எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியாது,'' என்று கூறுவீர்களானால், பாருங்கள், அப்படியானால் உங்களுக்குள் இருக்கின்ற அந்த காரியத்தில் தவறு ஏதோ காணப்படுகின்றது. பாருங்கள்? அது சாத்தானைத் தவிர வேறொன்றுமல்ல, அவ்வளவு தான். அது தேவனுக்கு எதிராக உள்ளது. அது அவருடைய நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அது அவருடைய வார்த்தைக்கு எதிராக உள்ளது. 110சிறிது காலத்திற்கு முன்னர், யாரோ ஒருவர், ஒரு புகழ் வாய்ந்த பிரசங்கி என்னிடமாகக் கூறினார். அவர், “சகோதரன் பிரன்ஹாம்” என்றார். அவர் என்னை தன்னுடைய அறைக்கு அழைத்து என் மீது தன் கரத்தை வைத்தார். “நீங்கள் உங்களுடைய ஊழியத்தை பாழாக்கப் போகிறீர்கள்” என்று கூறினார். நான், “என்ன?” என்றேன். அவர், “நீங்கள் எப்போதுமே மக்கள் செய்கின்ற காரியங்களைக் குறித்து கடிந்து கூக்குரலிட்டுக் கொண்டிருக் கிறீர்கள். நீங்கள் ஏன் ..... மக்கள் உங்களை தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்களே,'' என்றார். நான், “நான் தீர்க்கதரிசி அல்ல” என்றேன். அவர், “ஆம், நீர் தீர்க்கதரிசி என்றுதான் மக்கள் கருதுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு ஆவிக்குரிய காரியங் களையும், எவ்விதம் அவர்களால் மகத்தான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் மற்றும் காரியங்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைக் குறித்து கற்றுக்கொடுக்கலா மல்லவா?” என்றார். நான், “அவர்கள் தங்கள் ABC, அ ஆ இ எழுத்துக் களைக்கூட அறியாதிருக்கின்ற அவர்களுக்கு எப்படி என்னால் ஆவிக்குரிய காரியங்களை போதிக்க முடியும்? ஆவிக்குரிய காரியங்களை விடுங்கள். வார்த்தையுடன் தங்களை வரிசைப் படுத்திக்கொள்கின்ற சாதாரண கண்ணியம் கூட அவர்களிடம் இல்லை. பூமிக்குரிய காரியங்களை அவர்கள் நம்பமுடியாத நிலையில், எப்படி அவர்கள் பரலோகக் காரியங்களை விசுவாசிப்பார்கள்?” என்று கூறினேன். அவர், “சரி, நீங்கள் உங்கள் ஊழியத்தை பாழாக்கிக் கொள்ளப்போகிறீர்” என்று கூறினார். நான், “தேவனுடைய வார்த்தையானது எந்த ஒரு ஊழியத்தையும் பாழாக்குகிறது என்றால், அது பாழாகித்தான் போக வேண்டும்” என்றேன். வார்த்தைக்கு திரும்பி வாருங்கள். அது சரியே. 111இப்பொழுது, நீங்கள் சிகரெட்டு புகைத்துக்கொண்டும் இன்னும் அதைப்போன்றவற்றை செய்து கொண்டும் அதே சமயத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கின்றேன் என்று நீங்கள் உரிமைகோருவீர்களானால், அப்படியாக செய்கின்ற உங்களுக்கு வெட்கமுண்டாக நாணித் தலைகுனிவீர்களாக. மனிதராகிய நீங்கள்! நீங்கள், “ஏன் நீங்கள் எப்போதும் பெண்களையே தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்கிறீர்கள். உங்கள் மனைவிகள் அவ்விதமாகச் செய்யவிடுகின்ற மனிதராகிய நீங்கள், ஓ மிஸ்டர், திருவாளரே, அப்படிச் செய்து உன்னை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்கிறாயே, நீ வெட்கத்தால் நாணித் தலைகுனிவாயாக. இப்படிக் கூறுவது கரடு முரடானதாக இருக்கும். ஆனால், சகோதரனே, இது - இது திரியின் கருமுனையை கத்தரித்து நேர்த்தியாக்குகின்ற காலமாகும். பரிசுத்த ஆவியானவர் வந்து தம்முடைய மணவாட்டியை எடுத்துச் செல்லத்தக்கதான நேரம் இதுவாகும். ஆகவே அது அவருடைய வார்த்தையுடன் வரிசைப்படவில்லையெனில், அப்படியானால் அங்கே ஏதோ தவறு காணப்படுகின்றது. 112விழுந்து போயுள்ளவர்களே, புதன்கிழமைகளிலும், சபை ஆராதனை இருக்கின்ற மற்ற இரவுப் பொழுதுகளிலும் வீட்டிலேயே இருந்துக்கொண்டு இங்கே சபைக்கு வராமல் தொலைக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்பவர்களே! சற்று சிந்தியுங்கள், நீங்கள் - நீங்கள் சற்று உண்மையைக் கூறுங்கள், நீங்கள் சபைக்கு வரவேண்டுமென்றால், அப்படிச் செய்வதற்கு உங்களையே நீங்கள் நிர்ப்பந்தம் பண்ணவேண்டியவர்களாக இருக்கிறீர்கள், ஏனென்றால் அப்படிச் செய்தாக வேண்டும் என்பது ஒரு கட்டாயம் என்று நினைப்பதாலேயே. நீங்கள் அதைச் செய்துதானாக வேண்டும். அப்படிச் செய்வது ஒரு கனம் மிக்க, நற்சிறப்புமிக்க ஒரு காரியமாகும். அப்படிச் செய்வதற்கு உங்களுக்கு விருப்பமில்லையெனில் ஏதோதவறு காணப்படுகின்றது. பரிசுத்த ஆவி நீங்கள் தேவனை ஆராதிக்கும்படியாக விருப்பங்கொள்ள செய்கின்றது. இப்பொழுது, இதனுடன், உங்கள் தலைகள் தாழ்த்தப் பட்டிருக்கையில், தேவனிடமாக ஒரு துவக்கத்தை செய்ய வேண்டும் என்று உணர்கிற எல்லாரும், இன்றிரவு உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது இங்கிருக்கின்ற ஒவ்வொருவரும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை, உங்களை, உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அருமையானது. நான் உங்களுக்காக ஜெபிக்கப்போகிறேன். 113பரலோகப் பிதாவே, இப்பொழுது நான் உம்முடைய வார்த்தைகளை எனக்கு தெரிந்தவரைக்குமாக வெளிப் படையாகவும், தெளிவாகவும் மற்றும் வெட்டும்படியாக வுமாக நான் பேசியுள்ளேன். வித்தியாசப் படுவதற்காக அல்ல; கர்த்தாவே அது என்னுடைய அணுகுமுறையாக இருக்கு மாயின் பீடத்தின் மீது இருக்க வேண்டுமென்றால் அது நானாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் யாரோ ஒருவர், என் சகோதரன் அல்லது சகோதரி ஓட்டையாகி ஒழுகுகின்ற ஒரு பழைய படகில் மூழ்கிக்கொண்டிருப்பதை நான் கண்டு அவர்களை நோக்கி கூக்குரலிடவோ அல்லது அவர்களை கடிந்துக் கொள்ளவோ அல்லது அந்த விதமான ஒரு நிலையிலிருந்து அவர்களை எப்படியாயினும் வெளியே கொண்டு வரவோ நான் செய்யவில்லையெனில், அப்படியானால் நான் அவர்களை நேசிக்கவில்லை என்பதாகும். கர்த்தாவே அவர்களை வெளியே எடுக்க நான் முயன்றுக் கொண்டிருக்கிறேன். அதினாலே அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்களே: ஓ பரலோகத்தின் தேவனே, தங்கள் கரங்களை உயர்த்தியுள்ள ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கின்றேன். சிறிய குட்டை மயிர் வைத்துள்ள அநேக பெண்கள் தங்கள் கரங்களை உயர்த்தினதை நான் கண்டேன். அவர்கள் தவறாயிருக்கின்றனர் என்று அறிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களை குறித்த போதுமான கிருபையுடனே கரத்தை உயர்த்தியுள்ளனர். கரத்தை உயர்த்தாத அநேகரும் உள்ளனர். இப்பொழுது, நீர் அதைக் குறித்ததான நியாயாதி பதியாயிருக்கிறீர். ஆனால், தேவனே, நீர் தாமே அவர்களை இரட்சிக்கும்படியாக நான் ஜெபிக்கின்றேன். அதை அருளும். அது ..... 114தங்கள் கரத்தை உயர்த்தியுள்ள அந்த மனிதர், தங்கள் மனைவிகளுடனே உட்கார்ந்து கொண்டு தங்கள் கரத்தை உயர்த்தியுள்ள அருமையான மகத்தான வாலிப ஆண்கள், வயதானவர்களும் தங்கள் கரத்தை உயர்த்தியுள்ளனர். இப்பொழுது பிதாவே, உலகத்தையும் மற்றும் உலகத்தின் காரியங்களையும் நாங்கள் விட்டு விடவேண்டியவர்களாக இருக்கின்றோம், இல்லையென்றால் எங்களால் உம்மை சேவிக்க முடியாது. இன்றிரவு நீர் தாமே உம்மை வெளிப்படுத்திக்கொள்கின்ற விதமாவது, உரைக்கப்பட்டிருக்கின்ற அந்த வார்த்தையை மக்கள் காணும்படிக்கு ஏதுவாக இருக்கும்படியாகச் செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன். மனிதர் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் தேவன் வந்து தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தி, அது தம்முடைய வார்த்தை தான் என்று நிரூபிக்கும் போது நாங்கள் எந்த ஒரு சாக்கு போக்கும் சொல்ல முடியாது, பிதாவே, அதை இன்றிரவு நீர் தாமே அருளவேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன். ஆகவே இந்த மக்கள் தாமே ..... ஒருக்கால் அவர்களில் அநேகர் பாவிகளாக இருக்கலாம். பாவிகளாக, அநேகர் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர். ஆகவே, பிதாவே, நான் ஜெபிப்பது என்னவென்றால் வெளிப்படுத்தப்படுதலை அவர்கள் கண்ட மாத்திரத்திலே.... இன்றிரவு முடிவானது சமீபமாக இருக்கின்றது என்று நீர் தாமே அதை செய்து, உம்மைத் தாமே காண்பிப்பீர் என்றும் நாங்கள் நம்புகிறோம். எதிர்ப்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற குமாரன் தாமே ஆபிரகாமின் வித்தினிடம் சீக்கிரத்தில் வரவிருக்கின்றார். சோதோம் சுட்டெரிக்கப்படப் போகின்றது. 115ஒரு நாளிலே ஃபீனிக்ஸில் ஒரு கல்லின் மேல் கல்லிராத படிக்கு எல்லாம் அகற்றப்பட்டிருக்கும். பள்ளத்தாக்கு களெல்லாம் பெருக்கி சுத்தமாக்கப்பட்டிருக்கும். இந்த நகரத்திலே இன்றிரவு, விபச்சாரம், மதுக்கலவை அருந்தும் விருந்துகள், சிகரெட்டு புகைக்கும் தாய்கள், மகள்கள், நடனங்கள், ட்விஸ்ட் நடனங்கள், ஆடிக்கொண்டிருத்தல், மனிதர் அவலட்சணமான வாழ்க்கை வாழ்தல், இந்த பட்டினத்தின் பாவம்! ஓ தேவனே, நான் அதற்குள்ளாகப் பார்த்து, “முயற்சி செய்தும் என்ன பயன்?” என்று நினைக்கின்றேன். ஆனால் அங்கே அதற்குள்ளாக நோக்கிப் பார்க்கும் போது, இங்கே மற்றும் அங்கும் இருக்கின்ற ஒரு சிறு ஒளியைப் பார்க்கின்றேன், அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவர் ஜெபிப்பதை நான் காண்கிறேன். “ நகரத்தின் மத்தியிலே சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டழுகிறவர்களின் மேல் ஒரு அடையாளம் போடப்பட வேண்டும். அவர்கள் மேல் முத்திரையைப் போடு என்று அந்த தூதனுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது, அவர்கள் மாத்திரம் தான் அழிக்கப்பட மாட்டார்கள்.'' பிதாவே, ஆனால் இந்த மக்களை அழைக்க பயப்படாதிருக்கின்ற அநேக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவர், உரைக்கப்பட்ட குமாரர் இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன். தேவனே, இந்நாளிலே, சரியான காரியங்களை பேசும்படியாக அருள்புரியும். 116நியாயத்தீர்ப்பு நாள் ஒன்று வரவிருக்கின்றது, அப்பொழுது அங்கே எந்த ஒரு சாக்குப்போக்கும் சொல்வதற் கிராது, ஏனென்றால் இன்றிரவு அளிக்கப்பட்ட இந்த செய்தியானது, வானத்தின் விதானத்தில் போடப்படும். அப்பொழுது நாமெல்லாரும் பதில் கூறுவோம். ஆகவே, பிதாவே, நீர் தாமே அவர்களுடைய இருதயங்களை உலகத்தின் காரியங்களிலிருந்து விருத்தசேதனம் செய்யும்படியாக நான் ஜெபிக்கின்றேன், அதினால் தானே இந்த நிகழ்கின்ற உலகத்திலே அவர்கள் தேவபக்தியுடனே வாழ ஏதுவாக இருக்குமே. இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம். ஆமென். உங்களை அப்படியே இருக்கும்படிக்குச் செய்ததற்கு மன்னிக்கவும். நாங்கள் ...... நான் - நான் மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். ஆகவே நான் - நான் ஒருபோதும் .... நான் வெளியே செல்ல வேண்டியவனாக இருக்கின்றேன். கடந்த ..... ஒவ்வொரு இரவும், முடிவாக சுமார் பத்து மணி அளவில் முடித்து வெளியேறினேன். இன்றிரவு நான் ஒன்பதரை மணிக்கு வெளியே செல்ல வேண்டுமென்று நான் விரும்பினேன். அதை நான் செய்யவில்லை. இப்பொழுது, இன்னும் ஒரு நிமிடத்தில் நான் கூறினதை சரியாக முத்தரித்து பொருத்த விரும்புகிறேன். இப்பொழுது, உண்மையாகவே, நான் ஒரு பிரசங்கி அல்ல. எந்த ஒருவரும் அதை அறிவார்கள். எனக்கு கல்வி அறிவு கிடையாது, நான் என்னுடைய பழமையான கெண்டக்கி வார்த்தைகளான, “ஹிஸ் (his), ”ஹைண்ட் (hain't),'“ மற்றும் ”டோட் (tote),“ ”ஃபெட்ச் (fetch), “கேரி (carry),” மற்றும் “தெம் தார், (them thar)” போன்ற வார்த்தைகளை உபயோகிக்கின்றேன். இருக்கவேண்டிய விதத்தில் உள்ள ஒரு பிரசங்கி நான் அல்லவென்று உங்களுக்குத் தெரியும். ஒரு பிரசங்கியாக இருக்கும்படிக்கு தேவையான கல்வியும் எனக்குக் கிடையாது. ஆனால் நான் ஒரு கிறிஸ்தவன் ஆவேன். கர்த்தராகிய இயேசு என்னை பாவத்திலிருந்து இரட்சித்தார். நான் அதை அறிவேன். எனக்குத் தெரிந்த கொஞ்ச காரியத்தை உறுதிப் படுத்த வேறொரு வார்த்தையை அவர் எனக்கு அளித்தார். ஒரேயொரு காரியம் என்னவென்றால் எந்த ஒரு தனிப்பட்ட வியாக்கியானத்தையும் அளிக்க நான் முயல்வதில்லை. அதை நான் அப்படியே வாசிப்பேன். அது என்னவெல்லாம் கூறுகின்றதோ, அதை அப்படியே அதே விதமாகவே நான் கூறுவேன். பாருங்கள்? அவ்வளவு தான் எனக்குத் தெரியும். பாருங்கள்? இப்பொழுது, அது தவறாக வியாக்கியானப் படுத்தப்படுகின்றது என்றால், அதைக்குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே எவ்விதமாக வியாக்கியானப் படுத்தப்பட்டிருக்கின்றதோ அதே விதமாக மாத்திரம் தான் நான் கூறிக்கொண்டிருக்கின்றேன். பாருங்கள்? ஆகவே அவர் எப்போதுமே அதன் பின்பாகவே தரித்திருந்து அதை ஆதரித்துக் கொண்டிருக்கின்றார். 117இயேசு கிறிஸ்து சீக்கிரமாக வருகின்றார் என்று நான் விசுவாசிக்கின்றேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத அதே இயேசுவாக இருக்கின்றார் என்று நான் விசுவாசிக்கின்றேன். “இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம்,” “உலக ஒழுங்கு, காஸ்மோஸ், ''நம்மை காணா . .... என்னைக் காணாது. சபையாகிய நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனென்றால், நான்,” தனிப்பட்ட பிரதிப்பெயர், “இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடனே கூட, உங்களுக்குள்ளே இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்,'' என்று அவர் கூறியுள்ளார் என்று நான் விசுவாசிக்கின்றேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா [சபையார், ”ஆமென்“ என்று கூறுகின்றனர் - ஆசி.] அவர் செய்த கிரியைகள் என்னவென்றும், எப்படி அவர் தம்மை தாமே வெளிப்படுத்துகின்றார் என்பதை நாம் பார்த்தோம். இன்றிரவு நான் ஜெபிப்பது, தேவன் தாமே இந்த சபையை எடுத்து... இப்பொழுது, எவ்வளவாக அவர் என்னை அபிஷேகித்தாலும் சரி, உங்களையும் கூட அவர் அபிஷேகித்தாக வேண்டும். பாருங்கள்? இங்கே பரிசுத்த ஆவியானவர் எவ்வளவாக பேச முயன்றாலும் சரி, பேசப் படுவதைக் கேட்க அங்கே இருப்பவை ஏதோ ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். 118ஒரு நாளிலே இயேசு ஒரு மக்கள் கூட்டம் வழியாகக் கடந்து சென்று கொண்டிருந்தார். அம்மக்கள் கூட்டம், “ரபீ, நீர் இங்கே இருப்பது மிக்க மகிழ்ச்சிகரமான ஒன்றாகும், இன்னார்-இன்னார் அவர்களே'' என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். இயேசு அப்படியே நடந்து சென்று கொண்டேயிருந்தார். அங்கே இருந்த ஒரு சிறு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு விட்டு போய் அமர்ந்து கொண்டாள். இயேசு நின்று, “என்னைத் தொட்டது யார்?' என்றார். என்ன, சீமோன் பேதுரு அவரிடமாக கடிந்து கொள்ளும் விதத்தில் பேசினான். அவன், “ஏன் இப்படிப்பட்டதான ஒன்றைக் கேட்கிறீர்? எல்லாருமே உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கின்றார்களே' என்று கூறினான். அதற்கு அவர், “நான் பலவீனமடைந்ததை அறிந்திருக் கிறேன். வல்லமை”, என்றார். வல்லமை என்றால் பலம் என்பதாகும், “என்னிலிருந்து வல்லமை புறப்பட்டுச் சென்றது,'' என்றார். அவர் ஜனக்கூட்டம் முழுவதுமாக சுற்றுமுற்றும் பார்த்தார். அவரை விசுவாசித்த யாரோ ஒருவர் இருந்தார். அங்கே நூற்றுக்கணக்கானவர்கள் இருந்திருக்கக்கூடும், ஆனாலும் சரி, அவரில் விசுவாசம் வைத்த யாரோ ஒரு நபர் அதில் இருந்தார். அப்போது அவர் அங்கே அந்த சிறு ஸ்திரீ இருப்பதைக் கண்டு அவளுடைய உதிரத்தின் ஊறலைக் குறித்துக் கூறினார், அது நின்று போயிற்று, அவள் சுகமாக்கப் பட்டாள். அது சரியா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) அதன் பின் அவர் தொடர்ந்து சென்றார். பாருங்கள்? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கின்றார். 119இப்பொழுது, ஜெப அட்டைகள் கொடுக்கப் பட்டுள்ளன. அவைகளில் பாதி அளவு கடந்த இரவு அங்கே கொடுக்கப்பட்டது. இன்றிரவு பாதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரவு நாம் முதலிலிருந்து ஆரம்பித்தோமா? முதல் பதினைந்து அல்லது இருபதிலிருந்து ஆரம்பித்தோமா, முதலாம் எண்ணிலிருந்து இந்த - இந்த எண் வரை அழைத்தோமா? எந்த எண்? எந்த எண்ணிலிருந்து? (யாரோ ஒருவர், “இருபது” என்று கூறுகிறார் - ஆசி]. ஒன்றிலிருந்து இருபது வரை. சரி. அநேக ஜெப அட்டைகள் இன்றிரவு இருக்கின்றன. அட்டை எண்களின் பின்வரிசையிலிருந்து நாம் அழைப்போமாக. நாம் ஆரம்பிப்போம். நாம் பார்ப்போம். நமக்கு பதினைந்து நிமிடங்கள் உள்ளன, அப்படியானால் பதினைந்து அட்டைகளை அழைப்போம். அப்படியானால் அது எண்பத்தைந்திலிருந்து நூறு வரைக்குமாக இருக்கும். நாம் எண்பத்தைந்திலிருந்து நூறு எண் வரை ஆரம்பிப்போம். 120ஜெப அட்டை எண் எண்பத்தைந்து வைத்திருப்பவர் யார்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். எண்பத்தைந்து, அங்கே பின்னால் இருக்கும் பெண் தானே? சகோதரியே இங்கு வாருங்கள். எண் எண்பத்தாறு, எண்பத்தாறு அட்டை வைத்திருப்பவர் யார்? இங்கே இருக்கின்றார், எண்பத்தேழு, எண்பத்தேழு. எண்பத்தேழு, உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இந்த மனிதன், எண்பத்தேழு, எண்பத்தெட்டு, எண்பத்தெட்டு, எண்பத்தொன்பது, எண்பத்தொன்பது, தொண்ணூறு, தொண்ணூற்றொன்று, தொண்ணூற்றிரண்டு, தொண்ணூற்று மூன்று, தொண்ணூற்று நான்கு, தொண்ணூற்று ஐந்து, தொண்ணூற்று ஐந்து. ஆம். தொண்ணூற்றாறு, தொண்ணூற்றேழு. தொண்ணூற்றாறு, தொண்ணூற்றாறு எண் வைத்திருக்கும் நபர் எழுந்து நிற்பதை நான் பார்க்க வில்லை, தொண்ணூற்றாறு. நீங்கள் இப்பொழுது உங்கள் அட்டை வைத்திருக்கிறீர்கள் என்றால், வாருங்கள் சரியா? தொண்ணூற்றேழு, தொண்ணூற்றெட்டு, தொண்ணூற் றொன்பது, நூறு, சரி. இந்த மக்கள் எல்லாரும்..... ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது. சுமார் எட்டு அட்டை வைத்திருப்போர் காணப்படவில்லை. 121பாழுது கவனியுங்கள். அது உண்மையாகும். உங்கள் வாழ்க்கையிலே பாவமானது அப்படியே இருக்கையில் அதனுடன் இங்கே மேலே வரவேண்டாம். நீங்கள் இருக்கு மிடத்திலேயே தேவனிடமாக அதை அறிக்கை செய்வது நலமாயிருக்கும். ஆனால் நீங்கள் - நீங்கள் அறிக்கை யிட்டிருந்தால், நீங்கள் உங்கள் பாவத்தை அறிக்கை செய்திருந்தால், முன்னே வாருங்கள். அங்கே இருப்பவர்களில் எத்தனைப் பேர்களிடம் ஜெப அட்டை இல்லாதிருந்து அதே நேரத்தில் இயேசு உங்களை சுகமாக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எத்தனைப் பேர் உள்ளீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள், இயேசு கிறிஸ்து தாமே .... அவர்தாமே... இதை எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள்? கவனியுங்கள், என் பின்னால் இருக்கின்ற இந்த போதகர்களை நான் கேட்டுக்கொள்ளப்போகிறேன். சகோதரரே, சுவிசேஷத்தின் ஊழியக்காரர்கள் என்கின்ற விதத்தில், வேதாகமமானது, புதிய ஏற்பாடானது, எபிரெயர்கள் புஸ்தகமானது, “அவர் இப்பொழுது பரிந்து பேசிக் கொண்டிருக்கின்ற பிரதான ஆசாரியராக இருக்கின்றார்” என்று கூறுகின்றதை நாம் விசுவாசிக்கின்றோமா? [போதகர்கள் “ஆமென்” என்கின்றனர் - ஆசி]. “நம்முடைய பெலவீனங் களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராக,'' சகோதரரே அது சரியல்லவா? (ஆமென்.”) “பிரதான ஆசாரியர்” என்று வேதாகமம் கூறுவதை அறிந்திருக்கின்ற எத்தனைப் பேர் அங்கே உள்ளீர்கள்? [சபையார், “ஆமென்” என்கின்றனர் - ஆசி). 122சரி, நம்முடைய பெலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியராக அவர் இருக்கிறார் என்றால், இப்பொழுது, அவர் எப்படியாக அந்த விதமாக இருக்கின்றார்? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பாரெனில், ஒருவர் தங்களுடைய பெலவீனங்களுடனே அவரை தொட்ட போது எப்படி அவர் கிரியை செய்தார்? அந்த பெரும்பாடுள்ள சிறிய ஸ்திரீ அவரைத் தொட்டாள். ஏனென்றால் அவளுக்கு ஒரு தேவையானது இருந்தபடியால் அவள் அவரைத் தொட வேண்டியதாயிற்று; அவர் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்து அவளைக் கண்டு அவளை அழைத்தார். அது சரியா? சகோதரரே, அது சரி தானே? (போதகர்கள் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி.) இப்பொழுது, அவர் அந்த அதே பிரதான ஆசாரியராக இருக்கின்றாராரானால், அதே விதமாகத் தான் அவர் கிரியை செய்ய வேண்டியவராக இருக்கின்றார். ஏனென்றால் அவர்தாமே - அவர் தாமே அந்த பிரதான ஆசாரியராக இருக்கின்றார். அது சரி தானே? (“ஆமென்.”) ஆம், அதே விதமாகத் தான் அவர் காரியத்தை செய்ய வேண்டும். 123இப்பொழுது, உங்களுக்கு ஜெப அட்டை அவசியமில்லை. தேவையில்லை. உங்களுக்கு ஜெப அட்டை தேவையேயில்லை. உங்களுக்கு தேவைப்படுகின்ற ஒரேயொரு காரியம் என்னவென்றால் நீங்கள் தேவனில் விசுவாசம் கொள்ள வேண்டும் என்பதே. நீங்கள் விசுவாசத்தைக் கொண்டிருந்து, இயேசுகிறிஸ்து வியாதியஸ்தரையும், பிணியாளிகளையும் சுகப்படுத்துகிறார் என்றும், அவர் நிச்சயமாக அதை செய்வார் என்றும் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். இப்பொழுது, ஏதாவதொன்று கூறப்படவோ அல்லது செய்யப்படுவதற்கு முன்னால் நாம் மறுபடியுமாக நம்முடைய தலைகளை ஜெபத்திற்காக தலைவணங்குவோமாக. இப்பொழுது, அவர் அதை செய்வார் என்று நான் கூறமாட்டேன். அவர் செய்வார் என்று நான் நம்புகிறேன். ஆனால் நான் - நான் விசுவாசிக்கின்றேன், அவர் அதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது, அவர் அதைச் செய்வாரெனில், உங்களில் எத்தனைப் பேர் விசுவாசிப்பீர்கள்? உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். அவர் அதை அளிப்பார் என்பதே என் ஜெபமாகும். 124பரலோகப் பிதாவே, இப்பொழுது உம்முடைய வார்த்தையானது, “உம்மைப் பின்பற்ற எல்லாவற்றையும் விடுதல்” என்று கூறுகின்றதை நான் கூறியுள்ளேன். எல்லாவற்றையும் விட்டுவிட்ட எல்லாராலும் உம்மைக் காணும்படியாக ஆனது. நீர் என்ன செய்தாலும் சரி, பாவத்தை விட்டுவிட்டு பின்பற்றாதவர்கள் எவர்களோ அவர்களாலே புரிந்து கொள்ளவே முடியாது. பாவம், அவிசுவாசத்தை விட்டு விடாதிருக்கிறவர்கள் எவர்களோ ...... பாவம் என்பது அவிசுவாசம் என்று நாமறிவோம். எவ்வளவு பரிசுத்தமாக நாம் வாழ்ந்தாலும் சரி. நாம் எதுவாயிருந்தாலும் சரி, நாம் இன்னுமாக தொடர்ந்து அவிசுவாசித்துக் கொண்டிருந்தால் நாம் பாவிகளாக இருக்கின்றோம். “விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட் பட்டாயிற்று” என்று வேதாகமம் கூறுகின்றது. ஆகவே நாம் தானே “ தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையையும் ” விசுவாசித்தாக வேண்டும் என்பதை நாமறிவோம். அது தான் நம்முடைய அன்றாட ஆகாரமாக இருக்க வேண்டும். பிதாவே, நான் ஜெபிப்பதாவது, இன்றிரவு வேதாகமத்திலிருந்து இந்த கடைசி நாட்களுக்கான வாக்குத்தத்தங்களை மேற்கோள் காட்டி இந்த கடைசி நாட்களில் நாம் எதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றோம் என்று நான் கூறியுள்ளேன். கர்த்தாவே, அது சரியானதே என்பதாக இருக்கும்பட்சத்தில் இந்த வார்த்தைகளை அடையாளங்கள் பின்தொடரும்படியாகச் செய்து உறுதிப்படுத்தும். அதை அருளும். நான் என்னையும், வார்த்தையையும் மற்றும் மக்களையும் உம்மிடமாக சமர்ப்பிக்கின்றேன். பிதாவே, அங்கே இருப்பவர்கள், முக்கியமாக ஜெப வரிசையில் வரவிருக் கின்றவர்கள் எல்லாரும் தங்கள் முழு இருதயத்துடனே விசுவாசிக்கும்படியாக நீர்தாமே அவர்களுடைய இருதயங்களை விருத்தசேதனம் செய்யும்படியாக நான் ஜெபிக்கின்றேன். மக்கள் தாமே அந்த மேசியாவாகிய இயேசு கிறிஸ்து, அந்த பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு எங்களுடனே இருக்கின்றார் என்பதை காணும்படிக்குச் செய்யும். ராஜரீக வாக்குத்தத்தத்தின் மூலம், வெளியே அழைக்கப்பட்ட, ஆபிரகாமின் வித்தாகிய, தெரிந்து கொள்ளப்பட்ட சபையாகிய, சபையில் அவர் இருக்கின்றார். அதை அருளும், இயேசுவின் நாமத்தில். ஆமென். 125இப்பொழுது, ஒரு நிமிடத்திற்கு நாம் சற்று பார்க்கட்டும். இப்பொழுது, நாம் நம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம், சில நிமிடங்கள் மாத்திரமே, மிகச்சிறிய அளவிலான நிமிடங்கள் மாத்திரமே, சுமார் பத்து நிமிடங்கள் ..போகிறோம். மாத்திரமே எடுத்துக் கொள்ளப்போகிறோம். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? (“ஆமென்”). இன்றிரவு நான் வார்த்தையிலிருந்து உங்களுக்கு வாசித்துக்காண்பித்த இந்த காரியங்கள் உண்மை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (“ஆமென்”) இயேசு இந்த பூமியில் இருந்த போது அவர் என்ன செய்தாரோ அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (ஆமென்.“) அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (”ஆமென்“). நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (”ஆமென்“). இப்பொழுது, அது அவருடைய வாக்குத்தத்தம் ஆகும், அவர் அதை ஜீவனுள்ளதாக செய்ய வேண்டியவராக இருக்கின்றார். ”நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.'' இப்பொழுது, உங்கள் நோக்கமும் குறிக்கோளும் சரியானதாக இருந்தாக வேண்டும். அதை நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும். 126இப்பொழுது, எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் ஜெப வரிசையில் இல்லை என்றே நான் நம்புகிறேன். நாம் எல்லாரும் இதற்கு முன்னர் சந்திக்காதவர்களாவோம். நானும் உங்களுக்கு அந்நியன் ஆவேன். அங்கே இருப்பவர்களும் அந்நியர்கள் தான். உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நீங்கள் எல்லாரும் அறிவீர்கள், இங்கே இந்த சிறிய ஜெப வரிசையில் உள்ளவர்களாகிய உங்களைக் குறித்தும் எனக்குத் தெரியாது என்று அறிந்துள்ளவர்கள் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. அங்கே உள்ள எல்லாருமே, நான் உங்களை அறியேன் என்றும், அல்லது உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்பவர்கள் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இதோ பாருங்கள். உங்களுக்குப் புரிகின்றதா. அப்படியானால், அது ஒரு மறைவான காரியமாகும். ஜெப அட்டைகள் வைத்திருப் பவர்கள் இங்கே இருக்கின்றனர். அங்கே ஜெப அட்டை இல்லாதவர்கள் ... ஜெப அட்டையானது என்னவென்றால் அதில் ஒரு எண் குறிக்கப்பட்டிருக்கும். அது ஒரு அட்டை மாத்திரமே தவிர வேறொன்றும் அல்ல. அது உங்களுக்கு ஒரு எண்ணைத் தான் அளிக்கின்றது, என் மகன் வந்து எண்கள் மாறும்படியாக அவைகளை கலைத்து ஒன்று சேர்ப்பான், பிறகு யார் யாருக்கு ஜெப அட்டை தேவைப்படுகின்றதோ அவர்கள் ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட அட்டை எண் கூட அவனுக்குத் தெரியாது. எவருக்குமே தெரியாது. ஆம், அட்டைகள் எல்லாம் மாற்றி வைத்து குலுக்கி வைக்கப்படுகையில், ஒரு எண்ணிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் மாற்றி வைக்கப்படுவதால் அவனுக்கு எது குறிப்பிட்ட அட்டை என்று தெரியாது. யார் ஜெப வரிசையில் இருப்பார் என்பதும் கூட தெரியாது, ஏனென்றால் நாங்கள் அதை கூறுவதில்லை. அநேக முறை, நாங்கள் அவைகளை அங்கே கொண்டு சென்று ..... 127முதலாவதாக நான் ஆரம்பித்த போது, ஒரு மனிதன் ஜெப அட்டைகளை விற்றுக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். யாரோ ஒருவர், “என் மனைவியை ஜெப வரிசையில் நிற்க வைக்க நான் உங்களுக்கு ஐந்நூறு டாலர்கள் கொடுக்கின்றேன்” என்று கூறினார். நான் என் சொந்த மகனை அழைத்துச் சென்றேன். அப்பொழுது நான், “மகனே, மக்கள் முன்னதாக காரியத்தை சரியாக செய்கின்றாய் என்பதை காண்பிக்கும்படியாகவும், நீ ஜெப அட்டையை பணத்திற்கு விற்பதில்லை என்பதை மக்கள் அறிந்துக் கொள்ளும்படியாகவும் நீ செய்ய வேண்டியது என்னவென்றால், நீ அவர்களுக்கு முன்பாகச் சென்று ஜெப் அட்டைகளை இவ்விதமாக எண்களை தொடர்ச்சியாக இராமல் குலுக்கிக்கலந்து பிறகு யார் யாருக்குத் தேவைப்டுகின்றதோ அவர்களுக்கு அதைக் கொடு. மேலும், மகனே, நான் அங்குசென்றடையும் வரைக்கும் எந்த எண்ணிலிருந்து அழைப்பேன் என்பது உனக்கும் தெரியாது” என்று கூறினேன். மறுபடியும் மறுபடியுமாக அதை எத்தனைப் பேர் கூட்டத்தில் கண்டுள்ளீர்கள்? [சபையார் “ஆமென்” என்கிறார்கள்ஆசி.) ஒவ்வொரு முறையும் நான் எண்களை மாற்றி அழைத்து, இதிலிருந்து. அந்த எண்வரைக்குமாக அழைப்பதுண்டு. அதற்கும் மேலாக, மேடையின் மீது ஒருவர் சுகமாக்கப்படுகையில் அங்கே ஜனக்கூட்டத்திலிருந்து ஒரு டஜன், பன்னிரண்டு பேர்கள் அழைக்கப்படுகின்றனர், பாருங்கள். அது சரியே, ஜெப அட்டைகள் இல்லாமல் அழைக்கப்படுகின்றனர். 128அது என்னவென்றால், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கின்ற, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தவறிழைக்காத தன்மையாகும். அவரை பின்பற்றும்படியாக நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிடுவீர்களா? சுகமளித்தலுக்காக அவரைப் பின்பற்றும் படியாக உங்கள் அவிசுவாசத்தை விட்டுவிட நீங்கள் விரும்புகிறீர்களா? அவரை பரிசுத்தத்தில் பின்பற்றி அவருக்காக முன்னேறும்படிக்கு உங்கள் - உங்கள் உலகப்பிரகாரமான காரியங்களை விட்டு விடுங்கள். அதை இப்பொழுது செய்யுங்கள். அவர் செய்வார் என்று நான் கூறவில்லை . அவர் செய்யும் போது, அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 129இந்த பெண் சரியாக இங்கே நின்றுகொண்டிருக்கின்றாள் - இந்த காட்சியானது, கடந்த இரவு நான் பரிசுத்த யோவான் 4 குறித்து கூறின அதே காட்சி மறுபடியுமாக இங்கே இருப்பதாகும். இங்கே ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக சந்திக்கின்றனர். அங்கே உட்காருவதற்கென ஒரு சிறு திண்ணை இருந்தது. நீங்கள் எப்போதாவது அங்கே சமாரியாவிற்கு, சீகாருக்கு வெளியே அந்த சிறிய கிணற்றண்டைக்கு சென்றிருப்பீர்களானால் காட்சியை அறிவீர்கள். அங்கே பரந்த அழகான ஒரு காட்சியமைப்பு இருக்கும் கிணற்றைச் சுற்றிலும் திராட்சைக் கொடிகள் அந்த விதமாக இருக்கும். அங்கே தான் அந்த ஸ்திரீ உட்கார்ந்து இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தாள். ஒரு மனிதனும், ஒரு ஸ்திரீயும் முதல் முறையாக அங்கே சந்தித்தனர். அவளுடைய பிரச்சனை என்ன என்று அவர் அந்த ஸ்திரீயிடம் கூறினார். அவளுடைய பிரச்சனை என்னவென்றால், அவள் பாவ ஜீவியத்தில் இருந்தாள் என்பதே. 130அது அவளாக இருக்கக்கூடும். அவள் ஒரு பாவியாக இருக்கக்கூடும். அவள் ஒரு மாய்மாலக்காரியாக இருக்கக் கூடும். அவள் ஒரு பரிசுத்தவாட்டியாக இருக்கக்கூடும். அவள் தன்னுடைய சரீரத்திற்கு சுகம் தேவைப்படுகிறது என வந்திருக்கலாம். வேறு யாருக்காவது சுகம் வேண்டி அவள் வந்திருக்கலாம். அவளுக்கு பணத்தேவை இருக்கலாம். அவளுக்கு, அவள் இங்கே எதற்காக இருக்கின்றாள் என்பது எனக்குத் தெரியாது. என்னாலே அதை உங்களுக்குக் கூறமுடியாது. அவள் அங்கே நின்று கொண்டிருக்கும் ஒரு பெண் மாத்திரமே. அவ்வளவுதான். அது தான் உண்மையாகும். நாங்கள் இதுவரை சந்தித்ததேயில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு இங்கே வருவாரானால்..... இப்பொழுது, அவள் வியாதியிலிருந்து, அவளை சுகமாக்க என்னாலே முடியாது. தேவன் ஏற்கனவே செய்திருப்பதை என்னால் செய்ய முடியாது. இப்பொழுது ஒரேயொரு காரியமானது ..... இயேசு இந்த சூட்டை அணிந்தவராக இங்கே நின்று கொண்டிருக்கின்றார் என்றால் எப்படியாக இருக்கும்? இவள் இயேசுவிடமாக வந்து “இயேசுவே, நீர் என்னை சுகமாக்க மாட்டீரா?” என்று கூறினால் எப்படியிருக்கும். ஆம், அதற்கு அவர், “என் பிள்ளையே, அதை நான் ஏற்கனவே செய்து முடித்துவிட்டேனே. நான் உன்னுடைய மீறுதல்களுக்காக காயப்பட்டேனே. என்னுடைய தழும்பு களால் நீ சுகமாக்கப்பட்டாய்,” என்று கூறுவார். அது சரி தானே? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி.) அது செய்து முடிக்கப்பட்ட ஒரு காரியமாகும். நீங்கள் வந்து “இயேசுவே, நீர் என்னை இரட்சிக்க மாட்டீரா? நீர் என்னை இரட்சிக்கமாட்டீரா?'' என்று கூறுவீர்களானால், காரியமானது அப்படியாக இல்லை . அவர் அதை ஏற்கனவே செய்து விட்டார். 131“கர்த்தராகிய இயேசுவே, நான் உம்முடைய பாவ நிவாரணத்தை ஏற்றுக் கொள்கிறேன். நான் ஒரு பாவி.'' பாருங்கள்? நீங்கள் முன்பே அங்கே இரட்சிக்கப்பட்டீர்கள். நீங்கள் முன்பே அங்கே சுகமாக்கப்பட்டீர்கள். நீங்கள் அதை ஏற்றுக் கொண்டீர்கள். அவ்வளவு தான். விசுவாசத்தினாலே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். விசுவாசத்தைக் கொண்டு உங்கள் இரட்சிப்பை ஏற்றுக் கொள்கிறீர்கள். எவராவது உங்களிடமாக வந்து, தங்களுக்கு சுகமளிக்கும் வல்லமை உள்ளதென்றும், அவர்களாலே உங்களை சுகமாக்க முடியும் என்றும் கூறுவார்களானால், நீங்கள்..... நீங்கள் அதனிடமிருந்து முற்றிலுமாக விலகியிருங்கள், ஏனென்றால் அவ்விதமாக இருக்கவே முடியாது. சுகமளிக்கும் வல்லமை யானது கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கின்றது, அது ஏற்கெனவே முடிக்கப்பட்ட ஒரு கிரியையாகும். ஒரு மனிதன் உங்களிடமாக வந்து, உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கான வல்லமையை தேவன் தனக்கு அளித்து அதை செய்ய முடியும் என்று கூறுவானானால், நீங்கள் அதை ஒரு போதும் விசுவாசிக்க வேண்டாம். மக்கள் ஏற்கெனவே மன்னிக்கப்பட்டு விட்டனர். இயேசு இங்கே இன்றிரவு நின்று கொண்டிருப்பாரானால், ஒரேயொரு காரியம், அவர் தேவனுடைய குமாரன் என்று அது அறிவிக்கும். அவர் மாத்திரம் ..... இப்பொழுது என்னுடைய கரங்களெல்லாம் ஆணியால் கடாவப்பட்ட காயங்களால் நிறைந்து அக்காயங்களிலிருந்து இரத்தம் வெளியே ஓடிக் கொண்டிருந்து, இங்கே முட்களால் நிறைந்திருக்குமானால் எப்படியிருக்கும்? அந்த விதமாக இருப்பது இயேசுவாகச் செய்து விடாது. அது என்னுடைய மாம்சமாக இருக்கும். அந்த மாம்சமானது தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். அது வருகையில், இனி காலமென்பது இருக்காது. அது சரி. இயேசு கீழே இறங்கும் போது, எல்லாமே முடிந்து விடும். ஆனால், அவர் இங்கே ஆவியின் ரூபத்தில் இருக்கின்றார். ஆகவே, அவருடைய ஜீவனானது உங்களுக்குள்ளும் எனக்குள்ளுமாக இருந்து உங்களுக்கு விசுவாசத்தையும் எனக்கும் விசுவாசத்தையும் அளிக்கும்படியாக இருக்கின்றது. 132இப்பொழுது, இங்கே சற்றுப் பாருங்கள். இந்த-இந்த ஒலிப்பெருக்கியானது, இதற்குள்ளாக உயிருள்ள ஒரு சத்தமானது பேசாவிட்டால், இந்த ஒலிப்பெருக்கியானது முழுவதுமாக பேசாத, ஓசையற்றதான ஒன்றாகத்தான் இருக்கும். அது சரியா? இப்பொழுது கவனியுங்கள். கூர்ந்து கவனியுங்கள், நான் இப்பொழுது கூறப்போவதை தவறவிடமாட்டீர்கள். இந்த காரியத்தில், தேவன் அதைச் செய்வாரானால், அது அதை முற்றுப் பெறச் செய்யும். இப்பொழுது, இந்த ஒலிப்பெருக்கியால் மேற்கொண்டு எதையுமே பேச முடியாது, ஏனென்றால் பேசுவதற்கென அதனிடமாக ஒன்றுமே கிடையாது. அது சரிதானே? இப்பொழுது, இந்த ஒலிப்பெருக்கியானது பேசவேண்டு மானால் அதற்கிருக்கின்ற ஒரே ஒரு வழி என்னவென்றால் யாராவது ஒருவர் அதற்குள்ளாக பேசியாக வேண்டும். இப்பொழுது, இதோ இங்கே நான் இருக்கின்றேன். அந்த பெண்ணை எனக்குத் தெரியாது. நான் அவளை ஒரு போதும் கண்டதேயில்லை. அது தேவனுக்கு முன்பாக என்கரங்களாகும். நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் என்று அவளும் தன் கரங்களை உயர்த்தியிருக்கின்றாள். அவளைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ஏதோ ஒன்று இங்கே வந்து இவளுக்குரிய கோளாறு என்ன என்று கூறினாலொழிய நானும் கூட ஓசையற்ற, பேசக்கூடாத ஒருவனாக இருப்பேன், ஏனென்றால் எனக்கு ஒன்றுமே தெரியாது. அது சரிதான் என்று தேவன் அறிவார். பாருங்கள்? ஏதாவதொன்று தான் பேசுதலைச் செய்ய வேண்டிய தாயிருக்கின்றது. 133இப்பொழுது. நீங்கள் உங்கள் சொந்த தெரிந்து கொள்ளுதலைச் செய்யலாம். பிலிப்பு செய்தது போல நீங்கள் செய்வீர்களானால், அவன் கூறினான்.... அல்லது நாத்தான்வேல் கூறினது போல, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, நீர் இஸ்ரவேலின் ராஜா” எனலாம். பாருங்கள். அல்லவென்றால் அது பெயல்செபூல் என்று அவர்கள் கூறினது போல நீங்கள் அவர்களைப் போல இருக்கலாம். இன்றிரவு அவர்கள் எங்கே இருக்கின்றனர் என்று உங்களால் காணமுடிகின்றதா? இன்றிரவு நாத்தான்வேல் எங்கிருப்பான் தெரியுமா? அழிவில்லாமை, சாவாமையில் (immortal), பாருங்கள்? உங்கள் தெரிந்து கொள்ளுதலை, தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களைப் பொறுத்த ஒன்றாகும். பாருங்கள்? 134ஆகவே இப்பொழுது அதைக் கூறுகின்றேன் - அவர் எனக்கு அபிஷேகத்தை அளிக்கின்றாரா என்று நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். அவர் அபிஷேகத்தை அளிக்கவில்லை யென்றால், நண்பர்களே, அப்பொழுது நான் செய்யத்தக்கதான ஒரே ஒரு காரியம் தான் உள்ளது, அது என்னவென்றால், இன்றிரவு அவர் என்னை சந்திக்கவில்லை என்று உங்களிடம் கூறி, என்னை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் என்று வருத்தத்துடன் மன்னிப்பு கோருதலே. நாம் வியாதியஸ்தர் மேல் கரங்களை வைத்து, அவர்களுக்காக ஜெபித்து ஆசீர்வாதத்தைக் கோரி, பீட அழைப்பைக் கொடுத்து வீட்டிற்குச் செல்வோம். அதைத்தான் நம்மால் செய்யக்கூடும். நான் செய்ய வேண்டுமென்று அறிந்திருப்பதும் அதுவேயாகும். ஆனால் அவர் நிச்சயமாக வருவாரானால், கிறிஸ்துவைக் காண வேண்டுமென்று வாஞ்சித்து கரத்தை உயர்த்தின உங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டுமென்றால், இந்த காரியம் முடிவுபெற்ற பின்னர் நீங்கள் நேராக இங்கே வந்து முழங்காற் படியிட்டு “கர்த்தராகிய இயேசுவே, நான் இப்பொழுதே என்னை உம்மிடமாக ஒப்புவித்து சரணடைகின்றேன்' என்று கூறுவது உங்கள் கடமையாகும் என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் நான் ஒரு பொய்யன் என்றால், அவர் ஒரு போதும் ஒரு பொய்யனை உறுதிபடுத்த மாட்டார். பாவத்திற்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. தேவன் அவ்விதமாக செய்யவே மாட்டார். ஆனால் நான் உங்களுக்கு சத்தியத்தை கூறியிருந்தேனானால் அப்படியானால் அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டு அது தான் சத்தியம் என்று - என்று - என்று நிரூபிக்க அவர் கடமைப்பட்டுள்ளார். தேவனே, அதை அருளும் 135இப்பொழுது சற்று பயபக்தியாயிருங்கள். பாருங்கள்? ஜனக்கூட்டத்தில் எல்லா இடத்திலும் உள்ளவர்களே, சற்று பயபக்தியுடனே இருங்கள். பெண்ணே , நான் உங்களிடம் ஏதாவதொன்றைக் குறித்து சற்று பேச வேண்டியதாயிருக்கும். அபிஷேகத்தை நான் என் மேல் இன்னும் உணரவில்லை. ஆகவே எனக்கு - எனக்கு உங்களைத் தெரியாது. காரியமானது அவ்வாறு தான் உள்ளது. இப்பொழுது, நீங்கள் ஒரே ஒரு காரியத்தை மாத்திரம் தான் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உங்களிடம் ஏதாவதொன்றைக் கேட்டால் அப்பொழுது “ஆமாம்” அல்லது “இல்லை ” என்று மாத்திரம் கூறுங்கள். பாருங்கள்? இப்பொழுது, இதை நான் செய்வதன் காரணம் என்னவெனில். .. நாம் ஒன்றை எடுத்துக் கொள்வோம், அதினாலே ..... 136நாம் வேத வசனத்தை ஒரு போதும் விட்டு விட விரும்புவதே கிடையாது. நீங்கள் சரியாக வேத வசனத்துடனே தரித்து நில்லுங்கள், அப்பொழுது நாம் சரியாக இருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்வோம். இப்பொழுது, உதாரணத்திற்கு, இயேசுவானவர், ஆம், அவர் வேறொரு பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்தார், அவர் எரிகோவிற்கு பிரயாணித்துக் கொண்டிருந்தார். அதன் வழியானது மலையின் கீழே நேராக சென்று கொண்டிருந்தது. ஆகவே அவர் சமாரியாவின் வழியாக இந்த மேல் வழியாக செல்ல வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, பிதாவானவர் அவரை அங்கே அனுப்பியிருந்தார். இயேசு கூறினார் ..... அடுத்த அதிகாரத்தில், 5வது அதிகாரத்தில், ஏதோ ஒரு விதமான வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு மனிதனை அவர் சுகமாக்கியிருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே படுத்துக் கிடந்தனர், முடவர்கள், குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் அநேகர் அங்கே தண்ணீர் எப்போது கலங்கும் என்று காத்துக்கொண்டிருந்தனர். இயேசு அந்த வழியாக வந்தார், அங்கே நாள் பட்ட நோயினால் பீடிக்கப்பட்டிருந்த மனிதனைக் கண்டார். ஒருக்கால் அந்நோய் காசநோயாகவோ, சிறுநீர்ப்பையை சுற்றி இருக்கும் பிராஸ்டேட் சுரப்பி கோளாறாகவோ அல்லது ஏதாவதொன்றாகவோ இருந்திருக்கலாம். அப்பொழுது அவர் அவனை சொஸ்த மாக்கினார். ஏனென்றால், அவன் அங்கே இருந்தான் என்று அவர் அறிந்திருந்தார். அந்த வழியில் அவன் இருப்பான் என்று அவர் அறிந்திருந்தார். அவர் பிறகு தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அங்கே காத்திருந்த அநேகம் பேரை அவர் விட்டுச் சென்றார். அவர்தம் வழியில் சென்று கொண்டிருந்தார். அது உண்மை என்று நமக்குத் தெரியும். அது சரியா? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) 137யூதர்கள் அவரைக் கண்டு, அவரைக் கேள்வி கேட்டனர், இன்றிரவும் கூட அவர்கள் மறுபடியுமாக அவரைக் கேள்வி கேட்பார்கள். “ஏன் அவர் அவ்விதமாகச் செய்தார்? அவருக்கு மனதுருக்கம் இருந்து எல்லாரிடத்திலும் அன்பு கூருகின்ற ஒருவராக இருப்பாரானால் ஏன் அவர் மீதமிருந்த அநேக முடவர்கள், குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புகளை யுடையவர்களை அப்படியே விட்டு விட்டார்?” மிகவும் நோய்வாய்ப்பட்டிராத ஒரு மனிதனை மாத்திரம் அவர் சுகமாக்கினார். அந்நோய் அவனைக் கொல்லப் போவதில்லை. அவன் முப்பத்தெட்டு வருஷமாக அந்நோயைக் கொண்டிருந்தான். அது காலப்போக்கிலே அவனை பலவீனமாக்குகிற ஒரு காரியமாக இருந்தது. அவனால் நடக்க முடிந்தது. அவன், “நான் குளத்தண்டை போகிறதற்குள்ளே, வேறொருவன் என்னை விட வேகமாக சென்று அங்கே இறங்கி விடுகிறான்” என்று கூறினான். பாருங்கள், “வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான்”, ஆனால் இயேசு அந்த ஒரு மனிதனை சொஸ்தமாக்கினார். 138அவர்கள் இயேசுவை ஆட்சேபித்து கேள்வி கேட்ட போது, இதோ அவர் கூறின வார்த்தைகள், பரிசுத்த யோவான் 5:19, “மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். ஆகவே அவர் சமாரியாவிற்கு சென்றபோது; அங்கே செல்லும்படியாக கர்த்தர் அவரை வழிநடத்தினார். இப்பொழுது, அவருடைய ஊழியக்காரனாகிய என்னை ஃபீனிக்ஸுக்கு வரும்படிக்கு கர்த்தர் வழிநடத்தினார். அவர் இங்கே இன்றிரவு வரும்படிக்கு அவர் வழிநடத்தினார். இதோ நான் இங்கே இருந்து அவருடைய காரியங்களை உரிமை கோரிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது, இயேசு சமாரியாவுக்கு சென்ற போது, நடந்த முதல் காரியம் என்னவென்றால் அவருக்கு முன்பாக ஒரு ஸ்திரீ வருவதைக் கண்டார். அவளுடைய நிலைமை என்ன என்பதை கண்டறியும் வரைக்குமாக அவளுடனே அவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் அவளுடைய காரியத்தைக் கூறின உடனே, அவர் ஒரு தீர்க்கதரிசியாகவோ அல்லது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவாகவோ இருக்க வேண்டும் என்பதை அவள் துரிதமாக அடையாளம் கண்டுகொண்டாள். அவர்தான் அந்த மேசியா என்று அவர் கூறினார். பாருங்கள்? 139ஆகவே நாம் அறிந்துக் கொள்வதென்னவெனில் கடந்து சென்ற நாட்களிலே தீர்க்கதரிசிகள் இருந்தனர். இன்றைக்கு அது கிறிஸ்துவாகும். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும், வகைவகையாகவும் தீர்க்கதரிசி மூலமாய்ப் பிதாவுக்கு திருவுளம் பற்றின தேவன்; இந்த கடைசி நாட்களில் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாய் நமக்கு திருவுளம்பற்றினார்,” அது தான் நமக்குள் இருக்கின்ற பரிசுத்த ஆவியாகும். இப்பொழுது அவர் இங்கே இருக்கின்றார். நீங்கள் அதை அடையாளம் கண்டுகொள்கிறீர்களா. (சகோதரி “ஆம்” என்று கூறுகிறார்கள் - ஆசி.] ஒரு கிறிஸ்தவன் இன்னொரு கிறிஸ்தவனிடம் கேட்பது போல நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நான் அங்கே நோக்கிப் பார்த்த உடனே, உங்களுக்கு ஒரு காரியம் சம்பவித்ததை உங்களால் கூற முடியும், அது மிக மிக இனிமையான, தாழ்மையான ஆவியாகும். அது சரி தானே? அது உண்மை யென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள், அதினாலே மக்கள் அதைக் காணும்படிக்கு ஏதுவாகும். பாருங்கள்? இப்பொழுது, சரியாக இப்பொழுது, இந்த பெண்ணை பார்க்கையில், உங்களால் இவளைப் பார்க்க முடிகிறதென்றால், ஒரு சொகுசாவின் நிற ஒளியானது இருப்பதைப் பாருங்கள். அது இந்த பெண்ணைச் சுற்றிலும் அசைந்துக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது அவள் என்னிடமிருந்து நகர்ந்து செல்கின்றாள். இவள் இல்லை. அது வேறு யாரோ ஒருவருக்கு அது வேறொரு பெண்ணாகும். அது என்னவென்றால், நீங்கள் வேறு ஒரு பெண்ணுக்காக ஜெபிக்கின்றீர்கள், அது வேறொருவர். அது உங்கள் மாமியார் ஆகும். (சகோதரி “ஆமாம்” என்கிறார்கள் - ஆசி.) அவர்களுக்கு சிறுநீரகங்கள் கோளாறு இருக்கின்றது (“ஆம்”) மேலும் - மேலும் அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் தான் உள்ளது. (“ஆம்”) அது புற்று நோயாக இருக்கும் என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். அதற்காக தான் நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள். நான் உங்கள் மாமியாருக்காக ஜெபிக்க வேண்டும் என்று கேட்க இங்கே இருக்கிறீர்கள். (“ஆம்”). அது கர்த்தர் உரைக்கிறதாவது. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு விசுவாசத்துடனே விசுவாசித்துக் கொண்டே செல்லுங்கள். அவர்கள் அதை அகற்ற வேண்டிய அவசியமே இல்லை. சந்தேகிக்காதீர்கள். உங்கள் கரத்தில் வைத்துள்ள அந்த சிறு பொருளை எடுத்துச் சென்று அவளின் மீது வை. 140உங்கள் முழு இருதயத்துடன் நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி]. நீங்கள் நலமா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் ஆவோம். இது நாம் முதல் முறையாக சந்திக்கும் ஒரு சந்திப்பாகும். ஆகவே .... தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக தம்முடைய ஆவியை அனுப்பி யிருப்பாரானால், இயேசு, “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, நான் அவர்கள் நடுவிலே இருப்பேன்” என்று கூறினார். அது அவருடைய வாக்குத்தத்தமாகும். அப்படித்தானே? இப்பொழுது, அவரால் தம்முடைய வாக்குத்தத்தத்தை விட்டுவிட்டு பின்வாங்கிச் செல்லமுடியாது. ஒரே ஒரு காரியம் என்னவென்றால், நாம் நம்முடைய விசுவாசத்திலே மிகவும் மந்தமாகிப் போய் அவரைக் காணக்கூடாத நிலைக்கு மந்தம் கொள்கிறோம். அதன் காரணமாகத்தான் தேவன் பூமிக்கு தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். பாருங்கள். மக்கள் தங்கள் வேதாகமங்களை வாசிப்பது கிடையாது. அவர்கள் - அவர்கள் வாசிப்பதே யில்லை. அவர்கள் அப்படியே சென்று விடுகின்றனர். ஆதலால் தேவன் எப்போதுமே அவர்களுக்கு ஒரு அடையாளத்தை அனுப்புகிறார். ஆகவே வழக்கமாக தீர்க்கதரிசி ஒரு அடையாளமாக இருக்கிறான். பாருங்கள்? இன்று பரிசுத்த ஆவி தான் நம்முடைய அடையாளம். ஏனென்றால், அவர் தான் நம் மூலமாக அசைந்துக் கொண்டிருக்கும் தேவனுடைய தீர்க்கதரிசியாவார். அவர் தேவனுடைய தீர்க்கதரிசி. அவர், கடைசி நாட்களுக்கான ஒரு அடையாளம். 141இப்பொழுது, உங்களை யார் என்று தெரியாதவனாக, உங்களைக் குறித்து ஒன்றுமே அறியாதவனாக இருக்கின்றேன். ஆனால் இப்பொழுது வேதாகமத்திலிருந்து நான் எடுத்துக் சாட்டின கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் தாமே என் மூலமாக பேசி நீங்கள் எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என்பதை கூறுவாரானால், அது உங்களை விசுவாசிக்கும்படிக்குச் செய்யுமா? (சகோதரி “ஆமாம்” என்கின்றார்கள் - ஆசி.) அது இங்கு குழுமியுள்ள கூட்டத்தாரை விசுவாசிக்கும்படிக்குச் செய்யுமா? (சபையார் “ஆம்” என்கின்றனர் - ஆசி]. இப்பொழுது, பிதாவானவர் கேட்டுக்கொண்டிருக் கின்றார். அதை நான் அறிவேன். நீங்கள் நரம்புக் கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது சரியானதே. அது சரி என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது, அங்கே இருக்கின்ற ஒருவர் நான் இதை யூகித்து கூறுகிறேன் என்று நினைத்தார். சகோதரனே, இப்பொழுது, உங்களால் அதை மறைக்க முடியாது. அது இங்கே வந்துக் கொண்டிருக்கின்றது. பாருங்கள்? அதை நான் கண்டேன். அவ்விதமாக நீங்கள் விசுவாசிக்க வேண்டாம். அவ்விதமாக நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம். அது பாவமாகும். அது அவிசுவாசமாகும். அதற்காக தேவன் உங்களை ஆக்கினைக்குள்ளாக்குவார். அவ்விதமாக யோசித்ததற்கு நியாயத்தீர்ப்பின் நாளிலே நீங்கள் பதிலளிப்பீர்கள். அவ்விதமாக நான் கூறித்தானாக வேண்டும், அப்படிக் கூறுவதனால் நான் தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. 142அவர் உங்களைக் குறித்து என்ன கூறினார் என்று தெரியவில்லை . ஒரு நிமிடம் பொறுங்கள். ஆமாம், அதோ அது உள்ளது. அது ஒரு நிழல். அது நரம்புத் தளர்ச்சியாகும், பெலவீனமாகும். நரம்புத் தளர்ச்சியினால் பெலவீன மடைகிறீர்கள், மிகவும் நிலைகுலைந்து போயுள்ளீர்கள். நீண்ட காலமாக இப்பிரச்சனையினால் பீடிக்கப்பட்டுள்ளீர்கள். அது சரி. இன்னும் ஒரு பிரச்சனை உங்களுக்கு உள்ளது. நீங்கள் வேறு ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது மருத்துவமனையில் வயிற்றுக் கோளாறினாலே உள்ள உங்கள் கணவருக்காக, இப்பொழுது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருமதி. குட், வீடு செல்லுங்கள், உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசியுங்கள். அதை அவரின் மீது வையுங்கள். அப்போது அவர் - அவர் சுகமடைவார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களை அறிவாரா? பாருங்கள்? நிச்சயமாக, அவர் அறிவார். ஆம், அது ... கலிலேயாவில் நடந்த அந்த அதே இயேசு தான் இப்பொழுது மாறாதவராக இன்றிரவு இங்கே இருக்கின்றார் என்று நீங்கள் உணர்கிறீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) உங்களால் அதை உணர முடிகின்றதா? ) (“ஆமென்,”) இப்பொழுது, அதைக்குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது .... ஜெபம் ஏறெடுக்கப்பட்ட பெண் அவர்கள் தான் என்று நான் நினைக்கின்றேன், அதோ அங்கே இருப்பவர்கள். அது சரியா? அந்த பெண்ணையாருக்காவது தெரியுமா? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அந்த காரியங்கள் சரியானவை தானா? அது சரி என்றால் உங்கள் கரத்தை அசைத்துக் காண்பியுங்கள். சரியாக அங்கே. அது அருமையானதாகும். 143வாருங்கள். ஆங்கிலத்தில் பேசுவீரா? (சகோதரன் “ஆம் ஐயா” என்று கூறுகிறார் - ஆசி.) அது சரிதான். நீர் ஒரு இந்தியன் தானே? [“நான் இந்தியன்”] நீர் ஒரு உண்மையான அமெரிக்கன், உங்கள் பேரில் எனக்கு மரியாதை உண்டு. [“ஆம், ஐயா”] நான் நினைப்பது என்னவென்றால் .... நான், ஒரே மனிதனாக, என்னால் எந்த ஒரு தீர்மானத்தையும் செய்ய முடியாது. என்னால் என்னுடைய ஒரு தீர்மானத்தை மாத்திரமே செய்ய முடியும். உங்களுக்குத் தேவையான காரியங்கள் உங்களுக்கு அளிக்கப்படாமல் மறுக்கப் படுகின்றன என்று நான் நினைக்கின்றேன். நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியும். இலட்சக் கணக்கான மற்றும் கோடிக்கணக்கான டாலர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்புவதைக் காட்டிலும் அப்பணமானது செவ்விந்தியர் களாகிய உங்களுடைய நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். சரியானது. சரியானது. முற்றிலும் சரியானதே. என் இருதயம் எப்போதும் உங்களுக்காகவே இருக்கின்றது. சிறிது காலத்திற்கு முன்னர் நான் சான் கார்லோவில் உள்ள சிகப்பு இந்தியருக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தேன். அங்கே பரிசுத்த ஆவியானவர் அசைந்தார். அந்த ஏழை மக்களை சுகப்படுத்தினார். 144ஐயா, நான் உங்களுக்கு ஒரு அந்நியன். உங்களை எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையில் உங்களை நான் கண்டதே யில்லை. நாம் முற்றிலும் ஒருவரையொருவர் அறியாதவர்கள் ஆவோம். அது சரி. நாம் இரு தேசியத் தன்மைகள் கொண்டவர். நான் ஆங்கிலோ - சாக்ஸன்; நீங்கள் ஒரு இந்தியர். என் தாயிலிருந்து வந்த இந்திய இரத்தம் சிறிது எனக்குள்ளாக இருக்கின்றது. என் பாட்டி ஒரு செரோக்கி, (Cherokee) ஆவார். (செரோக்கி இனமானது அமெரிக்க சிகப்பு இந்தியர்களின் பழங்குடியினர் இனங்களில் ஒன்றாகும் - தமிழாக்கியோன்.) அதைக்குறித்து நான் பெருமை கொள்கிறேன். அது சரியே. என் சகோதரனாகிய உங்களுக்கு நான் எந்த ஒரு தீங்கையும் புரியமாட்டேன். நான் உங்களுக்கு உதவி மாத்திரமே செய்வேன். இந்திய பழங்குடியானது எப்படிப்பட்டதாக இருந்த தென்றால், அவர்கள் மத்தியிலே ஒருவன் இருந்து விலங்குகள் நிறைந்த பகுதி எதுவென்றும் வேட்டையாடுவதற்கான சிறந்த பகுதி எது என்றும் அவர்களுக்கு முன்னுரைத்தால், அவன் அவர்கள் மத்தியிலே ஒரு தீர்க்கதரிசியாக இருப்பான். அவர்கள் அப்படித் தான். ஆனால் அவன் தவறாக ஒன்றை முன்னுரைப்பானானால், அவனுடைய தவறான முன்னுரைத்தலிற்காக அவன் சாக வேண்டியதாக இருந்தது. அப்படித்தான் அவன் செய்ய வேண்டும். அது சரி. அந்த சிகப்பு இந்தியர்களிடம் இதுவல்ல அதுவல்ல போன்ற நழுவல்கள் என்பது கிடையாது. 145தேவன் தேவனாக இருப்பாரானால் . . . தேசமானது உங்களுக்கு அநியாயம் செய்திருக்கும். ஆனால் தேவன் உங்களுக்கு அப்படியான ஒன்றைச் செய்யவேமாட்டார். அவர் உங்களுக்காக தம்முடைய குமாரனை அனுப்பினார். என்ன நடந்தது என்று நான் இப்பொழுது கண்டேன். நீங்கள் மருத்துவமனையிலிருந்து இப்பொழுது தான் வெளியே வந்துள்ளீர்கள். (சகோதரன் “அது உண்மை ” என்கின்றார் - ஆசி.) ஆம், ஜெபிக்கப்படும்படிக்கு நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். உங்களுக்கு வயிற்றுப் பிரச்சனை உள்ளது. அதற்காக அவர்கள் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப் போகின்றனர். [“ஆமாம்.”). அது கர்த்தர் உரைக்கிறதாவது. இங்கே வாருங்கள். பரலோகப் பிதாவே, இந்த வயிற்றுக் கோளாறை நான் கடிந்து கொள்கிறேன். 146சாத்தானே, நீ மருத்துவரிடமிருந்து மறைந்து கொண்டாய், ஆனால் தேவனிடமிருந்து உன்னை மறைத்துக் கொள்ள முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவரை விட்டு வெளியே வா. ஆமென். அதைக் குறித்து கவலைப்படாதீர்கள். நீங்கள் சென்று சுகமாயிருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி.] நீங்கள் நலமா? சரியாக இந்த இடத்தில் முன் வரிசையில் அமர்ந்துள்ள அந்த இளம்பெண்ணின் பின்னால் அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் சிறு நீர்ப்பை கோளாறுடன் உள்ள அந்த சிறிய பெண், பெண்ணே கர்த்தராகிய இயேசு உன்னை சுகப்படுத்தப் போகின்றார் என்று விசுவாசிக்கின்றாயா? [அந்த சகோதரி “அவர் சுகப்படுத்தினார் என்று நான் விசுவாசிக்கின்றேன்” என்று கூறுகிறார்கள் - ஆசி.) - அது அவ்வளவு தான். அவள் யாரைத் தொட்டாள் என்று எனக்குக் கூறுங்கள். அவள் என்னிடமிருந்து இருபது அடி தூரத்தில் இருக்கின்றாள். நம்முடைய பலவீனங்களுக்காக தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியரை அவள் தொட்டாள், அது சரியே. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - 147பெண்ணே , நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சகோதரி “ஆம்” என்கிறார்கள் - ஆசி.] உங்களுடைய பிரச்சனை என்னவென்று தேவனால் என்னிடம் கூறமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆம், நான் விசுவாசிக்கிறேன்.”] பிரச்சனையானது உங்களுக்கு இல்லை. உங்கள் சகோதரி தான் பிரச்சனையில் இருக்கின்றாள். (“அது சரி.”] அவளுக்கு புற்று நோய் உள்ளது. [“ஆம்”] அது சரி. நீங்கள்... விசுவாசியுங்கள், சந்தேகப்படாதீர்கள். அவளுக்காக நீங்கள் கொண்டு வந்துள்ள கைக்குட்டையை எடுத்துச் சென்று அவளின் மீது வைத்து விடுங்கள். உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசியுங்கள். அவள் அதிலிருந்து வெளியே வந்துவிடுவாள். [“ஓ இயேசுவே!”] உங்கள் முழு இருதயத்துடனே நீங்கள் விசுவாசிப்பீர்கள். [“இயேசுவே, உமக்கு நன்றி.”] முன்னே செல்லுங்கள். அஹ் 148விசுவாசம் கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி.) அது பிரசங்க மேடையை விட்டு சென்றது. அது ஜனக்கூட்டத்தில் இருக்கின்றது. அது அங்கே பின்புறத்தில் உட்கார்ந்துக் கொண்டிருக் கின்ற ஒரு சிறு, மெலிந்த பெண்ணாகும், அவளுக்கு காச நோய் உள்ளது. அவள் அங்கே பின்னாலே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கின்றாள். தேவன் உன்னைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? அங்கே உட்கார்ந்து நேராக நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த சிறு பெண், அங்கே பின்னாலே உட்கார்ந்துள்ளவள். உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அங்கே பின்னால் இருக்கும் பெண்ணே , திரும்பிப் பார்க்கும் அந்த மனிதனின் பின்னால் இருக்கும் பெண். உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசி. ஆம், சிறு குட்டை தலை மயிர் கொண்ட பெண். அது சரி. அதுதான். அதை விசுவாசி, அது முடிவு பெற்று விட்டது. அங்கே பின்பாகத்தில், பின்புறத்தில் உள்ள அவள் தொட்டது என்ன? நீங்கள் அதை விசுவாசிக்கும்படிக்கு நான் உங்களுக்கு சவாலிடுகிறேன். 149பெண்ணே, உங்களைக் குறித்தென்ன? நீங்கள் இங்கே நின்று கொண்டிருப்பதனால் உங்கள் முதுகு கோளாறு உங்களை விட்டு சென்று விட்டது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம் அப்படியென்றால், முன்னே செல்லுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவு தான். (சகோதரி. “இயேசுவே, உமக்கு நன்றி” என்று கூறுகிறார்கள் - ஆசி.) உங்களுக்குள் இருக்கின்ற எல்லாவற்றைக் கொண்டும் அதை விசுவாசியுங்கள். நீங்களும் அதே கோளாறைத் தான் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களானால், “கர்த்தாவே உமக்கு நன்றி. அதைச் சுகப்படுத்தும்” என்று கூறி தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசியுங்கள். மூட்டு வலியினால் நீங்கள் முடமாகப் போகிறீர்கள் என்று பயப்படுகிறீர்கள். அப்படித்தானே? ஆகவே நீங்கள் விசுவாசிப்பீர் களானால், உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள், முன்னே செல்லுங்கள். உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசியுங்கள், சுகமாகுங்கள். விசுவாசியுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அது மாத்திரமே. 150நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி.) அங்கே இருக்கின்ற மக்களாகிய உங்களைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசத்தில் இருந்து, விசுவாசிக்கிறீர்களா? அங்கே நின்று இயேசு உங்களை சுகமாக்கினார் என்று நான் உங்களிடமாக கூறுவேனானால், அதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? (சகோதரி “ஆமென்” என்கின்றார்கள் - ஆசி.) உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசித்து, தொடர்ந்து முன்னே நடந்து செல்ல ஆரம்பியுங்கள், பாருங்கள். நீங்கள் வீடு சென்று உங்கள் இரவு ஆகாரத்தை சாப்பிட விரும்புகிறீர்களா? அந்த பழைய கடும் வயிற்றுக் கோளாறானது உங்களை விட்டுச் சென்று விட்டதென்று விசுவாசிக்கிறீர்களா? புறப்பட்டுச் செல்லுங்கள். நீங்கள் விரும்பும் எதை வேண்டு மானாலும் சாப்பிடுங்கள். விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.] 151அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்ணைக் குறித்தென்ன, அவள் அந்த சிறு . . . க்காக ஜெபித்துக் கொண்டிருக்கின்றாள். அந்த குழந்தைக்கு இரத்தம் சம்பந்தமான கோளாறு உள்ளதா? தேவன் அந்த குழந்தையை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? சரி, நீ அதைப் பெற்றுக் கொள்ளலாம். அங்கே சரியாக - சரியாக உங்களுக்கு அடுத்ததாக இருக்கும் பெண்ணை அந்த ஒளி தொட்டது. அவள் அங்கே உட்கார்ந்து நரம்புத் தளர்ச்சிக்காக ஜெபித்துக் கொண்டிருக் கின்றாள், அது சரியே, உங்களுக்கு அடுத்ததாக இருப்பவர். மேலும், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனும் உனக்கு இருக்கின்றார். அது சரி, மோசமான கண் பிரச்சனையைக் கொண்ட ஒரு தாயும் உனக்கு இருக்கின்றாள். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள், தேவன் அவர்களை சுகமாக்குவார். ஆமென். நீங்கள் அவரை விசுவாசிக்கின்றீர்களா? [சபையார் “ஆமென்” என்று கூறி களிகூருகின்றனர் - ஆசி.) 152இங்கே சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் உங்களைக் குறித்தென்ன? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சற்று முன்னர் அதைக் கூறின உங்கள் மகன் அங்கே உட்கார்ந்துள்ளார். அது உங்கள் மகனாகும். உங்கள் முகத்தில் புற்று நோயைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் காது கேட்கும் திறன் மங்கி சத்தம் கேட்பது உங்களுக்கு கடினமான ஒன்றாகும். நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற விரும்பி நாடுகிறீர்கள். அது சரி. உங்கள் முழு இருதயத்தோடும் அதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால்! மகனே, நீயும் அவருக்காக விசுவாசிப்பாயா? உன் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிப்பாயா? அதை அவரின் காதிற்கருகே சென்று அவருக்குக்கூறு. உன் கரத்தை அவரின் மீது வை, அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்வாராக. 153இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாத வராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் களிகூருகின்றனர் - ஆசி.] அந்த மேசியா, தேவனுடைய மகத்தான மேசியா தம்முடைய மக்களின் மத்தியில் அசைவாடுகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார் களிகூருகின்றனர் - ஆசி.) எல்லாவற்றையும் விட்டு விட்டு அவரை பின்பற்ற நீங்கள் விரும்புகிறீர்களா? [சபையார் களிகூருகின்றனர் - ஆசி.) அப்படி யென்றால், உங்கள் கரத்தை அவரிடமாக உயர்த்தி, “நான் அவரைப் பின்பற்றுவேன். நான் அவரைப் பின்பற்றுவேன். நான் அவரை விசுவாசிப்பேன். நான் என் வாழ்க்கையை நேர்ப் படுத்திக் கொள்வேன். நான் அவருக்காக வேலை செய்வேன்” என்று கூறுங்கள். தேவனே இரக்கமாயிரும்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எத்தனை விசுவாசிகள் இங்கே இப்பொழுது இருக்கின்றீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். (சபையார் களிகூருகின்றனர்- ஆசி.] எத்தனைப் பேர் அவரிடமாக நெருங்கிச் செல்ல விரும்புகிறீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். [சபையார் களிகூருகின்றனர்-ஆசி.] அவரிடமாக நெருங்கி செல்ல விரும்புகின்ற மற்றும் அவரை இப்பொழுதே ஏற்றுக் கொள்ள விரும்புகிறவர்களே, அவர் சரியாக இங்கே இருக்கின்றார். அது அவருடைய பிரசன்னமாகும். அங்கே பின்னால் சிறுநீர்ப்பையை சுற்றி இருக்கும் பிராஸ்டேட் சுரப்பி கோளாறைக் கொண்டிருக்கின்ற அந்த மனிதன், சகோதரனே, அது முடிந்து விட்டது. இந்தப் பொழுதிலேயே தேவன் உங்களை சுகமாக்கிவிட்டார். என்ன, அது எல்லாவிடத்திலும் அந்த விதமாகச் சென்று கொண்டேயிருக்கின்றது, அந்த ஒளியானது கட்டடம் முழுவதுமாக சுழன்றுக்கொண்டே சென்றுக் கொண்டிருக்கின்றது. சரியாக எந்த ஒரு காரியமானாலும் இப்பொழுது சம்பவிக்கும். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், இன்னும் ஒரு பெந்தேகொஸ்தேயை நம்மால் கொண்டிருக்க முடியும். (சபையார் களிகூருகின்றனர் - ஆசி.) நீங்கள் ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள். தேவனிடமாக உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அவருக்கு துதியை செலுத்துங்கள். (சபையார் மிகவுமாக களிகூர்ந்து ஜெபிக்கின்றனர் - ஆசி). கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. நாங்கள் உம்மை துதிக்கின்றோம், பிதாவே, ஏனென்றால் நீர்தான் எங்கள் இரட்சகரும் எங்கள் தேவனுமாக இருக்கின்றீர். நீர் இங்கே இருக்கின்றீர். நீர்தாமே அந்த உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையாவீர். அது அவ்விதம் தான் என்று நீர் அதை நிரூபித்திருக்கின்றீர். நீர்தாமே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற தேவன் மேசியா. எந்த ஒரு தவறுதலும் இல்லாமல், எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நீர் தாமே அதே கர்த்தராகிய இயேசுவாக இருக்கின்றீர். அவருடைய பரிசுத்த நாமத்திற்கு துதியுண்டாவதாக! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? “ஆமென்” என்று கூறுங்கள். (சபையார்“ஆமென்” என்று களி கூருகிறார்கள் - ஆசி.] இப்பொழுது உங்களில் எத்தனை பேர் விசுவாசிகளாவீர்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள் (சபையார் “ஆமென் என்று கூருகின்றனர் - ஆசி.) இப்பொழுது, இயேசு தாமே இதைக் கூறியுள்ளார், ”விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். வியாதியஸ்தர் மேல் தங்கள் கைகளை வைப்பார்களானால், அப்பொழுது அவர்கள் சொஸ்த மாவார்கள்“. நான் ஒருவன் மாத்திரமே பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளவன் அல்ல. நீங்களும் கூட அதைக் கொண்டிருக் கிறீர்களே. நான் எப்படி ஒரு விசுவாசியாக உள்ளேனோ அதே போலவே நீங்கள் ஒரு விசுவாசியாவீர்கள். இப்பொழுது உங்கள் சந்தேகத்தை எல்லாம் விட்டுவிடுங்கள். யாராவது ஒருவரின் மீது உங்கள் கையை வைத்து, தம்முடைய வார்த்தையின்படியே தேவன் அந்த நபரை சுகப்படுத்தப் போகின்றார் என்று விசுவாசியுங்கள். அவர்தாமே இந்த விதமான ஒன்றை .... ஒரு நபரின் மீது உங்கள் கையை வையுங்கள். அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பியுங்கள், “கர்த்தாவே அந்த நபரை சுகப்படுத்தும்” என்று கூறுங்கள். ஜெபியுங்கள், பிறகு என்ன நடக்கிறதென்று பாருங்கள். நீங்கள் ஒரு விசுவாசி. (சபையார் களிகூர்ந்து ஜெபிக்கின்றனர் - ஆசி.) சர்வ வல்லமையுள்ள தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிசாசை நாங்கள் தோற்கடித்தோம். நாங்கள் அவனைக் கடிந்து கொண்டு, அவனிடமிருந்து வல்லமையை கிழித்தெறிந்து விட்டோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தழும்புகளாலே நாங்கள் எல்லோரும் குணமாக்கப்பட்டு விட்டோம். [சபையார் தொடர்ந்து களிகூர்ந்து ஜெபிக்கின்றனர் - ஆசி]